எழுமின் செய்திகள்

எழுமின் செய்திகள் wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

 #  I நானுஓயா ரதெல்ல தோட்டப் பகுதியில் பாறை விழுந்ததில் 2 ஆடுகள் இறந்த நிலையில் 47 பேர் இடம்பெயர்வு!
23/07/2025

# I நானுஓயா ரதெல்ல தோட்டப் பகுதியில் பாறை விழுந்ததில் 2 ஆடுகள் இறந்த நிலையில் 47 பேர் இடம்பெயர்வு!

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்  கல்விகற்று வரும் நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மரியா மயூரினி9A அதிதிறமை ...
22/07/2025

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்று வரும் நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மரியா மயூரினி
9A அதிதிறமை சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதோடு லோகி மண்ணிலிருந்து முதல் 9A திறமை சித்திகளை பெற்றவராக தனது பெயரினை பதிவு செய்கின்றார்.

இவர் புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளை பெற்றவராவர்.

இவருக்கு எழுமின் செய்திகளின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

📌 வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற அழகான பிஞ்சுத் தேவதை ❤️பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் ...
21/07/2025

📌 வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற அழகான பிஞ்சுத் தேவதை ❤️

பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிவிட்டுச் சென்றுள்ள ஈவிரக்கமற்ற தாய்.

சில மணி நேரங்களாக குளிரில் நடுங்கிய வண்ணம் பசியோடு தன்னந்தனியாக தாயின் அரவணைப்பு இன்றி தேம்பித் தேம்பி அழுத இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.

உயிர் காப்பாற்றப்பட்ட பிறகு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரழகு மிக்க இந்த தேவதை ஊசிக் குழாயில் பால் குடிக்கும் அழகைப் பாருங்கள்....

தாய் தூக்கி எறிந்து விட்டுச் சென்ற இந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தற்போது தாதியர்கள் தாயைப் போல் பராமரித்து வருகிறார்கள்.

பரகஹதெனிய
சிங்கபுர வீதி வயல் வெளியில்
இரண்டு நாட்களுக்கு முன்னர்
கண்டெடுக்கப்பட்ட சிசுவின்
தற்போதைய புகைப்படம்!

இந்த குட்டி தேவதையின்
அழகை பாருங்கள்..🥹❤️

  | ஹட்டன் கல்வி வலையத்துக்குட்பட்ட வட்டவளை லொனக் தமிழ் வித்தியாலய மாணவி செல்வி பரமசிவம் சிவசக்தி 2024 கல்வி பொது தராதர ...
20/07/2025

| ஹட்டன் கல்வி வலையத்துக்குட்பட்ட வட்டவளை லொனக் தமிழ் வித்தியாலய மாணவி செல்வி பரமசிவம் சிவசக்தி 2024 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டு ஏ இரண்டு பி 4 சி ஒரு எஸ் என்ற பெறுபேறுகளை பெற்று தனது பிறந்த இடமான மீனாட்சி தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு பிரதேச மக்கள் பாடசாலை சமூகம் கற்பித்த ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்

கண்டியில் நடைப்பெற்ற மாகாணமட்ட தமிழ் மொழித்தினப்  போட்டியில் நு/தலவாக்கலை த.வி பாடசாலையின் இசைக் குழு பிரிவு 1 இல் மூன்ற...
20/07/2025

கண்டியில் நடைப்பெற்ற மாகாணமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் நு/தலவாக்கலை த.வி பாடசாலையின் இசைக் குழு பிரிவு 1 இல் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

  | மலையக குயில் சினேகா சரிகமப போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தார்.
20/07/2025

| மலையக குயில் சினேகா சரிகமப போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தார்.

  | பொகவந்தலாவ ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம் நட்டார் பாடலில்  மூன்றாம்  இடத்தை பெற்றுக்கொண்டது.அகில இலங்கை தமிழ் மொழி...
20/07/2025

| பொகவந்தலாவ ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம் நட்டார் பாடலில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

அகில இலங்கை தமிழ் மொழி தின மாகாண மட்ட நாட்டார் பாடல் போட்டியில் ஹட்டன் கல்வி வலயத்தின் ஹொலிரோசரி கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் வேன் குடைசாய்ந்து விபத்து.ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியின் மேல் பகுதியில் அமைந்துள்ள கி...
20/07/2025

அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் வேன் குடைசாய்ந்து விபத்து.

ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியின் மேல் பகுதியில் அமைந்துள்ள கிருஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற வேன் ஆலய பாதையில் இருந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  | தோட்டத்திற்கு தனி இளைஞர் கழகம் வேண்டும் – மஸ்கெலியாவில் பிரேரணை முன்வைத்த உதவி தவிசாளர்மஸ்கெலியா பிரதேசசபையின் இன்றை...
19/07/2025

| தோட்டத்திற்கு தனி இளைஞர் கழகம் வேண்டும் – மஸ்கெலியாவில் பிரேரணை முன்வைத்த உதவி தவிசாளர்

மஸ்கெலியா பிரதேசசபையின் இன்றைய அமர்வில், உதவி தவிசாளர் ராஜ் அசோக் அவர்கள், தேசிய இளைஞர் கழகம் தற்போது மேற்கொண்டு வரும் "ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு கழகம்" என்ற நடைமுறை தோட்டபுறங்களுக்கு பொருந்தாதது எனக் குறிப்பிடுகின்ற ஒரு முக்கியமான பிரேரணையை முன்வைத்தார்.

1979ம் ஆண்டு தோட்ட மற்றும் கிராமப்பகுதிகளில் இளைஞர்களின் ஆளுமைகள் மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் மன்றம் நிறுவப்பட்டதைக் குறிப்பிட்ட ராஜ் அசோக், தற்போதைய நடைமுறையை திருத்தி, தோட்டத்திற்கு தனித்தனியாக இளைஞர் கழகம் அமைக்க வேண்டும் என்றார்.

மஸ்கெலியா பிரதேசத்தில் மட்டும் 84 தோட்டபுரங்கள் உள்ள நிலையில், ஒரே கிராம சேவகர் பிரிவின் கீழ் 10 தோட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும், ஒவ்வொரு தோட்டத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருப்பதையும் கூறிய அவர், ஒரே கழகம் மூலம் இளைஞர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது சாத்தியமற்றது என வலியுறுத்தினார்.

இந்த விடயம் மஸ்கெலியாவிற்கு மட்டும் அல்லாது, முழுமலையகத்திற்கே பொதுவான பிரச்சினையாக இருப்பதையும், இதற்கான தீர்வாக முந்தைய அமைப்பை மீளச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், இளைஞர் அலுவல்கள் அமைச்சர், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், தேசிய இளைஞர் மன்றம் ஆகியவற்றிற்கு அதிகாரபூர்வ கடிதம் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

  | லிந்துலை, கிளன்ஈகிள்ஸ் தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12...
18/07/2025

| லிந்துலை, கிளன்ஈகிள்ஸ் தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12, 13 ஆகிய தினங்களில் அமோகமாக நடைபெற்றது! 13ஆம் திகதி மாலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவுடன் போட்டி இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் சில அழகான தருணங்கள் இங்கே! 🏏🏆

18/07/2025

| நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான வழிகாட்டும் செயலமர்வு பொவந்தலாவையில் சிறப்பாக நடைபெற்றது

இன்றைய நாளில், நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் பிரான்ஸ் ஹெலன் அவர்களின் தலைமையில், புதிய உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான சிறப்பான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது.

இச்செயலமர்வு, பொவந்தலாவ மிலாஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், உள்ளுராட்சி சபைகளை எவ்வாறு முறையாக நடத்த வேண்டும், சபை உறுப்பினர்கள் தனது பொறுப்புகளை எவ்வாறு செம்மையாக மற்றும் மக்கள் சேவைக்கு இணையாக ஆற்ற வேண்டும் என்பதன் அவசியத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் விளக்கப்பட்டன.

செயலமர்வின் முக்கிய உரையாற்றியாக, இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. பெருமாள் பிரதீப் அவர்கள் கலந்துகொண்டு, 1987 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 15ஆம் இலக்க உள்ளுராட்சி சபைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இத்தகவல் மற்றும் பயிற்சிகள் புதிய உறுப்பினர்களுக்கு தங்களது பங்களிப்பை திட்டமிட்டும், மக்களுக்கான பணிகளை பலனளிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் அமையக்கூடியதாக இருந்தது.

நோர்வூட் பிரதேச சபையின் புதிய நிர்வாகக் குழுவினருக்கான இந்த செயல் முகாம், அவர்கள் எதிர்கால உள்ளுராட்சி நிர்வாக பணிகளை திறம்பட மேற்கொள்ளும் ஒரு தளமாக அமைந்தது.

- Riya RK -

Address

Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when எழுமின் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுமின் செய்திகள்:

Share