09/06/2026
🌐 *_On, June 09, 2026_*
✍️ *_Oluvil INFO_*
ஜாயிஸாவில்
போதைப் பொருள் முற்தடுப்பு செயலமர்வு..!
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோரை விழிப்புணர்வூட்டும்
போதைப் பொருள் முற்தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பற்றிய செயலமர்வு ஒலுவில்
கமு/அக்/அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரியில்( 2026.06.09 )
இன்று இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் SMBM.அறூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் IL.சனீர்
கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பாடசாலை மாணவிகளுக்கு ஆத்மீக ரீதியாக போதைப் பொருள் முற்தடுப்பு பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன்,பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு போதைப் பொருள் முற்தடுப்பு,சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பற்றிய கருத்துக்களும் பொறுப்புக்கள் தொடர்பாகவும்
தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
இங்கு ஜாயிஸா மகளிர் கல்லூரி மாணவிகளின் "போதையை ஒழித்து விடியலை பெறுவோம்" எனும் தொனிப்பொருளில் அமைந்த நாடகம் நிகழ்வை மேலும் மெருகூட்டி பாராட்டினை பெற்றது.
இந்நிகழ்வை உதவி அதிபர் KL.மிஹ்ளார் நெறிப்படுத்தியதோடு,
ஆசிரியைகளான
MT.பஸ்லி,MS.சாஜிதா பேகம்
MR.தௌலத்,
குழுவினர் செயற்படுத்தினர்.
________________________
✔️ *_எமது குழு 2 இல் இணைந்து
கொள்ளுங்கள்_*..!
😍 *_Oluvil INFO WhatsApp Link_*
https://chat.whatsapp.com/CnMOza8gOCMIrOCo7H1T4k
*_AD: 075 091 9855_*