கீறல் TV

கீறல் TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கீறல் TV, TV Network, Nintavur.

இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் நான்- கண்ணீருடன் வனிதா விஜயகுமார்சினிமாவில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார் ப...
12/07/2025

இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் நான்- கண்ணீருடன் வனிதா விஜயகுமார்

சினிமாவில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

வனிதா இயக்கி அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்திருக்கிறார்.

இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் நான்- கண்ணீருடன் வனிதா விஜயகுமார்

இந்நிலையில், வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

வனிதா நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில், தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் நடித்த படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு
நடிகை வனிதா விஜயகுமார் நடித்த படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு
இளையராஜா இசையமைப்பில் வெளியான "ராத்திரி சிவராத்திரி" பாடலை வனிதா இயக்கியுள்ள படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இந்த நடவடிக்கைக்கு வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க விளக்கம் கொடுத்துள்ளார்.

இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் நான்- கண்ணீருடன் வனிதா விஜயகுமார் | Ilaiyaraaja Case Vanitha Vijayakumar Explains Tear

இளையராஜாவின் குடும்பத்தில் நான் மருமகளாக வேண்டியவள் என்று வனிதா கூறியதுடன், இளையராஜாவை அப்பா என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

மேலும், இளையராஜா குடும்பத்தில் தானும் ஒருத்தி என்றும் வனிதா குறிப்பிட்டார். இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று, இந்தப் பாடல் குறித்தும் தெரிவித்தோம்.

மேலும் தங்களுடைய படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடலைப் பயன்படுத்த Sony இசை நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா; அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு ...
12/07/2025

NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா; அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.

தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளமை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று இரவு (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

வேகமாக உடனுக்குடன் செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் எழுதும் ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோத செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் எழுதி, ஆய்வு கட்டுரைகள் எழுதி வந்த இவர் மீதான தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சமீபத்தைய நாட்களில் செயற்பாட்டு ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக் வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

-ஊடகப் பிரிவு-

இலங்கை வருகிறார் சவூதி நிதியத்தின்பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட்.!(எஸ். சினீஸ் கான்)அபிவிருத்திக்கான சவூத...
12/07/2025

இலங்கை வருகிறார் சவூதி நிதியத்தின்
பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட்.!

(எஸ். சினீஸ் கான்)

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

சவூதி அரேபியாவின் 28 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத் தொகையில் நிர்மாணிக்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே இவர் இலங்கை வருகிறார்.

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடனான இந்த நிகழ்வு 14ஆம் திகதி திங்கட்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி மற்றும் ஆளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விலும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஊடாக வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய மற்றும் மாகுந்தர ஆகிய வளாகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

மேய்ச்சல் தரைக்கான இடத்தை கால் நடை உரிமையாளர்களுக்கு வழங்குங்கள்; பாராளுமன்றில் வாஸித் MPகால் நடை உரிமையாளர்களுக்கான மேய...
12/07/2025

மேய்ச்சல் தரைக்கான இடத்தை கால் நடை உரிமையாளர்களுக்கு வழங்குங்கள்; பாராளுமன்றில் வாஸித் MP

கால் நடை உரிமையாளர்களுக்கான மேய்ச்சல் தரையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் (11) பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றினார்.

மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பிற்குக்கான இயற்கை தீவினத்தின் தேவை மற்றும் அம்பாறை மாவட்ட பொத்துவில், பாணமை, கோமாரி, லகுகல மற்றும் திருக்கோவில் போன்ற இடங்களிலுள்ள மேய்ச்சல் தரைக்கு ரொட்டை குளத்திற்கு அண்மையில் உள்ள கும்புக்கோட்டை எனுமிடத்தினை கிழக்கு மாகாண சபை ஏற்பாடு செய்தும் அவ்விடயம் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன.

1993 ஆம் ஆண்டு பொத்துவில் பிரதேச செயலகம் ஊடாக கும்புக்கோட்டை பிரதேசம்
மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற விடயத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் வாசித் சுட்டிக் காட்டினார்.

இதுதொடர்பில் அவர் உரையாற்றுகையில்;
மேய்ச்சல் தரையின் தேவைப்பாடும், பாலினை நுகர்வதற்கான உள்ளூர் நுகர்வுச் சந்தைகளின் தேவைபாடு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய அவர், தேசியளவில் பாலுற்பத்தியில் 03 ஆம் இடத்தில் இருக்கும் கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையிலும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதோடு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தேசியளவில் பாலுற்பத்தியால் முதன்மை நிலைக்கு எடுத்துசெல்ல முடியும் என்பது பற்றியும் சுட்டிக்காட்டினார்.

அதுமாதிரி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, வருமை ஒழிப்பு மற்றும் போசனை குறைபாடினை நிவர்த்தி செய்தல் போன்ற சமூக மாற்றங்களையும் கட்டியெழுப்ப முடியும்.

இவ்விடயத்தை மிக விரைவில் செயற்படுத்துவதன் மூலம் எமது மக்களும், கிழக்கு மாகாணமும், எமது நாடும் சிறந்த முன்னேற்றப் பாதையை அடையும். அதற்கு இயலுமான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடக பிரிவு

Dr:MS.அப்துல் வாஸித்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,
பொத்துவில்.

🔵 அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு பயிற்சி!✍️ தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்ட அன...
12/07/2025

🔵 அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு பயிற்சி!

✍️ தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு தொடர்பான கற்கை நெறியும் அக்கரைப்பற்று நீர் பூங்காவில் பயிற்சி நெறியும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு வளவாளராக கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரி கே.எம்.றுமி, அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரி ஜே.றிஸ்வான் ஆகியோரினால் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயை கட்டுப்படுத்தும் கருவிகளை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நறுவிலிக்குளம் விபத்தில் உயிரிழந்த மகனின் உடலை, படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் தந்தை இறுதியாக பார்க்கும் புக...
12/07/2025

மன்னார் நறுவிலிக்குளம் விபத்தில் உயிரிழந்த மகனின் உடலை, படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நறுவிலிக்குளம் விபத்தில் தந்தை , தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர். காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப...
12/07/2025

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அக்கரைப்பற்று ACMC யின் மத்தியகுழுவினை நேற்று முன்தினம் (10) சந்தித்து கலந்துரையாடிய போது..!

⚪ ஜனாஸா அறிவித்தல்!ஒலுவில் 5ம் பிரிவை சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் மஜீத் செயினுலாப்தீன் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார். இன்ன...
12/07/2025

⚪ ஜனாஸா அறிவித்தல்!

ஒலுவில் 5ம் பிரிவை சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் மஜீத் செயினுலாப்தீன் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

அன்னார், அப்துல் மஜீத் லெப்பை தம்பதியினரின் மகனும் ஹாஜியாணி ஒக்காசி லெப்பை கதீஜா உம்மா என்பவரின் கணவரும் கலிலுர் ரஹ்மான் (அதிபர்) இக்பால் ( CTB போமன்) அப்துல் ரஹ்மான் (சமூர்த்தி கணக்காய்வாளர்) மர்ஹூம் ரம்சீன், முஜாஹித் (மின் அத்தியச்சகர் இலங்கை மின்சார சபை) , இம்ராஸ், சித்தி முனவ்வரா ,இஸ்மத் பானு ஆகியோரின் தந்தையும்

அப்துல் நியாஸ் (AOGN) ,அபுல் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம்களான கலீபா உம்மா, ஹாஜியாணி குழந்தை உம்மா ,யாசின் பாவா, கமர் ஹாஜியார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்:-
அன்னாரின் மகன்
அப்துல் ரஹ்மான்(கணக்காய்வாளர்)

முனவ்வறா கல்லூரி மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி  மாணவன் மன்சப் அகமட்  கிழக்கு மா...
12/07/2025

முனவ்வறா கல்லூரி மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவன் மன்சப் அகமட் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான kata போட்டியில் 3ம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளார்.

கீறல் TV குடும்பம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறது

நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம்.கீறல் TV ...
12/07/2025

நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம்.

கீறல் TV குடும்பம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர். தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ...
12/07/2025

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்.

தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான காடயர் குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளனர்.

இரவு (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக உடனுக்குடன் செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் எழுதும் ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோத செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் எழுதி, ஆய்வு கட்டுரைகள் எழுதி வந்த இவர் மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சமீபத்தைய நாட்களில் செயற்பாட்டு ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிந்தவூர் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவரானார் பரீட் அல் பனூஸ் முஹம்மட்…தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதி...
12/07/2025

நிந்தவூர் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவரானார் பரீட் அல் பனூஸ் முஹம்மட்…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் நிந்தவூர் பிரதேச சம்மேளனத்தின் தலைவராக பரீட் அல் பனூஸ் முஹம்மட் இன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் தண்ணார்வம் கொண்டு சமூக நல செயற்பாடுகளில் ஈடுபடக் கூடியவராக தன்னை அடையாளப்படுத்தியவர், கடந்த காலங்களில் எம்மோடு இணைந்து அரசியல் செயற்பாடுகளிலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இப்பதவியினூடாக இன்னும் பல சமூக நலப் பணிகளை திறம்பட செய்ய வேண்டுமென வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

கீறல் TV தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறது

தகவல்
அஷ்ரப் தாஹிர்
நாடாளுமன்ற உறுப்பினரின்
ஊடகப் பிரிவு

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when கீறல் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category