Citizen Media Network

Citizen Media Network நம் சமூகத்திற்கான பயணம்
நடுநிலையான பாதை
(1)

உலகில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு அறியப்ப்டுத்துவதோடு ,மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும்வரைபோராடும் மக்கள் வேந்தன் உங்கள் #சிடிஸின்_ மீடியா

 #இளவரசர் வருகைக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயக்கம் ஏற்பட்டு தரையில் விழும் சிப்பாயின் புகைப்படம் இது.வலி...
20/07/2025

#இளவரசர் வருகைக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயக்கம் ஏற்பட்டு தரையில் விழும் சிப்பாயின் புகைப்படம் இது.

வலியால் துடித்து அனைவர் கண்முன்பாகவும் அந்த வீரர் மரணிக்கிறார். ஆனாலும்கூட யாரும் அவரை அணுகத் துணியவில்லை. அணுகவும் கூடாது. அப்படி அணுகினால் பெரும் பிழை.

அதேவேளை…. அன்றொருநாள் தொலைதூர தேசத்தில், அரேபிய பாலைவனத்தில், ஒரு கிராமவாசி இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண வருகிறார். வந்தவர் சூழ்நிலையின் பிரமிப்பையும், நபிகளாரின் முகத்தில் தெரியும் பிரகாசத்தையும் கண்டு நடுங்கினார்.

கருணை நிறைந்த கண்களால் அவரைப் பார்த்த நபிகளார், மலைகளை அசைக்கக்கூடிய வார்த்தைகளைச் சொன்னார்கள்:

"நிதானமாக இருங்கள். நான் அரசன் அல்ல. மக்காவில் உலர்ந்த இறைச்சித் துண்டுகளை சாப்பிட்டு வாழ்ந்த ஒரு சாதாரண குறைஷிப் பெண்ணின் மகன்தான் நான்”. (அபூதாவூத்)

மனிதாபிமானம் கற்றுத் தந்த மகத்தான மாமனிதர் (ஸல்) அவர்கள்.

✍️ நூஹ் மஹ்ழரி

 #20ஆண்டுகள் கோமாவில் இருந்து வந்த இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் (தூங்கும் இளவரசர...
19/07/2025

#20ஆண்டுகள் கோமாவில் இருந்து வந்த இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் (தூங்கும் இளவரசர்) தற்போது காலமாகியுள்ளதாக சவுதி சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2005 இல் ஒரு கார் விபத்தில் ஏற்ப்பட்ட பாதிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 36 வயது பூர்த்தியான நிலையில் இன்று 19-07-2025 காலமானார்.

அல்லாஹ் , அவர் மீது கருணை காட்டுவானாக, அவரை மன்னிப்பானாக...🤲

 #பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கிட்டில் காத்தான்குடி வாவிக்கரை வீதி புனரமைப்பு..!மட்டக்களப்பு மாவட்ட...
19/07/2025

#பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கிட்டில் காத்தான்குடி வாவிக்கரை வீதி புனரமைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வருட பண்முகப்படுத்தப்பட்ட நிதியில்
14 பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு கிடைத்த சுமார் 3 மில்லியனுக்கான வேலைத்திட்டம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் முன்மொழியப்பட்டு, பிரதேச அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "வாவிக்கரை வீதியினை முழுமைப்படுத்தும்" குறித்த வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் தலைமையில் நேற்று 18.07.2025 காத்தான்குடி வாவிக்கரை சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம்.றுஸ்வின் LL.B , மீனவர் சங்க தலைவர் எம்.ஜெளபர், ஈமான் பள்ளிவாயல் செயலாளர் பதுர்தீன் ஹாஜியார், வட்டார அபிவிருத்தி குழு தலைவர் எம்.றிஸ்வி மற்றும் செயலாளர் அல் ஹாஜ் எம்.ஐ.எம்.ஜெளபர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

 #சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும்; முன்னாள் பா. உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை நிறுத்த சட்டமூலம்!முன்னா...
19/07/2025

#சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும்; முன்னாள் பா. உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை நிறுத்த சட்டமூலம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு நேற்று (18) சென்றிருந்த அமைச்சர் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

அதன் பின்னர் நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

நாம் சட்ட விவகாரத்தில் தலையிடவில்லை. சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும்.

அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் கட்டம், கட்டமாக நிறைவேற்றுவோம். இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு.

அதேவேளை, வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்த சமூக மேம்பாட்டு திட்டத்தை வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என மேலும் தெரிவித்தார்.

 #அநுராதபுர நகர வாவியில் இருந்து ஆறுகளை அளவிடும் செயற்பாடு ஆரம்பம்
19/07/2025

#அநுராதபுர நகர வாவியில் இருந்து ஆறுகளை அளவிடும் செயற்பாடு ஆரம்பம்

 #விமானக் குண்டுவீச்சில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தனது குடும்பத்தில் உயிர் பிழைத்த, ஒரே குழந்தை அடி ஹபீப் (9 மாத...
19/07/2025

#விமானக் குண்டுவீச்சில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தனது குடும்பத்தில் உயிர் பிழைத்த, ஒரே குழந்தை அடி ஹபீப் (9 மாதங்கள்). ஊட்டச்சத்து குறைபாட்டினால், கடுமையாக அவதிப்படுகிறான். படங்களை பார்க்கையிலேயே நமது கண்கள் கசிகிறது. மனிதாபிமானத்துடன் அவர்களுக்காக பிரார்த்திப்போம், அவர்கள் குறித்து பேசுவோம், எழுதுவோம், பகிர்வோம்...

 #திருச்சியின் ரூ.237 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட AC பஸ் நிலையம்
19/07/2025

#திருச்சியின் ரூ.237 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட AC பஸ் நிலையம்

 #யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு!இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்க...
19/07/2025

#யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு!

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஸ்ரீனிவாஸ், தனது மகள் சரண்ஜாவுடன் யாழில் ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

”யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்ஜா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து பாடல்களை பாடினார்கள்.

மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது.

தற்காலத்தில் திரையுலகில் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. முன்னைய கால படங்களில் ஒவ்வொரு படங்களிலும் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். தற்கால படங்களில் அவ்வாறு இல்லை.

ஆனாலும், தற்போது இசை மேடைகள் தாரளமாக பாடகர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. அதனால் பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதனூடாக பாடகர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை தாண்டி இசை மேடைகளில் நேரடியாக பாடி இரசிகர்களை மகிழ்விப்பது ஒரு மன திருப்தியை பாடகர்களுக்கு தருகிறது.

யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஊடாக அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன.

இருந்தாலும் தென்னிந்தியாவில் உள்ள வாய்ப்புகள் வசதிகள் போன்று இங்கு இல்லை. அதனால் இசைத்துறை சார்ந்து கற்பவர்களுக்கு வகுப்புகள் பயற்சிகள் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஏற்பாடுகளை செய்தால் நிச்சயமாக எனது ஆதரவை வழங்குவேன் என மேலும் தெரிவித்தார்.

 #வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளரும...
19/07/2025

#வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று (19) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 #மருதமுனை கமு/கமு அல் - மனார் மத்திய கல்லூரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும...
19/07/2025

#மருதமுனை கமு/கமு அல் - மனார் மத்திய கல்லூரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா அல் - மனார் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (19) பாடசாலை அதிபர்
IL. உபைதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கி கௌரவித்தார்.

19/07/2025

நிந்தவூர் பசில் டெக்ஸ் நிறுவனத்தில் விசேட விலைக்கழிவு

நேரலையாக...

 #மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம்...
19/07/2025

#மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (19) முற்பகல் 10.00 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. மழைக்கு மத்தியிலும் இவர் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

அவ்வேளையில் கடும் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen Media Network:

Share