Top Ceylon

Top Ceylon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Top Ceylon, Newspaper, Oddamavadi.

வலீமாவும் சில சட்டங்களும்!வலீமா என்றால் என்ன?வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்த...
24/05/2015

வலீமாவும் சில சட்டங்களும்!

வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்’ (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள்.

கணவனுக்கு பகரமாக பெண் வீட்டார் விருந்தளிக்கலாமா?

கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம் அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை

عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ

صحيح البخاري5182

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) கூறினார், அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்

கணவன் ஒரு விருந்தும் பெண் வீட்டார் ஒரு விருந்தும் கொடுக்கலாமா?

நபித்தோழர்கள் வாழ்வில் இவ்வாறு எந்த நிகழ்வும் இல்லாததால் இதனை நாம் தவிர்க்க வேண்டும். வீண் விரயாமாக்கப்படும் இப்பணத்தை ஏழை எளியவர்களுக்கு உணவழித்து அல்லாஹ்வின் கூலியை எதிர்பர்ப்பது இதைவிடச் சிறந்நது.

கணவன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்துச் செல்வது தான் இஸ்லாமியத் திருமணமா?

இது இஸ்லாமியத் திருமணம் பற்றிய அறிவில்லாதவர்களின் கண்டுபிடிப்பு. அல்-குர்ஆனிலோ ஸுன்னாவிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மாற்றமாக நபியவர்களுக்கும் ஸைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நபியவர்களே ஸைனப் (ரழி) வீட்டிற்குச் சென்றுள்ளார்கள் (முஸ்லிம் 1425)

இது விருந்து யார் வீட்டில் வைப்பது என்பதைப்பற்றிய விளக்கமே தவிர சீதன வீடு பற்றியதல்ல. சீதன வீடு ஒரு பகற்கொள்ளை என்பதில் எந்த ஐயமும் இல்லை

திருமண விருந்து எப்போது கொடுக்கப்படவேண்டும்?

கணவன், மனைவி உறவிற்குப் பிறகுதான் வலீமா என ஸுன்னாவில் எந்த நிபந்தனையும் கிடையாது. திருமண உடன்படிக்கை நடந்தது முதல் திருமண விருந்தளிக்கலாம்.

திருமண உடன்படிக்கையின் போது பயான் செய்வது நபிவழியா?

எந்த ஒரு நல்ல காரியமாயினும் (خطبة الحاجة) குத்பதுல் ஹாஜா-வைக் கொண்டு ஆரம்பிப்பதே நபி வழி. ஆகையால் இதை கொண்டு العقد – – அக்-தை நடத்துவதே சிறந்ததாகும். ஆனால் அதன் பின்னால் உரை நிகழ்த்துவது நபி வழியல்ல. நபியவர்கள் நடத்தி வைத்த எந்தத் திருமணத்திலும் எந்த உரையும் நிகழ்த்தியதில்லை.

العقد – – அக்தை பள்ளியில் நடத்துவது சிறந்ததா?

العقد அக்-தை விரும்பிய இடத்தில் நடத்தலாம். பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்பதாக வரும் திர்மிதீ (1088) ஹதீஸ் பலஹீனமானதாகும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதியர்களுக்காக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?

1. بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير) أبوداود 1819)
2. بارك الله لك) البخاري 4758)
3. بارك الله فيكم وبارك عليكم) النسائي 3318)

தொழக்கூடாத பத்து இடங்கள்1. அடக்கஸ்தலம்அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்...
24/05/2015

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம்

அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்”. அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்”. என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

3. ஒட்டகம் கட்டும் இடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

4. மலசலகூடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்

மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் – கால்நடை – தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்”. (முஸ்லிம்)

6. அபகரிக்கப்பட்ட பூமி

அபகரிக்கப்பட்ட பூமியில் தொழக்கூடாது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்பதை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

7. குபா பள்ளிவாசலுக்கு அருகில் காணப்பட்டு வந்த “ளிரார்” என்ற பள்ளிவாசல் மற்றும், (இப்பள்ளிவாசலைப் போன்று) தீங்கு விளைவிக்கும் நோக்கிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கிலும் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களோ அவர்கள் (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை’ என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சி கூறுகின்றான்”. (அத்தவ்பா: 107)

8. பூமி அதிர்வு போன்ற அல்லாஹ்வின் வேதனை இறங்கிய இடங்கள்

பொதுவாக இந்த இடங்களில் நுழைய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது: “அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்!” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புஹாரி)

9. மஃமூம்களை விட உயரமாக ஓர் இடத்தில் இமாம் நின்று தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃமூம்கள் பின்னால் தாழ்வான இடத்தில் இருக்க, இமாம் உயரமான ஒன்றின் மீது நின்று தொழுவதைத் தடை செய்தார்கள். (தாரகுத்னி, ஹாகிம்)

10. தூண்களுக்கு மத்தியில் மஃமூம்கள் வரிசையாக நின்று தொழுதல்

அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் என்பவர் கூறுகிறார்: “நாம் ஒரு தலைவருக்குப் பின்னால் மஃமூம்களாகத் தொழுதோம். மனிதர்கள் எம்மை நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனவே, நாம் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு எம்மை விட்டும் பின்வாங்கி விட்டார். நாம் தொழுது முடித்தபோது அவர்கள்: ‘தூண்களுக்கு மத்தியில் தொழும் இச்செயலை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பயப்படக்கூடியவர்களாக இருந்தோம்’ என்று கூறினார்”. (நஸாஈ, திர்மிதி, அல்ஹாகிம், அஹ்மத்)

நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளைமாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களி...
24/05/2015

நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளை

மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

* மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

* கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.

* மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

* மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கிண்ணத்தை கைப்பற்றப்போவது சென்னை சுப்பர் கிங்ஸா? மும்பை இந்தியன்ஸா?8 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல். T20 கி...
24/05/2015

கிண்ணத்தை கைப்பற்றப்போவது சென்னை சுப்பர் கிங்ஸா? மும்பை இந்தியன்ஸா?

8 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடவுள்ளன. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரில் 8 அணிகள் பங்குகொண்டன. இதன் முதல் சுற்றுப் போட்டிகள் 'ரவுண்ட் ரொபின் 2' எனும் முறையில் போட்டிகள் நடைபெற்றன. குறித்த ஒரு அணி ஏனைய 7 அணிகளுடனும் தலா 2 தடவைகள் விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் 'பிளே ஓப்' எனும் சுற்றில் விளையாடின.

இதன்படி 'குவாலிபயர் 1' எனும் முதலாவதாக தகுதி பெறும் அணிக்கான போட்டியில் சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக முன்னேறியது.

இதன்பின்னர் நடைபெற்ற 'எலிமினேட்டர்' எனும் வெளியேறும் அணிக்கான போட் டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி 'குவாலிபயர் 2' எனும் இரண்டா வதாக தகுதி பெறும் அணிக்கான போட் டியில் சென்னை அணியை சந்தித்தது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் விளை யாட தகுதிப் பெற்றது.

ஐ.பி.எல். அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் உள்ளன. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியை விட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் கூடுதலாகவே இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஒட்டு மொத்த ஐ.பி.எல். அரங்கில் 21 தடவைகள் ஒன்றையொன்று சந்தித்துள்ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 11 தடவை களும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தன. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை கிண் ணத்தை வென்றுள்ளன.

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு தடவைகள் கிண்ணத்தை வென்று அதிக தடவைகள் கிண்ணத்தை வென்ற அணிகளாக திகழ்கின்றன. ராஜஸ்தான் ரோயல்ஸ்,டெக்கன் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா ஒரு தடவை கிண்ணத்தை வென்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக ஓட்டங்களை குவித்த வீரரும் அவ்வணித்தலைவருமான ரோஹித் சர்மா 2165 ஓட்டங்களை பெற்று முதலிடத்தி லுள்ளார். எனினும், மும்பை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 2334 ஓட்டங்களை குவித்துள்ளார்.
பந்துவீச்சில் லசித் மலிங்க 141 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சார்பிலும், ஐ.பி.எல். அரங்கிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் திகழ்கிறார். இது இவ்வணிக்கு அதிக நம்பிக்கையளிக்கக்கூடிய விடயமாகக் கருதப்படுகிறது.

சென்னை சுப்பர் கிங்ஸ்
சென்னை அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா 3671 ஓட்டங்களை பெற்று முதலிடத்திலுள்ளார். இவரே ஐ.பி.எல். அரங்கில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராகவும் காணப்படுகிறார்.

பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளரான அஷ்வின் 90 விக்கெட்டுகளை கைப்பற்றி அவ்வணி சார்பில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக காணப்படுகிறார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து அணி வீரரான பிரெண்டன் மெக்கலத்தின் வெற்றிடம் அவ்வணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட மைக் ஹஸி, ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடியமை அவரின் வெற்றிடத்தை நிரப்புவதாக உள்ளது.

டுவைய்ன் ஸ்மித், மைக் ஹஸி, டுவைன் பிராவோ, பாவ் டுப்ளஸிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணி சார்பாக இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. இவ்வணியின் நட்சத்திர வீரராக சுரேஷ் ரெய்னா காணப்படுகிறார். இவர் இத்தொடரில் இதுவரை 346 ஒட்டங்களை குவித்துள்ளார். இவர் மேலும் 54 ஓட்டங்களை குவிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல். அரங்கில் தொடர்ச்சியாக 8 தடவைகள் 400 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை கடந்த வீரராகப் பதிவாவார்.

இத்தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக டுவைன் பிராவே காணப்படுகிறார். இவர் இத்தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரைத் தவிர ஆஷிஸ் நெஹ்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 ஆவது இடத்தில் உள்ளார். இவற்றைத் தவிர களத்தடுப்பிலும் இவ்வணியின் செயற்பாடு மிகவும் ஆரோக்கியமான நிலையிலேயே உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக லசித் மலிங்க காணப்படுகிறார். இவர் இத்தொடரில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவரைத் தவிர கிரன் பொல்லார்ட், லெண்டில் சிம்மன்ஸ் , நெதன் மெக்லீனகன் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்திறனில் உள்ளனர்.

மேலும், ரோஹித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், அம்பத்தி ராயுடு, பாண்டியா ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளனர். பந்துவீச்சில் அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் , வினய் குமார் மற்றும் இளம்வீரரான ஜெகதீஷ சுசித் ஆகியோரும் நம்பிக்கையளித்து வருகின்றனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ண த்தை வெல்லும் பட்சத்தில் 3 ஆவது தடவையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற அணியாக முடிசூடிக்கொள்ளும். மாறாக, மும்பை
இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில், இரண்டு தடவைகள் கிண் ணத்தை வென்ற அணியாக சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் வரிசையில் இணைந் துகொள்ளும்.

இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக காணப்படுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்புமிக்கதாக இருக்கும். கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Address

Oddamavadi

Alerts

Be the first to know and let us send you an email when Top Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Top Ceylon:

Share

Category