
08/02/2025
கிண்ணியா நகர சபைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் கூட்டம் 2025.02.07 ஆம் திகதி சம்மேளனத்தின் காரியாலயத்தில்
இடம் பெற்றது இதில் பின்வரும் தீர்மானங்களும் ஆலோசனைகளும் நிறைவேற்றப்பட்டது.
நோன்புக்கு முன்னர் சகல பள்ளிவாயல்களும் பள்ளிவாயளுக்கு
உள்ளும்,வெளியிலும் சிரமதானம் செய்து கொள்ளவும் எனவும்,
நோன்பு கஞ்சிக்கு உரிய ஆயத்தங்களை செய்வதோடு தனவந்தர்களை நாடி அதற்குரிய வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு விறகு ஏற்பாடுகளையும் செய்து கொள்ளவும் எனவும்,ளுகர் பயானுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் எனவும்,தராபிக் தொழுகைக்கு உரிய மௌலவி மார்களை தயார் செய்து கொள்வதோடு இரவு நேர தராபிக் தொழுகைகளை ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளாமல் உள்ளே உள்ள ஒலிபெருக்கியை மாத்திரம் பயன்படுத்தி தொழுகையினை நடத்துவது சிறந்ததாகும் எனவும் ஆலோசிக்கப்பட்டதுடன்,பள்ளிவாயல்களில் சகர் அதான் ஒலிக்கச் செய்வது சிறந்தது எனவும்,உங்கள் மஹல்லாகளில் உள்ள உணவகங்களை பகல் நேரத்தில் மூடச் செய்ய அறிவுறுத்தவும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.