02/12/2024
அண்மையில் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கினால் பாரியளவில் எமது பிரதேச மக்களது அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. இக் கடுமையான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் எமது Class Of 2K16 occians எனும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பினரால் நிதி சேகரிக்கப்பட்டது. அதனடிப்படையில் திரட்டப்பட்ட நிதியில் ஒரு பங்கினை அண்மையில் அதிகம் சமூக சேவையில் ஈடுபட்டு கொண்டிருந்த RiseUp Kalkudah அமைப்பினருக்கு, அவர்களூடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், 2024-Nov-29 அன்று Rise Up Kalkudah அமைப்பின் தலைவரிடம் ஒப்படைத்திருந்தோம்.
அது மாத்திரமன்றி, 2024-Nov-30 அன்று அடையாளம் காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நேரடி பண உதவியும் எமது அமைப்பினால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிதி சேகரிப்பிற்காக உடல் ரீதியாகவும், பணம் ரீதியாகவும் தங்களது பங்களிப்பினை செய்த எமது அமைப்பின் சகல நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு அதிகம்மதிகம் பரக்கத் செய்வானாக.
எதிர்காலத்தில் இவ்வாறான பணிகளை சீரும் சிறப்புமாக செய்ய உங்கள் துஆக்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்.