
28/06/2025
கடவுச்சீட்டு சேவைகள்: புதிய அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில், ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் ஜூன் 2, திங்கட்கிழமை முதல் காலை 6:30 மணி முதல் பி.ப 2:00 மணி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டாளர் நாயகம் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒரு நாள் சேவைக்கு முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசர தேவை உள்ளவர்கள் இந்த நேரத்தில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றார்.
காலை 6:30 மணி முதல் பி.ப 2:00 மணிக்குள் அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்படும். எனவே, மக்கள் இரவு முழுவதும் அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேவையற்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்கு, விண்ணப்பதாரர்கள் காலை 6:00 மணிக்கு மேல் வருவது சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.