
05/05/2025
வீ.பிரியதர்சன்
இலங்கையில், அரசியலைப் பொறுத்தவரையில் ஆண்களே கோலோச்சிவரும் நிலையில், பெண்களும் இதற்கு நிகரானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். உலகிலேயே முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடாக இலங்கை உள்ளபோதும், இலங்கை அரசியலில் பெண்கள் படும் கஷ்டம் எவரும் அறிந்ததில்லை. ஏனைய துறைகளைக் காட்டிலும் அரசியலில் பெண்களுக்கான சவால்கள் அதிகம். எனினும் பெண்கள் அரசியல் பயணத்தில் ஆண்களுக்கு இணையாக தற்போது போட்டிபோடும் நிலை காணப்படுகின்றது. அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு சமூக, குடும்ப வட்டத்தில் பல கடிவாளங்களும் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன. சமூகத்தில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களும் அவதூறு கருத்துக்களும் அவர்களின் அரசியல் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதங்களாக பயன்படுத்தப்படுவதுடன் தற்காலத்தில் தேர்தல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரப்பப்படுவதால் அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது.
25 வீத கோட்டா இருந்தும் அரசியலில் பெண்கள் படும்பாடு !