OBC News Tamil

OBC News Tamil News Service

நிகழ்நிலை (online) மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்1. h...
18/10/2023

நிகழ்நிலை (online) மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்

1. https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை Click செய்யுங்கள்.

2. தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PIN ஐ அனுப்புக என்பதை Click செய்யுங்கள்.

3. PINஐ உள்ளிடவும் எனும் இடைவெளியில் SMS ஊடாக பெறப்பட்ட PIN இலக்கத்தை type செய்யுங்கள்.

4. தொலைபேசி எண் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

*சான்றிதழின் வகையை (பிறப்பு / இறப்பு / திருமணம்) தெரிவு செய்யுங்கள்

*விநியோயோகிக்கும் முறை இல் உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யுங்கள்.

*விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யுங்கள்.
அல்லது

*விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம் மற்றும் மாவட்டம், பிரதேச செயலகம் என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

5. கோரும் சான்றிதழ் தொடர்பான விபரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

* பிறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத் திகதி என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*விவாகச் சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக விவாகச் சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*இறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு நிகழ்ந்த திகதி, இடம் என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க என்பதை Click செய்யுங்கள்.

6. வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்தது, "உறுதி செய்க" என்பதை Click செய்யுங்கள்.

7. கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் கோரிக்கை email / SMS மூலம் அனுப்பப்படும். பின் சரி என்பதை Click செய்யுங்கள்.

8. வேலை நாட்களில் கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன் விண்ணப்பம் சரிபார்த்து பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரி SMS, e-mail மூலம் வழங்கப்படும் அதை Click செய்யுங்கள்.

9. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் தேவையான பிரதிகளின் எணிக்கையை குறிப்பிட்டு பணம் செலுத்துக என்பதை Click செய்யுங்கள்.

10. நீங்கள் நிச்சயமாக பணம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதில் "ஆம்" என்பதை Click செய்யுங்கள்.

11. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் I Accept என்பதை தெரிவு செய்து *Choose your Payment Method: என்பதில் Any Visa/ Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து "Proceed" என்பதை Click செய்யுங்கள்.

12. Confirm Payment Details பக்கத்தில் "Pay Now" என்பதை Click செய்யுங்கள்.

13. கடனட்டை அல்லது பற்று அட்டை விபரங்களை உள்ளீடு செய்து "Submit" என்பதை Click செய்யுங்கள்.

14. கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS, e-mail மூலம் உறுதி செய்யப்படும் பின் "சரி" என்பதை Click செய்யுங்கள்.

பின்னர் நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏற்ப பிரதேச செயலகத்தில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

சிங்கள பாடகர் மதுமாதவ கைது!இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள...
17/10/2023

சிங்கள பாடகர் மதுமாதவ கைது!

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக மதுமாதவ அரவிந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துருகிரிய அதிவேக மோட்டார் போக்குவரத்து பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

விபத்து காரணமாக மதுமாதவவின் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BREAKING NEWS: காட்டுமிராண்டி இஸ்ரேலின் அரக்கத்தனம் - வைத்தியசாலை மீது குண்டுவீசி 500 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படு...
17/10/2023

BREAKING NEWS: காட்டுமிராண்டி இஸ்ரேலின் அரக்கத்தனம் - வைத்தியசாலை மீது குண்டுவீசி 500 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்துள்ளனர்.

வைத்தியசாலை தொடர்ந்தும் பற்றியெறிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சை மற்றும் தங்குமிடம் தேடி வருகின்றனர்.

மருத்துவமனை குண்டுவெடிப்பில் குறைந்தது 500 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அதிர்ச்சித் தோல்வி!!!தென் ஆபிரிக்கா அணி டெஸ்ட் அங்கீகாரம் இல்லாத நெதர்லாந்திடம் இன்று தோல்வி ...
17/10/2023

உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அதிர்ச்சித் தோல்வி!!!

தென் ஆபிரிக்கா அணி டெஸ்ட் அங்கீகாரம் இல்லாத நெதர்லாந்திடம் இன்று தோல்வி அடைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 245(43) ஓட்டங்களை பெற்றதுடன் பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆப்ரிக்கா அணி 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 38 ஓட்டங்களால் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணிக்கு எமது வாழ்த்துகள் 💐🏆

மரம் வெட்டப்பட்ட பின் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் கம்பீரமான தோற்றம்!
17/10/2023

மரம் வெட்டப்பட்ட பின் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் கம்பீரமான தோற்றம்!

உனக்கான ஒரு சிறுநீரகத்தை தேடித் தேடி நான் உடலாலும் மனதாலும் களைத்துப் போய் இருக்கிறேன். பலரை பரீட்சித்துப் பார்த்தும் இத...
17/10/2023

உனக்கான ஒரு சிறுநீரகத்தை தேடித் தேடி நான் உடலாலும் மனதாலும் களைத்துப் போய் இருக்கிறேன்.

பலரை பரீட்சித்துப் பார்த்தும் இதுவரை ஒன்றும் உனக்கு பொருத்தமாய் அமையவில்லை.

நேரமும், பணமும் அழிந்து போனதே ஒழிய இன்னும் ஒன்றும் கை கூடவில்லை.

உன்னை கைவிடவும் முடியாமல், மீட்கவும் முடியாமல் செத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் நான் உயிர்பிழைப்பேனா என்று தெரியவில்லை.

My daughter (9 years old) urgently needs a B+ kidney. Contact those who match this HLA report, Age should be below 40.

මගේ දුවට (අවුරුදු 9) B+ වකුගඩුවක් ඉක්මනින් අවශ්‍යයි. HLA සහ අනෙකුත් අවශ්‍ය පරීක්ෂණ සිදු කර ඇති, මෙම HLA වාර්තාවට ගැළපෙන අය ඉක්මනින් අමතන්න. වයස අවුරුදු 40 ට අඩු විය යුතුය.

எனது 9 வயது மகளுக்கு B+ சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகிறது. இந்த HLA அறிக்கைக்கு பொருத்தமுடைய 40 வயதுக்குட்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

- சிரேஷ்ட ஊடகவியலாளர்
ரூமி ஹாரிஸ்

காஸாவில் உயிரிழப்பு அதிகரிப்பு; இன்று மட்டும் 40ற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வான்படை தாக...
17/10/2023

காஸாவில் உயிரிழப்பு அதிகரிப்பு; இன்று மட்டும் 40ற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வான்படை தாக்குதலால் காஸாவில் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

40 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொண்டு நிறுவனங்களின் தகவலின்படி காஸாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3400 ஆக உயர்வு, காயமுற்றோர் எண்ணிக்கை 13250.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக மணற்பாங்கான பகுதியில் இன்று தயார்செய்யப்பட்ட “கப்ர்” காட்சியே இதுவாகும்.

நல்லுள்ளம் கொண்ட கார்த்திகேசு ஐயா!கார்த்திகேசு எனும் ஓய்வு பெற்ற அரச ஊழியர் (சுகாதாரம்) திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்...
17/10/2023

நல்லுள்ளம் கொண்ட
கார்த்திகேசு ஐயா!

கார்த்திகேசு எனும் ஓய்வு பெற்ற அரச ஊழியர் (சுகாதாரம்) திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு வந்த பொழுது
அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னாள் தங்க ஆபரணங்கள் தன்னுடைய கண்களுக்கு தெரியப்பட்டதை அடுத்து

குறித்த நகையை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளார்.

மற்றவர்களின் பொருட்கள் எனக்கு சொந்தமில்லை என்று
உரிய பொருட்கள் உரியவர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதை எடுத்துக் கூறிய திருக்கோவிலைச்சேர்ந்த கார்த்திகேசுக்கு எமது வாழ்த்துக்கள்.

இந்த நற்செயலை செய்த
கார்த்திகேசு அவர்களை ஆதரித்து அவரை கௌரவித்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும்
நன்றிகள்.

.📌𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐇𝐑𝐌 𝟐𝟎𝟏𝟒/𝟐𝟓.📌The short course in Human Resource Management aims to introduce the key concepts ...
17/10/2023

.📌𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐇𝐑𝐌 𝟐𝟎𝟏𝟒/𝟐𝟓.📌
The short course in Human Resource Management aims to introduce the key concepts and theories in HRM while comparing them with the ‘actual’ HR policies and practices as carried out by HR practitioners in local work organizations.
👉𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐚𝐥𝐥𝐢𝐧𝐠 𝐏𝐞𝐫𝐢𝐨𝐝 – 𝟐𝟎𝟐𝟑 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝟓 𝐭𝐨 𝟐𝟎𝟐𝟑 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟏𝟒
👉𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞 𝐃𝐮𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 – 𝟏 𝐘𝐞𝐚𝐫
👉𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 – 𝐑𝐬 𝟓𝟎𝟎/=

More Details : 063 2222052

🛑ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர...
17/10/2023

🛑ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.

ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர், வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.

அவர்களில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு...
17/10/2023

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு
வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு
சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்

நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது (17) லோகேஸ்வரன் தமிழினி
வயது (17) ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்
சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைபெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக
காத்திருக்கும் மாணவிகள் ஆவர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். அத்தோடு
இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

முஷாரப் MP சீனாவுக்கு விஜயம்சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ...
17/10/2023

முஷாரப் MP சீனாவுக்கு விஜயம்

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களும் சென்றுள்ளார்.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா (ITT) மன்றத்திலும் ஜனாதிபதி அவர்கள் உரையாற்றினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களும் பங்கேற்றுள்ளார்.

தீர்வே விடிவாகும் என்ற கொள்கையுடன் மக்களின் எழுச்சிக்காக இரவு - பகலாக பயணிக்கும் இளம் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்திலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Address

Oluvil
32350

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when OBC News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share