Sato Mansoor

Sato Mansoor தடைகளை தகர்த்தெறிவோம்...

17/03/2022

-அல்ஹம்துலில்லாஹ்-
முஸ்லிம்களின் பூர்வீக காணிகளுக்கெதிராக கிரான் பிரதேச செயலாளரின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையாக்கியுள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சாலபன்சேனைலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக காணிகளுக்கெதிராக கிரான் பிரதேச செயலாளரினால் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பல வருட காலமாக குடியிருந்த நூர்தீன் என்பவருக்கெதிராக கிரான் பிரதேச செயலக செயலாளரினால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் கடந்த 14.03.2022ம் திகதியற்று வழங்கிய கட்டளையில் குறித்த காணி நூர்தீன் அவர்களின் உடமையில் இருக்கின்றது எனவும், சட்ட ரீதியான முறையான ஆவணங்ளை இருக்கின்றது எனவும் கூறி பிரதேச செயலாளரினால் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையாக்கப்பட்டது.

இவ்வாறு எமது பூர்வீக காணிகள் கையகப்படுத்துகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களும் அவருடன் இணைந்து சட்டத்தரணி MHM. றம்ஸீன் அவர்களும் தெரிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22/08/2021

Safshath Muhammadh

மர்ஹூம்_ஷரீப்_அலீ

ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் ஒழுக்க மேம்பாடு தொடர்பில் பேசப்படுகிற போது இவர் பெயரை உச்சரிக்கா உதடுகள் இருப்பதில்லை. மறைந்தும் பலர் மனதில் மறையா இடங்கொண்டவர் இவர்.
#மர்ஹூம்_ஷரீப்_அலீ_ஆசிரியர்

எம். சீ. எச். முஹம்மட் அதிபர் அவர்களது பணிக் காலத்தில் விஞ்ஞான ஆய்வு கூடக் கட்டடம் இவர் பெயர் தாங்கியதாக சூடப்பட்டது. மேலும் அதிபர் அவர்களது காலத்தில் இவரது நினைவாக கிரிக்கெட் தொடர் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Shareef Ali Teacher's Organization) என இன்றளவில் அறியப்படும் விளையாட்டு கழகமும் இவரை நினைவுபடுத்துதாகவே திகழ்கிறது.

(எல்லாம் வல்ல இறைவன் இவரது மண்ணறை வாழ்வை சுவனச் சோலை ஆக்குவானாக!)

Safshath Muhammadh
(புகைப்பட உதவி Mzn Ahamed)
— at Oddamavadi Central College

22/08/2021
கல்குடாவின்/ ஓட்டமாவடியின் ஒரு சர்வதேச அடையாளமென்றாலும் மிகையல்ல ! +வாழ்த்துகள் !Jameel Kalkudah
13/07/2021

கல்குடாவின்/ ஓட்டமாவடியின் ஒரு சர்வதேச அடையாளமென்றாலும் மிகையல்ல ! +வாழ்த்துகள் !
Jameel Kalkudah

Mohammad Ibnu Akram"இலங்கை முஸ்லிம் சமூகம் தேசத்துடன் கலந்து வாழ்தல் என்பதிலிருந்து தேசத்திற்கு பங்களிப்புச் செய்தல் என்...
10/07/2021

Mohammad Ibnu Akram
"இலங்கை முஸ்லிம் சமூகம் தேசத்துடன் கலந்து வாழ்தல் என்பதிலிருந்து தேசத்திற்கு பங்களிப்புச் செய்தல் என்ற தளத்தை நோக்கி நகர வேண்டும்."
- பேராசிரியர் தாரிக் ரமழான் -

Muhammed Nowfasஅநியாயம்; வேரற்ற மரம் போன்றது.நந்தவனத்தை உடையவரும்,அதில் மலர்ந்த மொட்டுவும் இணைந்து பயணித்த முட்கள் நிறைந...
10/07/2021

Muhammed Nowfas

அநியாயம்; வேரற்ற மரம் போன்றது.
நந்தவனத்தை உடையவரும்,அதில் மலர்ந்த மொட்டுவும் இணைந்து பயணித்த முட்கள் நிறைந்த கரடு,முரடான பாதை.
"அவர்களை நோக்கி, அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது.அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்.
விசுவாசிகள் யாவரும் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.என்று (நபியே) கூறுவீராக."
(அல்-குர்ஆன்,09: 51)
“தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?”
(அல்-குர்ஆன்,95:08)
பெருமதிப்புக்குரிய உஸ்தாத் அவர்களே,
மேற்படி வலிமைமிக்க வல்லோனின் உயிரோட்டமான ஆறுதல் வார்த்தைகளையும்,எனது பிரார்த்தனையையும் காணிக்கையாக உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
“இன்னும் அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன;அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்;மேலும் கரையிலும்,கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான்;அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை;பூமியின் (ஆழத்தில்)அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும்,பசுமையானதும்,உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
(அல்-அன்ஆம்:59)
இந்த வசனமே உங்களின் ஒவ்வொரு உரையின் ஆரம்பத்திலும் கம்பீரமாக உச்சரிக்கப்படும்.
ஆக உங்கள் கைது பற்றிய ஞானமும்,தெளிவும் அவனிடம் மட்டுமே உள்ளது.
யா அல்லாஹ்!
‘ஆணியை அடித்துவிட்டு அது உறுதியாக உள்ளதா? என்று அசைத்துப் பார்ப்பது போல,சோதனைகள் மூலம் நீ ஈமானை உரசிப்பார்க்கிறாய்’
என்ற,
பேரறிஞர் முஹம்மத் குதுப் (ரஹ்) அவர்களின் கூற்றுக்கிணங்க;
உஸ்தாதின் ஈமான் பலமுறை உரசப்படுகிறது.
‘செல்வம்....அதை அடைந்து கொண்டவர்கள் செல்வந்தர்களாகி விடுகின்றார்கள்.ஆனால் நளீம் ஹாஜியாரை அது அடைந்தபோது அது அவரை வறியவராக்கிவிட்டது.அவர் அல்லாஹ்விடம் கையேந்தும் ஏழையாகி விட்டார்.செல்வம் எதனையும் சாதிக்காது;தன்னைவிட பெரும் செல்வம் கொண்டவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள்;அல்லாஹ்வின் அருள் வேண்டும்,அவனது நாட்டமும் விருப்பமும் வேண்டும்;இவைகள் இல்லாது போனால் செல்வம் பயனற்றதாகிவிடும் என்பதைப் புரிந்து கொண்டவர் நளீம் ஹாஜியார்.அதனால் செல்வத்தைக் கண்டு அவர் செல்வந்தராகி விடவில்லை.அந்த செல்வத்தை பயனுள்ளதாக மாற்றும் பேரருளாளனின் உதவியை நாடி நிற்கும் ஏழையாகிவிட்டார்.
அவர் கண்ட செல்வம் வேறொன்று.பணத்தால் ஒரு பெருவாழ்வு வாழ்வதை பெறற்கரிய செல்வமாக அவர் கருதவில்லை.அழிந்து போகும் தனது செல்வங்களைப் பசளையாக்கி அவர் வளர்த்தார்.ஒரு இஸ்லாமியப் பூங்கா அதன் மலர்கள் பரப்பும் பிரார்த்தனை மணத்தில் மனம் நெகிழ்ந்து வாழ்வதையே செல்வமாகக் கருதுபவர் நளீம் ஹாஜியார்.
அந்த நந்தவனத்தில் மலர்ந்த ஒரு மொட்டு என்ற பெருமை என்னை மகிழ்விக்கிறது.
எனது உயர்வில் அவரது பங்கு எத்தகையதோ அதேயளவு எனது பிரார்த்தனையில் அந்த மகானுக்கும் பங்குண்டு என்பதை மறவாத ஒரு சேவகனாக என்றுமிருப்பேன்.’
- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-
உஸ்தாத்,
இது நீங்கள் பேருவளை,சீனன்கோட்டை சமூகம் 12.12.1998 அன்று மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார்;நாட்டுக்கும்,
சமூகத்துக்கும் செய்த அளப்பரிய சேவைகளை நினைவுகூறி வெளியிடும் சேவை நலன் பாராட்டு மலரில் சிந்திய முத்துக்கள்.
அந்த மகானுக்காக இன்று நீங்கள் யதார்த்தமாகவே பிரார்த்தனை செய்வீர்கள் ஏனெனில் அவரும் அநியாயமான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அநுபவித்த துன்பியல் இன்னல்களை இன்று நீங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள்.
மர்ஹூம் நளீம் ஹாஜியார் தனது சிறைவாழ்வின் அநுபவத்தைப் பற்றிச் சொல்லும் போது,
நாற்பது நாட்களுக்கு மேலாக நான் தனிமையில் அநுபவிக்கும் இந்தவேதனை எனது சக்தியை அப்படியே பிழிந்தெடுத்து,இப்போது எனது மனோ உறுதியையும் தளரச் செய்ய ஆரம்பித்தது.விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே காதைத்துளைக்கும் பயங்கரமான ஓர் இடிமுழக்கம் கேட்டது.
அந்த இடி நான் இருக்கும் இந்த இடத்தில் விழக்கூடாதா?அப்போதாவது எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை கிடைக்குமே என நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.வெளியே எங்கோ விழுந்த அந்தப் பேரிடியின் அதிர்ச்சியில் எனது விசாரணை நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்த பொருட்கள் எல்லாம் ஆட்டங்கண்டன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடம் இருள்மயமாகியது.அந்த இடத்திலிருந்த கல்லச்சு இயந்திரம் சேதமாகியது.உடனே எனது விசாரணை நிறுத்தப்பட்டு,நான் எனது சிறைக்கூடத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டேன்.
(நன்றி,நூல்;
நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்
பக்கம்:98)
நளீம் ஹாஜியாருக்கு ஏற்பட்ட இந்த சோதனையை நீக்கும்படி அல்லாஹ்விடம் கையேந்தி ஆயிரமாயிரம் உள்ளங்கள் நெஞ்சுருகப் பிரார்த்தித்தன.அந்த தொடரில் பெரியார் ஸெய்யித் அமீன் குத்பி அவர்கள் புனித கஃபாவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.அவர்களை மிக மரியாதையுடன் நெருங்கிய மஸ்ஊத் ஆலிம்,ஸெய்யித் அவர்களே!சகோதரர் நளீம் ஹாஜியை அநியாயமாக குற்றம் சுமத்தி தடுப்புக்காவலில் சிறைவைத்துள்ளார்கள்.
அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று கூறினார்... அந்த பெரியாரின் பார்வை அல்லாஹ்வின் புனித ஆலயமான கஃபதுல்லாஹவை நோக்கித் திரும்பியது.
‘மஸ்ஊத் அப்ஷிர் லி ஹாஜி நளீம்’
நீங்கள் ஹாஜி நளீமுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நற்செய்தியை அறிவியுங்கள் என்றார்கள்.
அல்லாஹ்விடம் அவர்களுக்காக கை உயர்த்திப் பிரார்த்தித்த ஆயிரமாயிரம் தூய்மையான உள்ளங்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரித்தான்.
அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 47ஆவது நாளன்று விசாரணை முடிவில் அவர்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லையென்றும்,
அவர் நிரபராதி எனவும் கூறி நளீம் ஹாஜியார் விடுதலை செய்யப்பட்டார்.இதனை தினகரன் பின்வருமாறு வெளியிட்டது.
‘நளீம் ஹாஜியார் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்.ஒரு சிறு குற்றச்சாட்டுக்கூட குற்றஞ்சாட்ட அவர் மீது இருக்கவில்லை.’
(தினகரன் 31.01.1979)
'கவலைகள் வேண்டாம்,
ரணமான பொழுதில்தான்
உள்ளங்களில் வேட்கைகள்
உதிக்கின்றன.
மழை பொழிவதெல்லாம்,
இருள் சூழ்ந்த மேகத்திலிருந்துதான்.'
- மௌலானா ஜலாலுத்தீன் ரூமி -
நந்தவனத்தை உருவாக்கியவர் எந்த பிரார்த்தனைகளால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை பெற்றாரோ,
அவ்வாறே மொட்டும் அதே பிரார்த்தனைகள் மூலம் விடுதலை பெற வல்லவன் அல்லாஹ் பேருதவி செய்வானாக.
-நௌபாஸ் ஜலால்தீன்-

Muhammed Nowfasஇருவரும் ஒரே Wave length இல் பயணித்த சந்தர்ப்பங்கள்.-நௌபாஸ் ஜலால்தீன்-ஒரு முற்போக்கு ஆய்வாளரின் கருத்து,அ...
10/07/2021

Muhammed Nowfas

இருவரும் ஒரே Wave length இல் பயணித்த சந்தர்ப்பங்கள்.
-நௌபாஸ் ஜலால்தீன்-
ஒரு முற்போக்கு ஆய்வாளரின் கருத்து,அவர் அதனைக் கூறும் அக்காலத்தில் சில போது புரியாமல் போகலாம்.அதற்காக அது தவறாகி விடமாட்டாது.
ஓர் தசாப்தம் தாண்டிய நிலையில் அது எமது காதுகளில் மீண்டும் சரியென பலமாக ஒலிக்கும்.
இப்படித்தான் ஆய்வாளர் ஏ.பீ.எம்.இத்ரீஸின் சில கருத்துக்களை நான் பார்க்கிறேன்.
கப்றுகளை,ஸியாரங்களை நாம் பாதுகாப்போம் எமது நாட்டைப் பொறுத்தவரை அது எமக்கான தொல்பொருள் மூலாதாரமாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.
ஏனெனில்,
‘வரலாறு வேறு,வழிபாடு வேறு.’
எனும் கோட்பாட்டுக்கு ஏற்ப அது வரலாற்றுச் சுவடாக தடம்பதிக்கும்.
இந்தக் கருத்தை நான்,
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகளின் மீதான மீள்வாசிப்பின் போதும்,
ஆய்வாளர் உஸ்தாத் ஏ.பீ.எம.இத்ரீஸின் சிந்தனைகளின் மீதான மீள்வாசிப்பின் போதும் புரிந்து கொண்டேன்.இதில் இருவரும் ஒத்திசைந்து ஒரே Wave length இல் பயணித்திருக்கின்றனர்.
இதனை விரிவாக அறிய;
1-‘இலங்கை முஸ்லிம்கள் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை’
(கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி)
2-‘சோனகத் தேசம்’
(ஏ.பீ.எம்.இத்ரீஸ்)
ஆகிய நூல்களை வாசிக்க முடியும்.
ஆய்வாளர் ஏ.பீ.எம்.இத்ரீஸ்
'இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகள்,ஆளுமைகள்,
நிகழ்வுகள்' (2010)
எனும் அவரது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுக் காட்டும் பின்வரும் கூற்றான,
'இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டையும்,வரலாற்றையும்,
சமூகவியலையும்,மொழியையும் புரிந்து கொண்டவர்களால் தான் இலங்கைக்கான சிந்தனையை முன்வைக்க முடியும் என்பதுதான் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
அரபுலகத்தில் ஏற்கனவே ஓர் ஆட்சியதிகாரம் இருந்து
1924 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது.
அங்கே அடித்தளமுள்ளது.
அதிலிருந்து கட்டியெழுப்புவதற்கான மறுவாசிப்புத்தான் அங்கே தேவைப்படுகிறது.
இலங்கை முஸ்லிம்களின் நிலமை அவ்வாறானதல்ல.அரபு அறிஞர்களின் வாசிப்பு முறை நமக்கு நூறு வீதம் பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது.நம்நாட்டு புலமைவாதிகள்தான் இஸ்லாத்தின் அதிகார பூர்வ கிரந்தங்களை நம் நாட்டின் பல்லினத்தன்மைக்கேற்ப மறுவாசிப்புச் செய்ய வேண்டும் ( மேற்படி நூல் பக்கங்கள், 22-23)
எமது புலமைச் சொத்தான
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
1982 இல் இஸ்லாமிய சிந்தனை
ஏப்ரல்-ஜூன் இதழில் இவ்வாறு எழுதியுள்ளார்.
'இஸ்லாமிய தஃவாவின் பொதுப் பண்புகளை இஸ்லாம் வரையறை செய்துள்ளது.இந்த கட்டுக்கோப்பிற்குட்பட்டு தஃவாவின் அமைப்பும்,பண்பும்,உத்திகளும்,
காலத்தின் தேவைக்கேற்ப,
நாடு,இனங்களின் வரலாறு,
சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றமடையலாம்.இந்த சிந்தனையோடு இஸ்லாத்தின் தஃவா அணுகப்படல் வேண்டும்.
இஸ்லாமிய தஃவாவின் விரிந்த தன்மையையும்,ஆழமான நோக்கையும்,அதன் கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொண்டு இந்த நாட்டின் வரலாறு,சமூக அமைப்பு,நிகழ்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை அனுசரித்து தஃவா முயற்சிகள் மேற்கொள்ளப்படல் அவசியமாகும்.'
இங்கேயும் எமது நாட்டுக்கான தஃவா முறைமைகள் விடயத்தில் இருவரும் ஒரே Wave length இலிருந்தே சிந்துத்துள்ளார்கள்.
இவர்கள் இருவரது சிந்தனைப் பாங்குகள் முரண்பட்டு,முட்டி மோதிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.
இருந்தாலும்,
‘வேற்றுமையில் ஒற்றுமை’,
‘முரண்பாட்டில் உடன்பாடு’
எனும் கொள்கைக்கு ஏற்ப அதனைத் தவிர்த்துள்ளேன்.
அல்ஹம்து லில்லாஹ்
அவனே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

10/07/2021

Muhammed Nowfas

தோமஸ் ஹொப்ஸ் இன் அரசியல் சிந்தனை,
இமாம் பாராபியின் அரசியல் சிந்தனையோடு நீந்திச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

அரசின் தோற்றம் பற்றி பல கொள்கைகள் உருவாகியது.
1-அரசு பற்றிய தெய்வீக உரிமைக் கொள்கை
2-அரசு பற்றிய பரிணாம வளர்ச்சிக் கொள்கை
3-அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கொள்கை
4-அரசு பற்றிய தாராண்மைக் கொள்கை
5-அரசு பற்றிய சோஸலிசக் கொள்கை
6-அரசு பற்றிய பாஸிசக் கொள்கை
என வகைப்படுத்துகின்றனர்.

இதில்,
17ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்த கோட்பாட்டாளர்களில்
முதன்மையானவரான,தோமஸ் ஹொப்ஸ் (கி.பி.1588-1679) என்பவர் தான் எழுதிய ‘லெவியதான்’ என்ற நூலில் தனது அரசியல் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இவர் மனிதர்கள் மனிதர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தினூடாகவே அரசு உருவானது என்று கூறுகின்றார்.

இந்தக் கருத்தை நியாயப்படுத்துவதற்காக மனித சமுதாயத்தை இரண்டாகப் பிரித்து ஆராய்ந்தார்.

1-இயற்கை நிலை சமூகம்
2-சிவில் சமூகம்

என்பனவே இவை இரண்டுமாகும்
இயற்கை நிலையில்,மனிதன் நயவஞ்சகனாகவும்,கபடத் தன்மை நிறைந்தவனாகவும்,கொடூரமானவனாகவும் நடந்து கொண்டான்.எனக் கூறியதோடு பலமற்றவனை,பலமுள்ளவன் அடக்கியாண்டும் வந்தான் எனவே சமூகத்தில் நித்தமும் பயமும்,பீதியும் நிறைந்த சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் இதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து,அதன் மூலம் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதனூடாக அரசை உருவாக்கிக் கொண்டார்கள்.
இங்கு ஒப்பந்தம் மக்களுக்கிடையேதான் நடைபெறுகிறது.மக்கள் தங்களுக்கிடையில் ஒப்பந்தம் செய்து உரிமைகள் அனைத்தையும் தனி மனிதனிடம் ஒப்படைத்துள்ளனர்.அந்த தனிமனிதனே அரசனாவான்.

ஹொப்ஸின் மேற்படி அரசு பற்றிய சிந்தனையை கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் முஸ்லிம் அரசியல் சிந்தனையாளர் அல்-பாராபி் (கி.பி.870-950)
தனது ‘மதீனதுல் பாளிலா’ எனும் நூலில் விளக்குகிறார்.
ஆட்சியின் தோற்றம் பற்றிய அவரது கோட்பாடுகளில்,முக்கியமானதாக அமைவது
‘ உரிமைகளைத் துறத்தல்’ என்பதாகும்.

ஆட்சியின் தோற்றத்திற்கு முன்னர்,மனிதனின் வாழ்வானது சக்தியும்,வல்லமையும் உள்ளவன் பலவீனனை அடக்கியாளும் அநீதியின் அடிப்படையில் அமைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
அதிகாரம் படைத்தவன் மற்றைய மனிதனை அடிமையாக விற்கும் அல்லது வாங்கும் இத்தகைய சூழலில் மனித வாழ்வு பரஸ்பரம் பயத்திலும் பகைமையுணர்வின் அடிப்படையிலும் அமைந்திருந்தது.இத்தகைய நிலையில் அவன் பாதுகாவலை எதிர்பார்த்து நின்றான்.

இத்தகைய பயமும்,அச்சமும் நிறைந்த நிலையானது மனிதனை அவனது சக மனிதர்களோடு சமரசமாக இணங்கி வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கியது.இந்நிலையில் அவன் தனது உரிமை,அதிகாரம் ஆகியவற்றில் சிலதைத் துறந்து,தனக்கு பாதுகாப்பு நல்குபவருக்கு அதாவது ஆட்சியாளருக்கு வழங்க இணங்கினான்.இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து தனது உரிமைகளைத் துறப்பதானது ஒரு பக்கம் மக்களுக்கும்,இன்னொரு பக்கம் பாதுகாப்பு நல்கும் தலைவர் அல்லது ஆட்சியாளருக்குமிடையில் ஓர் ஒப்பந்தத்தின் அமைப்பைப் பெற்றது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரே ஒன்றாக இணைந்து,சமாதானமாக வாழ்ந்து ஓர் அரசியல் சமூகத்தை தோற்றுவிக்க காரணமாக அமைந்தது.என இமாம் பாராபி குறிப்பிடுகிறார்கள்.

இங்கு இமாம் பாராபியும்,தோமஸ் ஹொப்ஸ்சும்,மனிதர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலமே அரசை உருவாக்கியுள்ளனர் என்பதிலும்,
அரசு உருவாவதற்கு முதலுள்ள மனிதர்களின் வாழ்வு நிலை மிக மோசமான நிலையிலேயே இருந்தது என்பதிலும் ஒரே புள்ளியில் நின்று தங்கள் சிந்தனைகளை முன்வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

உஷாத்துணைகள்,
1-இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
2-அரசறிவியல் ஓர் அறிமுகம்
சி.அ.யோதிலிங்கம்
3- அரசறிவியல்,பாடக் குறிப்புகள்
எஸ்.எம்.அபூபக்கர்
ஒப்பு நோக்கு,
⁃ நௌபாஸ் ஜலால்தீன் -

S.H.M.Faleelபள்ளிவாயில்கள் திறக்கப்பட்டு விட்டன!அஷ்ஷெய்க் பளீல்(நளீமி)வழிபாட்டுத் தலங்கள் வழிபாடுகளுக்காகத் திறக்கப்பட்ட...
10/07/2021

S.H.M.Faleel

பள்ளிவாயில்கள் திறக்கப்பட்டு விட்டன!
அஷ்ஷெய்க் பளீல்(நளீமி)
வழிபாட்டுத் தலங்கள் வழிபாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்ற செய்தி முஸ்லிம்களாகிய எமக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்!
காரணம் மாதக்கணக்கில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்ஆ என்பன இல்லாமல் நாம் மிகவும் மன வேதனையடைந்தோம். 27 மடங்கு நன்மையைப் பெற்றுத் தரும் கூட்டுத் தொழுகை எமக்கு இல்லாமல் இருந்தமை பெரும் கவலையைத் தந்தது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிவாசல்களுக்கு செல்லலாம் என்ற அனுமதி தரப்பட்டிருப்பது அந்த வகையில் மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது.
இருப்பினும் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தற்போது தரப்பட்டிருக்கும் அனுமதியை முஸ்லிம் சமூகம் மிக கவனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது பள்ளிவாயலுக்கு வருவோர் ஏற்கனவே தரப்பட்டிருக்கும் அடிப்படையான சுகாதார விதிகளை மிகக் கவனமாக பின்பற்ற வேண்டும்.
+ வீட்டில் உளூச் செய்து விட்டு வருவது
+ முகக் கவசத்தை உரிய முறையில் அணிந்து வருவது
+ ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணுவது
+ பள்ளிவாயிலில் மிக அதிக நேரம் கழிக்காமல் அங்கிருந்து வெளியேறுவது
+ முஸாஃபஹா, முஆனகா செய்வதைத் தவிர்ப்பது
+ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக வருகை தராமலிருப்பது
+ பள்ளிக்கு செல்லும் போது முஸல்லாவை எடுத்துச் செல்வது
என்பவற்றை கடுமையாக அனுசரித்துக் கொள்ள வேண்டும்
தமக்கு இருமல் தடுமல் காய்ச்சல் போன்ற கொரோனாவின் அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொற்றா நோய்கள் எனப்படும் கடுமையான நோய்களால் ஏற்கனவே பிடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை இருப்பதனால் அவர்கள் பள்ளிவாயலுக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது அவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பாக அமையும்.
பள்ளிவாயல் நிர்வாகிகள் தமது பொறுப்பில் உள்ள பள்ளிவாயல்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ய வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன:
+ கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் சமூகத்தின் விகிதாசாரம் 30% ஐதையும் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன:-
# முஸ்லிம் சமூகத்தவர்கள் திருமண வீடுகள் ஜனாஸா வீடுகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடந்து கொண்டமை
# குறிப்பாக இளைஞர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி கொரோனா நோயை காவிக்கொண்டு வீட்டுக்குள் வந்து தொற்றா நோய்களால் (Non Communicable Diseases) பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் அவற்றை பரப்புகின்ற நோய்க் காவிகளாக இருக்கின்றமை.
# முஸ்லிம் சமூகத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களது விகிதாசாரம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது அதிகமாக இருப்பது. குறிப்பாக சுவாச நோய்கள், இருதய நோய்கள், கேன்சர் போன்ற (NCD) தொற்றா நோய்களால் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஏற்கனவே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் இத்தகைய நோயாளிகளுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதனாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
# முஸ்லிம் சமூகத்தில் நோய்த்தொற்று சம்பந்தமான சில பிழையான நம்பிக்கைகள் இருப்பது நிலையை மேலும் மோசமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது 'களா கத்ர் ' பற்றியும் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் மருந்துகளைப் பாவித்தல் போன்றன தொடர்பாகவும் பிழையான நம்பிக்கைகள் நிலவுவது சிலர் அசிரத்தையாக இருப்பதற்கான காரணமாக இனம்காணப்பட்டிருக்கிறது.
எனவே தற்போது வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதி பற்றி நாம் தீவிரமாக சிந்தித்து எமது பள்ளிவாயல் நடவடிக்கைகளை மாத்திரமல்ல எமது சமூக உறவுகளையும் கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
"நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் சுத்தமாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்" என்று குர்ஆனிலும்,
"சுத்தம் ஈமானின் பாதி, சிங்கத்திடமிருந்து தப்பியோடுவது போன்று குஷ்டரோகியிடமிருந்து தப்பியோடுங்கள்,தொற்றுநோய்கள் உள்ள பிரதேசங்களில் வாழ்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம், தொற்றுநோய் இருக்கின்ற பிரதேசங்களுக்குள் வெளியார் நுழையக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் ஹதீஸ்களிலும் கூறி இருப்பதனாலும் இஸ்லாம் சுத்தம் சுகாதாரமான வாழ்வு முறைக்கும் தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கும் அதிகமான முக்கியத்துவத்தை வழங்கியிருக்கின்றது.
قال رجُلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم : أُرسِلُ ناقتي وأتوكَّلُ ؟ قال : (اعقِلْها وتوكَّلْ):
تخريج صحيح ابن حبان .خلاصة حكم المحدث : حديث حسن
"ஒட்டகத்தை கட்டு அல்லாஹ்வில் தவக்குல் வை " என்ற நபி(ஸல்) அவர்களது வழிகாட்டல் இச்சந்தர்ப்பத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும்.
₹ நோய்கள் அணுகிவிடாதிருக்க எம்மால் முடிந்த தற்காப்பு முயற்சிகள் அனைத்தையும் செய்வோம்!
₹ அவற்றையும் மீறி நோய் வந்தால் அவற்றிலிருந்து மீள எம்மால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்!
₹ இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் துஆக்களில் ஈடுபடுவோம். அதாவது அல்லாஹ்வின் உதவியை எப்போதும் எதிர்பார்ப்போம்.
₹ முடிவுகளை அல்லாஹ் மட்டுமே தீர்மானிப்பான்.
₹ அவனது முடிவுகளை மனத்திருப்தியுடனும் பொறுமையோடும் முழுமனதோடும் அங்கீகரிப்போம்!
எல்லா நிகழ்வுகளுக்கும் முடிவுகளுக்குமான காரணங்களை அவன் மாத்திரமே முழுமையாக அறிந்திருக்கிறான்.
செயல்கள் எமது கடமை;
தீர்மானங்கள் அவனது உரிமை.
اياك نعبد واياك نستعين
உனக்கு மாத்திரமே இபாதத் செய்கிறோம். உன்னிடம் மாத்திரமே உதவிதேடுகிறோம்.
இங்கு இபாதத் செய்து விட்டுத் தான் உதவி தேடுகிறோம். எனவே இபாதத்துக்குப் பின்னரே உதவி தேடப்பட வேண்டும். அது நிபந்தனையாகும்.
தற்காப்பு முயற்சிகள் இபாதத் ஆகும். அது முதலில் நடக்க வேண்டும்.
உதவி தேடல், துஆ கேட்டல் இரண்டாவதாக அல்லது அதனுடன் இணைந்ததாக நடக்க வேண்டும்.
யா அல்லாஹ் எம் அனைவரையும் உன்னை உண்மையாகவே இபாதத் செய்தவர்களதும் உனது தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றவர்களதும் கூட்டத்தில் சேர்த்து எம் அனைவருக்கும் மனநிறைவையும் நாளை மறுமையில் விமோசனத்தையும் தருவாயாக!
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا
10.07.2021

Address

Main Street Oddamavadi
Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sato Mansoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sato Mansoor:

Share