Muszhaaraff Media Unit

  • Home
  • Muszhaaraff Media Unit

Muszhaaraff Media Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muszhaaraff Media Unit, Media, .

12/02/2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய. இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி SMM Muszhaaraff அவர்களின் நீண்ட கால முயற்சியான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுற்றுலா பீடம் ஒன்றை அருகம்மையில் நிறுவுதல், இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் சுற்றுலா பாடசாலையின் கிளை ஒன்றை அருகம்பையில் நிறுவுதல், அருகம்பே களப்பில் Jackie board Safari யினை ஆரம்பித்தல் மற்றும் அருகம்பையை சுற்றுலா வலயமாக வர்த்தமானியிடல் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

Alhamdulillah.

விதைத்தவை முளைக்கும்!

19/11/2025

நெட்டிசன்கள் விளக்கு பிடிக்க ஊர் துரோகிகள் மீண்டும் களத்தில்!

இறுதியாக நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் மூக்குடைந்து வாக்குடைந்து கடைசியில் வட்டார மக்களால் காறித்துப்பி விரட்டப்பட ஊர் துரோகிகளின் அரசியல் மோகம் மீண்டும் பிரதேச சபையின் மரத்தில் ஏறியுள்ளது.

முஷாரப் எனும் ஆளுமையின் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதில் மட்டும் அல்ல கிடைக்கிற அதிகாரத்தை எல்லாம் உடைத்து ஊருக்கு சாபம் தேடி சுயநல அரசியல் அஜன்டாக்களுக்கு விலைபோகும் அரசியல் விலைமாந்தர்கள் தான் இந்த ஊர் துரோகிகள் என்றால் குறி தப்பாது.

எவ்வளவோ நல்ல விடயங்களுக்காக முஷாரப் தன்நலமின்றி ஊருக்காக போராடி வென்ற தருணங்களில் வாழ்த்த வாய் உசுப்பிய வரலாறு துரோகிகளிடம் இருந்ததில்லை மாறாக நயவஞ்சகத்தனம் ஊடாக பொத்துவில் மண்ணில் பிளவுகளை உண்டாக்கி அதனூடு கள்ளிச்செடிகளை வளர்த்து விட்டவர்கள் தான் இந்த ஊர் துரோகிகள்!

இந்த ஊரின் வரலாற்றை வறுத்து வறுத்து கொட்டுகையில் தன் சுயநலத்துக்காக காட்டியும் கூட்டியும் கொடுத்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது முஷாரப் என்கிற சட்டத்தரணி சட்டமன்றம் நுழைந்த போது தான்!

மண்மலை பிரச்சினையை முடிப்பாரா? என ஏளனம் விட்டார்கள், அவர்களின் வாய்களை தீர்வுத்தீ மூலம் கொழுத்தினான். பஸ் டிப்போவை தரமுயரத்துவாரா? என்று விசும்பினார்கள். தரமுயரத்தி துரோகிகளின் குரல்வளையை நெறித்துக்காட்டினான். வைத்தியசாலை என்று வாய் திறக்கும் முன்பே மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருந்த பொத்துவில் ஆதார வைத்தியசாலையை பறித்துக் கொண்டு சென்று மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து துரோகிகளின் கண்களின் மேல் குத்தினான். போனசாக ஒசுசலவை கொண்டு வந்து நிறுத்தினான். இப்படி மக்களின் கண் முன்னே விரிந்து கிடக்கும் ஆரிய காயங்களின் தழும்புகளில் எழுந்து நிற்கிற அடிப்படை உரிமைகளை மீட்டுக்கொடுத்த தலைவனுக்கு பொத்துவில் மக்கள் எப்போதும் நன்றிக்கடன் கொண்டவர்கள்!

எப்படியாவது முஷாரபை வீழ்த்த வேண்டும் என மூத்திரச்சந்துகளில் திட்டம் போட்டு எதிர்த்தவர்கள் எரித்தவர்கள் என எல்லோருக்குமாக சேர்ந்து போராடினார் முஷாரப். இலங்கையின் உயரிய சபையின் அரியாசனத்தில் முஷாரபை உட்கார வைத்து துரோகிகளின் வயிற்றை கலக்கியது கர்மா!

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் துரோகிகள் ஒன்று கூடி வெறும் 88 வாக்குகளால் ஊரை தோற்கடிக்கச்செய்து பட்டாசு கொழுத்திய கூட்டமும் இந்த ஊர்துரோகிகளின் சின்ன வீடுகளுக்கு உள்ளாடை வாங்கிக் கொடுப்பவர்கள் தான்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் Jvp பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றம் ஊடாக எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு பேச்சுக்களால் மட்டும் காலம் கடத்துவதை விடுத்தும் ஊருக்கான கிரீடத்தை தவிசாளர் என்கிற மகுடம் கொண்டு தன் ஆளுமையை தகுதியான இடத்தில் பொருத்திக்கொண்டார்.

அந்தப்போட்டியிலும் கூட்டு துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டினார்கள்!

முஷாரப் என்கிற ஆளுமை பாராளுமன்றத்தில் சதா சமூகத்துக்கும் அபிவிருத்திக்கும் முழங்கிக்கொண்டிருந்த குரல், துரோகிகளின் திட்டத்துக்குள் அகப்பட்டிருக்கும் வாசித் எம் பி பதவி ஏற்ற இத்தனை காலத்துக்குள்ளும் எந்த ஆணியாவது புடிங்கி இருக்கிறாரா? என்றால் சைபரை சைபரால் தான் பெருக்க வேண்டி உள்ளது. இதற்குள் அல்லக்கைகளுக்கு கொண்டாட்டம் வேறு!

எல்லா வழிகளிலும் முஷாரபை தீண்ட நினைத்து மூக்குடைந்த துரோகிகள் புதிய கடிவாளம் ஒன்றை கல்முனையில் களிசன் கழட்டப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தில் போட்டு பொத்துவில் பிரதேச சபையில் செயலாளர் ஆக கடமை புரிந்தவரை அவராகவே கடமைக்கு வருவது கஷ்டம் என கடிதம் எழுத வைத்து சபையின் காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனைகள நிறுத்தி சபையை முடக்க திட்டம் தீட்டினார்கள்.

தவிசாளர் ஒரு சட்டத்தரணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்தவர், சபாநாயகர் கதிரையில் இருந்து சபையை வழி நடத்தியவர், பெயர் பெற்ற ஊடகவியளாலர், ஏற்றமிகு இளைஞன் விருதை கம்பன் கழகத்தால் சூடிக்கொண்டவன், இப்படி அவருடைய அனுபவப்பாய்ச்சல்களில் இந்த துரோகிகளின் திரைமறை திட்டங்கள் எல்லாம் வெறும் ஒல்லிக்குச்சிகள்!

சட்டரீதியில் சபையை தடங்கள் இல்லாமல் கொண்டு செல்ல சபையில் தீர்மானம் எடுத்து செயலாளருக்கு பதிலாக அவருடைய கடமைகளை செய்ய ஊழியர்களை நியமித்தார் உள்ளூராட்சி உதவி ஆணையாளருடைய அனுமதி பிரகாரம் ஒரு மாதம் மீண்டும் சபை இயங்கியது.

துரோகிகள் கல்முனையில் களிசன் கழற்றப்பட்ட நிர்வாக உத்தியோத்தருக்கு போட்ட கடிவாளத்தை கொஞ்சம் இழுத்தனர், உடனே மேதவாவி நிர்வாக உத்தியோகத்தர் பொத்துவில் பிரதேச சபையின் வங்கி கணக்குகளை இடை நிறுத்தி மீண்டும் சபையை முடக்கியுள்ளார்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கள்ளங்கபடம் இல்லாத மக்கள் பலம் கொண்ட முஷாரப் எனும் ஆளுமையை தோற்கடிக்க துரோகிகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைவது துரோகிகளே!

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 11 கட்சிகளுக்கான 14 நாட்கள் செயலமர்வானSeminar on Governance for Political party Cadres for...
15/09/2025

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 11 கட்சிகளுக்கான 14 நாட்கள் செயலமர்வான
Seminar on Governance for Political party Cadres for Sri Lanka Project Profile செயலமர்வானது செப்டம்பர் 12 முதல் சீன தலைநகர் பெய்ஜிங் இல் நடைபெறுகிறது.

அதில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் தனித்துவ தாய்க்கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்வதற்காக
முஸ்லிம் காங்கிரஸ் இன் தேசிய இளைஞர் அமைப்பாளரும்
முன்னாள் ராஜாங்க அமைச்சரும்,
தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான
சட்டத்தரணி SMM. Muszhaaraff மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இன் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும்,
கல்குடா தொகுதி அமைப்பாளருமான
சட்டத்தரணி ரிபான் ஹபீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் உயர்பீடத்தின் சிபாரிசின் பேரில் கட்சி சார்பாக இரு சட்டத்தரணிகளும் சீனாவிற்கு சென்றுள்ளனர்

குறித்த பயணத்தில் பொத்துவில் பிரதேச சபையையும் சீனாவின் யுனான் சபைக்கிடையில் இடம்பெற்றுவரும் sister city project தொடர்பில் சீனப்பிரதநதகளுடனான விசேட கலந்துரையாடலிலும் பொத்துவில் தவிசாளர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 11 கட்சிகளுக்கான 14 நாட்கள் செயலமர்வானSeminar on Governance for Political party Cadres for...
15/09/2025

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 11 கட்சிகளுக்கான 14 நாட்கள் செயலமர்வான
Seminar on Governance for Political party Cadres for Sri Lanka Project Profile செயலமர்வானது செப்டம்பர் 12 முதல் சீன தலைநகர் பெய்ஜிங் இல் நடைபெறுகிறது.

அதில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் தனித்துவ தாய்க்கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்வதற்காக
முஸ்லிம் காங்கிரஸ் இன் தேசிய இளைஞர் அமைப்பாளரும்
முன்னாள் ராஜாங்க அமைச்சரும்,
தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான
சட்டத்தரணி SMM. Muszhaaraff மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இன் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும்,
கல்குடா தொகுதி அமைப்பாளருமான
சட்டத்தரணி ரிபான் ஹபீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் உயர்பீடத்தின் சிபாரிசின் பேரில் கட்சி சார்பாக இரு சட்டத்தரணிகளும் சீனாவிற்கு சென்றுள்ளனர்

குறித்த பயணத்தில் பொத்துவில் பிரதேச சபையையும் சீனாவின் யுனான் சபைக்கிடையில் இடம்பெற்றுவரும் sister city project தொடர்பில் சீனப்பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலிலும் பொத்துவில் தவிசாளர் கலந்து கொள்ள உள்ளமை குறப்பிடத்தக்கது

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் க...
15/09/2025

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி Mohammed Muszhaaraff , மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபானும் சீனா பயணம்.

இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கட்சியின் தேசிய தலைவர் சட்ட முதுமானி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எல் .ஏ. எம் .ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் .

03/09/2025

அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வு நமது தலைமை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் SMM.முஷாரப் தலைமையில் பொத்துவில் பொது நூலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 4 மணிக்கு அனைவரையும் மனம் திறந்து அழைகின்றார்.

03/09/2025
28/08/2025

பொத்துவில் 6 மற்றும் 4 பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வீதிகளில் குவிந்துள்ள மணலை அகற்றுதல். (மண்மலை)

குறித்த விடயம் சம்பந்தாமாக கடந்த அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொத்துவில் கௌரவ தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய பொத்துவில் பிரதேச செயலாளரினால் முன் மொழியப்பட்ட வேண்டுதலுக்கு குழு அனுமதியளித்துள்ளது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Muszhaaraff Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share