Madurankuli Media

Madurankuli Media "மாற்றத்தை நோக்கிய ஊடகப் பயணம்"

 #ஒரு தவறை காண்பித்து இன்னுமொரு தவறை நியாயப்படுத்தலாமா ? சட்டத்தரணிகள் எதற்கு ? https://www.madurankulimedia.lk/2026/01/...
10/01/2026

#ஒரு தவறை காண்பித்து இன்னுமொரு தவறை நியாயப்படுத்தலாமா ? சட்டத்தரணிகள் எதற்கு ?

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_10.html

ஒரு விடயத்தை தீர்மானிக்கும்போது, ஒன்றாக உள்ளே இருந்து அதற்கு ஆதரவு வழங்கிவிட்டு, பின்பு வெளியே கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நடந்துகொள்கின்றபோது எழுகின்ற விமர்சனங்களை சமாளிப்பதற்காக பொதுவாக எல்லோரும் கூறுகின்ற பதில்தான் “”நான் சமூகத்துக்காக நல்ல விடயங்களுக்கு மனச்சாட்சிப்படி ஆதரவு வழங்கினேன்”” என்பதாகும்.

இதனை சொஹரா மாத்திரம் புதிதாக கூறவில்லை. கடந்தகாலங்களில் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட அனைவரும் கூறியது இதனைத்தான்.

வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு கொழும்பு மாநகரசபை பட்ஜெட்டில் எவ்வாறு நடந்துகொள்வது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தலைமையில் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்த்து வாக்களிப்பதென்று சொஹராவும் சேர்ந்து தீர்மானித்துவிட்டு, தற்போது மக்களின் நலனுக்காக மனச்சாட்சிப்படி வாக்களித்தேன் என்று மனச்சாட்சி உள்ள எவரும் கூறமாட்டார்கள்.

தனிப்பட்ட ரீதியில் மனச்சாட்சிப்படி முடிவு எடுப்பதென்றால், சுயேச்சையாக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்று அவ்வாறு முடிவெடுக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் சார்பாக போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானால் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்.

நாட்டின் பல உள்ளூராட்சி சபைகளில் NPP க்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கும் ஆதரவு வழங்குவதென்றால் குறுக்கு வழியில் செல்லாமல் முறையாக அணுகியிருந்தால், எல்லோரும் கூடி தீர்மானித்திருக்கலாம். ஆனால் முறை தவறி குறுக்குவழியில் ஒரு உறுப்பினரை விலைக்கு வாங்கியதானது தவறான நடைமுறையாகும்.

இருபதுக்கு வாக்களித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியுமென்றால், ஏன் எனக்கு முடியாது என்ற கேள்வியானது, ஒரு தவறை சுட்டிக்காட்டி இன்னுமொரு தவறை நியாயப்படுத்த முற்படுவதாகும். இருபதுக்கு வாக்களித்ததும் தவறு, இதுவும் தவறு.

இருபதுக்கு வாக்களித்தவர்களுக்கு கோரப்பட்ட விளக்க கடிதத்துக்கு உரிய காலத்துக்கு முன்பே அவர்கள் பதிலளித்தார்கள். ஆனால் தனது கட்சி கோரிய விளக்கத்துக்கு சொஹரா அவர்கள் உரிய காலத்துக்குள் பதிலளிக்காமல், காலம் கடந்த பின்பு சட்டத்தரணிகளுடன் சென்றது எதற்கு ?

#முகம்மத்_இக்பால்
#சாய்ந்தமருது

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_10.html

 #புத்தளம், பாலாவி அஷ்ரப் பாதை கொங்கிரீட் பாதையாக திறந்து வைப்பு!.https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_75.h...
10/01/2026

#புத்தளம், பாலாவி அஷ்ரப் பாதை கொங்கிரீட் பாதையாக திறந்து வைப்பு!.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_75.html

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் எம். ஆர். சன்சைன் வேண்டுகோளின் பேரில், புத்தளம் பிரதேச சபையின் தலைவர் ரதிகவின் நிதி ஒதுக்கீட்டீன் கீழ் புத்தளம், பாலாவி பிரதேசத்தின் அஸ்ரப் வீதி சுமார் 2மில்லியன் ரூபா செலவில் கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இப்பாதை நேற்று (09) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளாரும், புத்தளம் மாநகர சபையின் உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் கலந்து சிறபித்தார்.

இதேவேளை இது போன்று பல பாதைகள் கொங்கிரீட் பாதைகளாக அபிவிருத்தி செய்யப்பட இருப்பதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுர்தீன் தெரிவித்தார்.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_75.html

 #தேசிய ரீதியில் நடைபெறும் 3வது அல்குர்ஆன் மனனப் போட்டி. இறுதிச்சுற்றும் பரிசளிப்பு விழாவும்..!✍️ எஸ். சினீஸ் கான்.https...
10/01/2026

#தேசிய ரீதியில் நடைபெறும் 3வது அல்குர்ஆன் மனனப் போட்டி. இறுதிச்சுற்றும் பரிசளிப்பு விழாவும்..!

✍️ எஸ். சினீஸ் கான்.

https://www.madurankulimedia.lk/2026/01/3.html

புனித அல்குர்ஆனுக்கு சவூதி அரேபியா அளித்து வரும் சேவைகள் உலகளாவிய அளவில் அளப்பரியவை. அல்குர்ஆன் கல்வி, மனனம் மற்றும் அதன் போதனைகளை இளம் தலைமுறையினரிடையே வேரூன்றச் செய்வதில் சவூதி அரேபியா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் இஸ்லாமிய உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அந்த உன்னதச் சேவைகளின் ஒரு பகுதியாக, உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் பெரும் நிதியுதவியுடன் அல்குர்ஆன் மனனப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இலங்கையிலும் இளம் தலைமுறையினரிடையே அல்குர்ஆன் மனனத் திறனை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் 3வது மாபெரும் தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டி தற்போது அதன் இறுதிப் பகுதியை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதுடன்,
வெற்றியாளர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் திங்கட்கிழமை (12) ஆம் திகதி கொழும்பு ITC ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.

இலங்கையின் முக்கிய மாவட்டங்களான கொழும்பு, கண்டி, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட தெரிவுப் போட்டிகளில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் நான்கு பிரிவுகளில் பங்கேற்றனர். இவர்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட இளம் ஹாபிழ்களே இவ்விறுதிச் சுற்றில் தங்களது மனனத் திறனை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்தப் போட்டியானது சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் முழுமையான நிதியுதவியுடன் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இந்த உன்னத நிகழ்வை
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் கௌரவத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி
மற்றும்
சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதரகத்தின் மார்க்க விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேக் பத்ர் பின் நாஸிர் அல் அனஸீ
ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வழிநடத்தி வருகின்றனர்.

புனித அல்குர்ஆனை பாதுகாத்து, அதன் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதில் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கி வரும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலர், சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களுக்கும்,
அதேபோன்று அல்குர்ஆன் சேவைகளையும் இஸ்லாமியப் பணிகளையும் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வரும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்களுக்கும்,
இத்தகைய உன்னத முயற்சிகளை இலங்கையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது காலத்தின் தேவை ஆகும்.

இலங்கை - சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சமய மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய பாலமாக இந்த அல்குர்ஆன் மனனப் போட்டி அமையவுள்ளது.
புனித அல்குர்ஆனை நெஞ்சங்களில் ஏந்தியுள்ள இளம் ஹாபிழ்களை கௌரவிக்கும் இந்த விழா, ஆன்மீக எழுச்சியையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

https://www.madurankulimedia.lk/2026/01/3.html

 #கனமூலை ராபிதா நலன்புரி அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.https://ww...
10/01/2026

#கனமூலை ராபிதா நலன்புரி அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_0.html

கனமூலை *ராபிதா நலன்புரி அமைப்பின்* ஏற்பாட்டில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வரிய மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 09/01/2026 ஆம் திகதி கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக அதிபர்கள், ஆசிரியர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், இயற்கை அனர்த்தங்களால் மாணவர்களின் கல்விப் பயணம் எவ்விதத்திலும் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதனைச் சுட்டிக்காட்டியதுடன், இக்கட்டான சூழலில் ராபிதா நலன்புரி அமைப்பு முன்னின்று உழைப்பதையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், கல்வியைத் தொடர்வதற்கான ஊக்கத்தையும் அளிப்பதே இந்த மனிதாபிமான முயற்சியின் பிரதான நோக்கமாகும் என அமைப்பின் தலைவர் தெரிவித்தனர்.

நிகழ்வின் நிறைவில், இந்நிகழ்வை சிறப்பாக செய்ய உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு இப்பகுதி மக்களின் நலன் சார்ந்த பணிகளிலும், கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளிலும் ராபிதா நலன்புரி அமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பயணிக்கும் என்ற உறுதிமொழியும் மீள வலியுறுத்தப்பட்டது.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_0.html

 #சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது(கற்பிட்டி ச...
09/01/2026

#சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

https://www.madurankulimedia.lk/2026/01/1560.html

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து வியாழக்கிழமை (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல, வலான காவல்துறையின் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கொழும்பு அளுத்கடை பகுதியில், நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) நபர்கள் விசாரிக்கப்பட்டனர். அங்கு, குறித்த ​​இரண்டு (02) சந்தேக நபர்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இந்த கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 48 வயதுடைய கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்களும் வெளிநாட்டு சிகரெட் பொட்டலமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கெசல்வத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.madurankulimedia.lk/2026/01/1560.html

 #கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் தில்லை மலர் நூல் வெளியீடு(கற்பிட்டி நிருபர் ச...
09/01/2026

#கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணிக்க விழாவின் தில்லை மலர் நூல் வெளியீடு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_80.html

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் மாணிக்க விழா சிறப்பு மலரான தில்லை மலர் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2026 ஜனவரி 22 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பாடசாலையில் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் மற்றும் உளவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம் எஸ் எம் அனஸ் , கௌரவ அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் , சிறப்பு அதிதிகளாக முன்னாள் புத்தளம் வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் எம் ஜவாத் மரைக்கார், முன்னாள் புத்தளம் வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஷட் ஏ சன்ஹீர் மற்றும் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கற்பிட்டி வரலாற்றில் ஒரு மைற்கல்லாக இடம்பெறும் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு சகலரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை கல்விச் சமூகம் அன்பாய் அழைக்கிறது.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_80.html

 #அமெரிக்கா – ரஷ்யா மோதல் ஏற்புமா ? இதுவரையில் ஏன் இவர்கள் யுத்தம் செய்யவில்லை ? https://www.madurankulimedia.lk/2026/01...
08/01/2026

#அமெரிக்கா – ரஷ்யா மோதல் ஏற்புமா ? இதுவரையில் ஏன் இவர்கள் யுத்தம் செய்யவில்லை ?

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_8.html

ரஷ்யாவின் எண்ணைக் கப்பலை அமெரிக்க படையினர் கைப்பற்றி போர் பதட்டம் ஏற்பட்டதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்படுமா ? ஏன் இதுவரையில் இரு நாடுகளும் நேரடியாக மோதவில்லை ? என்று ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உருவான அமெரிக்கா, சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆகிய இரு வல்லரசுகளும் உலக அரசியலை பல தசாப்தங்கள் ஆட்டிப்படைத்தன.

இந்தக் காலப்பகுதி “பனிப்போர்” (Cold War) என அழைக்கப்படுகிறது. வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, உக்ரைன் போன்ற பகுதிகளில் இரு தரப்புகளும் மறைமுக யுத்தங்களில் ஈடுபட்ட போதும், நேரடி அமெரிக்க – ரஷ்ய போர் ஏற்படவில்லை.

அமெரிக்கா – ரஷ்யா நேரடி யுத்தம் நிகழாமல் தடுக்கப்பட்ட முக்கிய காரணம் MAD (Mutually Assured Destruction) கொள்கை ஆகும்.

1950களில் உருவான இந்தக் கொள்கையானது “”இரு தரப்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இரண்டும் முழுமையாக அழியும். வெற்றியாளன் எவருமில்லை.”” என்பதாகும்.

இது இராணுவ, அரசியல் முடிவில் ஆழமாக வேரூன்றிய நடைமுறைத் தடுப்பு கொள்கையாகும். இதன் காரணமாக நேரடி யுத்தம் என்பது தற்கொலைக்கு ஒப்பானதாக இரு தரப்பும் கருதியது.

இரு வல்லரசுகளுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும்.

1. Hotline Agreement (1963): கியூபா ஏவுகணை நெருக்கடியின் பின்பு உருவான இந்த ஒப்பந்தம், அவசர சூழலில் வாஷிங்டன் – மொஸ்கோ இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தியது. தவறான புரிதலால் யுத்தம் ஏறபடாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

2. 1968 இல் அணு ஆயுதப் பரவலை கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம்.

3. 1972 இல் நீண்ட தூர அணு ஏவுகணைகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதித்த முதல் Arms Control ஒப்பந்தம்.

5. 1972 இல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கட்டுப்படுத்தி MAD சமநிலையை பாதுகாக்கும் ஒப்பந்தம்.

5. 1987 இல் நடுத்தர அணு ஏவுகணைகளை முழுமையாக தடை செய்த வரலாற்று முக்கியத்துவ ஒப்பந்தம்.

6. 2010 அணு ஆயுத எண்ணிக்கையை குறைக்கும் ஒப்பந்தம்.

இதில் சில ஒப்பந்தங்கள் காலாவதியானது. சிலதிலிருந்து அமெரிக்கா விலகியது.

அமெரிக்கா – ரஷ்யா இடையே யுத்தம் நடைபெறாததற்கு ஒப்பந்தங்கள் மட்டும் காரணமல்ல.

MAD (Mutually Assured Destruction) கொள்கை, அணு ஆயுத சமநிலை, Arms Control ஒப்பந்தங்கள், உலகளாவிய அரசியல், பொருளாதார விளைவுகள் குறித்த அச்சம் ஆகிய அனைத்தும் இணைந்து, நேரடி யுத்தத்தைத் தடுத்துள்ளன.

கடந்த காலங்களில் இவ்விரு வல்லரசுகளின் ஆட்சித் தலைவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் மிகவும் நிதானமாக நடந்துகொண்டனர். ஆனால் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிதானம் இழந்தவராக காணப்படுகின்றார்.

எனவேதான் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளாமல் இருப்பதானது ட்ரம்ப்பின் நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_8.html

 #ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  பாராளுமன்றத்தில் ,துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்ட ...
08/01/2026

#ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் ,துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் புதன் கிழமை (07.01.2026) ஆற்றிய உரை

https://www.madurankulimedia.lk/2026/01/07012026.html

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, சபை முதல்வர் கௌரவ பிமல் ரத்நாயக்க நமது முன்னாள் புகழ்பூத்த செயலாளர்களில் ஒருவரான திரு. நிஹால் செனவிரத்ன அவர்களின் மறைவு குறித்து இங்கு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியின் சார்பில் அன்னாருக்கு எனது அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக, நான் 1994 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தச் சபைக்கு வந்தபோது, நீங்கள் இப்போது வகிக்கும் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியையே நானும் வகித்தேன்.

அப்போது புதியவர் ஒருவராக நான் இந்தச் சபையை வழிநடத்த வேண்டியிருந்த நிலையில், திரு. நிஹால் செனவிரத்ன பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக இருந்தமை எனக்குப் பெரும் பலமாக இருந்தது.

நீண்ட வரிசையிலான செயலாளர்களில் திரு. நிஹால் செனவிரத்ன அவர்கள் மிகச்சிறந்த சேவையாற்றினார் என்பதும், இந்தச் சபையில் பணியாற்றிய மிகச்சிறந்த பண்பாளர்களில் அவரும் ஒருவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவரோடு எனக்கு பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தன.

குறிப்பாக, அவர் தனது உத்தியோகபூர்வ ஆசனத்திலிருந்து எழுந்து வந்து சபைத் தவிசாளருக்குப் பல விடயங்களில் ஆலோசனை வழங்கும்போதும், அவ்வப்போது கடந்த காலங்களில் இந்தச் சபையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்தும் பல சுவாரஸ்யமான அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர், அதேபோல ஒரு விசுவாசமான 'ரோயலிஸ்ட்' (Royal College மாணவர்). நாங்கள் அனைவரும் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு தலைமுறையினராக இருந்தாலும், ரோயல் கல்லூரியின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர் அர்ப்பணிப்புடன் கலந்துகொண்டதை ரோயல் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் நினைவில் வைத்திருப்பார்கள். 'பிராட்பி ஷீல்ட்' அல்லது 'ரோயல்-தோமியன்' போட்டி என அனைத்து முக்கிய போட்டிகளிலும் அவரை நாம் கண்டோம்.

ஆகவே, இந்தச் சபையில் நீண்ட காலம் பணியாற்றிய இந்தச் சிறந்த மனிதருக்கு எனது அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். மேலும், அவரது குடும்பத்தாருக்கு, குறிப்பாக ரோயல் கல்லூரியில் எனது சமகாலத்தவராக இருந்த அவரது மகன் சத்தியஜித்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைக் கூறிவிட்டு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் (Colombo Port City Economic Commission Act) இந்த முக்கியமான திருத்தம் குறித்துப் பேசும் ஆரம்ப பேச்சாளர் என்ற முறையில், இன்று விவாதிக்கப்படவுள்ள விதிகளைச் சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு உள்ளது.

ஆனால் அதற்கு முன், சமீபத்திய "டித்வா"("Ditwa") சூறாவளிப் பேரழிவு மற்றும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்து சிறிது பேச விரும்புகிறேன். அந்தப் பேரழிவின் போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல அண்டை நாடுகள் எமக்கு உதவத் தங்களது விரைவுப் படைப் பிரிவுகளை (Rapid Deployment Forces) அனுப்பி உதவின.

அதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் ஆற்றிய சேவையை நான் நன்றியுடன் நினைவுபடுத்த வேண்டும். அவர்கள் எவ்வளவு நிபுணத்துவத்துடனும் வினைத்திறனுடனும் இலங்கை மக்களுக்குச் சேவை செய்தார்கள் என்பதை நாம் அவதானித்தோம்.

குறிப்பாக தெல்தோட்டை (Deltota) மற்றும் கலகா (Galaha) போன்ற பகுதிகளில் மண்சரிவுகளால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பணியாற்றிய விதத்தை நான் நேரில் கண்டேன். ஒரு வாரம் வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அங்கே வந்த அவர்கள் மீட்புப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதி முனீர் சாதிக் இந்தப் பயணத்தை ஒருங்கிணைத்திருந்தார். அவர்கள் பிரதேச செயலகத்தில் கூட்டங்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுகள் மற்றும் இதர உதவிகளை வழங்கினார்கள்.

அவர்கள் டிசம்பர் 10 ஆம் திகதி அங்கு வந்து, தெல்தோட்டை வைத்தியசாலை மற்றும் அந்தப் பகுதியில் பற்றாக்குறையாக உள்ள நீர் வழங்கல் திட்டம், பாடசாலை கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டனர். அந்த மருத்துவமனை மற்றும் நீர் வழங்கல் திட்டத்தை மேம்படுத்தத் தங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரைப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொழிற்சாலைகளை அமைக்கவும், வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்க நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யவும் உதவ முன்வந்துள்ளனர். அவர்களின் இந்தப் பணிகளுக்காக நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் விரைவுப் படைகளுக்கும் நன்றியைக் கூறுகிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷெய்க் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அவர்களது தூதரகத்திற்கும் எனது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து, அதே சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட புத்தளம், கரைத்தீவு பிரதேசம் தொடர்பான மற்றொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக கரைத்தீவு, சின்ன நாகவில்லு பிரதேசத்தில் நடந்த அனர்த்தத்தின் காரணமாக அங்கு மிக மோசமாக பல இடங்களில் இன்னும் நீர் வற்றாமல் நெஞ்சளவு நீர் தேங்கி நிற்கின்ற ஒரு அபாயகரமான நிலையில் 25 வீடுகளுக்கு மேல் இந்த கரைத்தீவு சின்ன நாகவில்லு பிரதேசத்தில் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது என்ற விவகாரத்தில் நேற்று பாராளுமன்றத்தில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது உண்மைக்கு புறம்பானது என்ற வகையில் ஒரு கூற்றை முன் வைத்திருந்தது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது என்று நான் இங்கு சொல்லிவைக்க விரும்புகிறேன்.

அந்த பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கான மாற்று வீடுகள் சம்பந்தமாக இன்னும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதம் கடந்தும் இன்னும் நீர் வற்றவில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் அரச நிலங்களை வேறு இடங்களில் பிரித்து கொடுப்பது சம்பந்தமாகவும் இன்னும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாற்றமாக நேற்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அதை மறுதலித்து பேசியது குறித்து என்னுடைய கவலையை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் அந்த பிரதேசத்தில் தண்ணீர் வற்றிவிட்டதாக சொன்னாலும் அவ்வாறு வற்றவில்லை என்ற விவகாரத்தை அது உண்மைக்கு புறம்பானது என்பதை இங்கு என்னோடு இருக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர் அங்கு அந்த பிரதேசத்திற்கு சென்று வந்தா சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வும் உறுதிப்படுத்துகிறார் என்று நான் சொல்லிவைக்க விரும்புகிறேன்.

இப்போது நாம் விவாதிக்கும் விடயத்திற்கு வருகிறேன். இது துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கான திருத்தங்கள் தொடர்பானது. உண்மையில், கடந்த சில மாதங்களாக ஒழுங்குவிதிகள் நடைமுறையில் இல்லாத ஒரு நிச்சயமற்ற நிலை இருந்தது. இதனால் முதலீட்டாளர்களிடையே ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டது. இப்போது இந்தத் திருத்தங்கள் மூலம் ஓரளவு தெளிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இவை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் காரணமாக, வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது நமது நாட்டின் முதலீட்டுச் சூழலுக்கு நாம் நியாயம் செய்துள்ளோமா?
துறைமுக நகரம் போன்ற திட்டங்கள் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் அல்லது மக்காவ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது போட்டித்தன்மையுள்ள சலுகைகளை வழங்க வேண்டும். முன்பிருந்த சலுகைகளை நாம் குறைத்துக் கொண்டே போனால், இவ்வளவு பெரிய முதலீடுகளை நம்மால் ஈர்க்க முடியாமல் போய்விடும்.

முதலீட்டுச் சபையின் (BOI) தற்போதைய தலைவர் திரு. அர்ஜுன ஹேரத் டெயிலி மிரர்(Daily Mirror) பத்திரிகையில் கூறியுள்ளதை நான் பார்த்தேன்.
"இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு IMF ஒரு பெரிய தடையாக இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். அவர் தனது பதவியிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார். IMF-ன் அங்கீகாரம் இல்லாமல் BOIயால் எந்தவொரு வரிச் சலுகையையும் வழங்க முடியாது என்பதே யதார்த்தம்.

நேற்று பொது நிதிக்குழுவில் (Committee on Public Finance) நாங்கள் இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம். ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலேயே இந்தத் திருத்தப்பட்ட சலுகைகள் முதலீட்டாளர்களை ஈர்க்கப் போதுமானதா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது.

துபாய் போன்ற இடங்களில் அனுபவமுள்ள முதலீட்டாளரான டாக்டர் ஹர்ஷ சுபசிங்க போன்ற உறுப்பினர்கள், 0% வருமான வரி அல்லது வரிச் சலுகைகள் அவசியம் என்று வலியுறுத்தினர். உதாரணமாக, ஊழியர்களுக்கு 36% வருமான வரி விதிக்கப்பட்டால், யார் இங்கே வந்து பணிபுரிவார்கள்?
இணைய (IT) துறைக்கு 7.5% வரி விதிக்கப்படும் எனத் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பிற பொருளாதார வலயங்களில் 0% வரி இருக்கும்போது, இங்கே 7.5% வரி என்பது போட்டித்தன்மையற்றது. IMF உடன் இன்னும் வலுவாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய சலுகைகளைத் தக்கவைத்திருக்க வேண்டும்.

துறைமுக நகரம் 14 பில்லியன் டொலர் முதலீட்டை எதிர்பார்க்கிறது. இது முழுமையாக நடந்தால் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் டொலர் வரை நன்மை கிடைக்கும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை எவ்வளவு முதலீடு வந்துள்ளது எனக் கேட்டபோது, 4 முக்கிய திட்டங்கள் மூலம் சுமார் 1.2 முதல் 2 பில்லியன் டொலர் மட்டுமே வரும் எனத் தெரிகிறது.

13 பில்லியன் டொலர் பொருளாதாரப் பெறுமதி என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 13% ஆகும். இது நடந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், சலுகைகளைக் குறைத்த பிறகு முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் மீது நம்பிக்கை இருக்குமா?
அரசின் கனவு நனவாக வேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால், அந்தத் துறையில் அனுபவமுள்ளவர்களே சந்தேகம் கொள்ளும்போது, இந்த புதிய ஒழுங்குவிதிகள் முதலீடுகளை ஈர்க்கப் போதுமானதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி.

https://www.madurankulimedia.lk/2026/01/07012026.html

 #முஸ்லிம் எம்.பிக்களில் முதலிடம் பெற்றார் நிசாம் காரியப்பர்.!(அஸ்லம் எஸ்.மெளலானா)https://www.madurankulimedia.lk/2026/0...
08/01/2026

#முஸ்லிம் எம்.பிக்களில் முதலிடம் பெற்றார் நிசாம் காரியப்பர்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_91.html

2026 ஆம் ஆண்டு ஜனவரியில் manthri.lk வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசைப் பட்டியலில், பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களிடையே முதல் இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.

இரண்டாம் இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அவர்களும், மூன்றாம் இடத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களும் பெற்றுள்ளனர்.

இந்த தரவரிசை, 2024 நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்தில்
பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இயலுமையை அடிப்படையாகக் கொண்ட தர வரிசைப் பட்டியலை manthri.lk ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_91.html

 #ஈரானை அமெரிக்கா தாக்கி, கொமைனி கொல்லப்பட்டால் – அடுத்து என்ன?https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_92.html...
07/01/2026

#ஈரானை அமெரிக்கா தாக்கி, கொமைனி கொல்லப்பட்டால் – அடுத்து என்ன?

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_92.html

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதட்டமான சூழ்நிலையில், ஈரானின் ஆத்மீகத் தலைவர் ஆயத்துல்லா கொமைனி அவர்கள் ரஷ்யாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெனிசுவேலாவின் அதிபரை கடத்திச் சென்றதற்கு பின்னர், இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.

பண்டைய பாரசீகமாக (Persia) அறியப்பட்ட ஈரான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுத்துமூல வரலாற்றை கொண்ட ஒரு பண்டைய நாடாகும். உலகை ஆட்சி செய்த முக்கிய சாம்ராஜ்யங்களான ரோம், பாரசீகம் ஆகிய இரண்டில் ஒன்றாக ஈரான் விளங்கியது. போர் என்பது ஈரானிய வரலாற்றில் இயல்பான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

வரலாற்றுக் காலம் தொடக்கம், அவர்கள் சந்திக்காத போர்கள் இல்லை. உலகின் பலம் வாய்ந்த பேரரசுகளுடன் ஈரான் மோதியுள்ளது. அந்த வகையில், உலகின் முதல் “சூப்பர் பவர்” பேரரசுகளில் ஒன்றான அகேமேனிய பேரரசு (Achaemenid Empire) காலம் தொடங்கி, கிரேக்கம், ரோம், அரபுகள், மங்கோலியர்கள், ஒட்டோமான்கள், மெசபொத்தேமியா (இன்றைய ஈராக்) ஆகிய சக்திகளுடன் நேரடியாக மோதிய வரலாறு கொண்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவுடன் நடந்த போர்களும், 1980 – 1988 காலப்பகுதியில் எட்டு ஆண்டுகள் நீடித்த ஈரான் – ஈராக் போரும் முக்கியமானவை. அந்தப் போரில், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சிரியாவைத் தவிர) சதாம் ஹுசைனுக்கு ஆதரவளித்தன.

இத்தகைய கடுமையான சூழலிலும், ஈரான் தனித்து நின்று போரிட்டு, நாட்டை பாதுகாத்து தன் அரசியல் மற்றும் இராணுவ வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டியது.

இன்றைய சூழலில், அமெரிக்காவின் நவீன விமானங்களாலும், கடற்படைக் கப்பல்களிலிருந்தும் நடத்தப்படும் தாக்குதல்களால், ஈரானின் கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்க முடியும்.

ஆனால், ஈரானிய மக்களின் மனவலிமையை முறியடிக்கவோ, நிலப்பரப்பை கைப்பற்றவோ முடியாது. அதாவது, அமெரிக்கா தனது அரசியல் இலக்குகளை அடைய முடியாது.

தாக்குதலில் ஈரானின் ஆத்மீகத் தலைவர் கொல்லப்பட்டால், அரசியல் – மத அமைப்பின் அடிப்படையில் புதிய தலைமை நியமிக்கப்பட்டு போர் தொடரும். இதனால், ஈரானின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்ற முடியாது.

வெனிசுவேலாவின் ஜனாதிபதி மதுரோவை கடத்திச் சென்றிருந்தும் அவரது ஆட்சியே தொடர்கிறது என்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_92.html

ஜனாதிபதி மதுரோவை கடத்தியதற்காக ட்ரம்ப்பை குற்றம் சுமத்தலாமா ? https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_9.html வ...
07/01/2026

ஜனாதிபதி மதுரோவை கடத்தியதற்காக ட்ரம்ப்பை குற்றம் சுமத்தலாமா ?

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_9.html

வெனிசுவேலா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டு அதிபரை கடத்தியதனால் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் மீது அனைவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இது தவறானது.

ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்பு இதுபோன்ற எந்தவித அத்துமீறல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஜனாதிபதி ட்ரம்ப் மீது குற்றம் சுமத்துவது நியாயமாகும்.

ஆனால் அமெரிக்க வரலாறு முழுவதும் இரத்தக்கறை படிந்த இவ்வாறான குற்றச்ச செயல்கள் நிறைந்ததாக காணப்படுகின்ற நிலையில், ட்ரம்ப்பின் மீது மாத்திரம் குற்றம் கூறுவதில் பயனில்லை.

உலக நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுதல். அதற்கு தடையாக இருக்கிகின்ற நாடுகளின் ஆட்சி தலைவர்களை பதவியிலிருந்து அகற்றுதல், அது முடியாவிட்டால், கடத்துதல், அல்லது கொலை செய்தல் மற்றும் மக்களினால் சவால் உள்ள நாடுகளில் படைகளை நிலை நிறுத்துதல். இதுதான் அமெரிக்கா காலாதிகாலமாக கடைப்பிடித்து வருகின்ற கொள்கையாகும்.

அமெரிக்கா சில சதி வேலைகளை நேரடியாகவும், சிலவற்றை தனது வளர்ப்பு பிராணியான இஸ்ரேல் மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் கொள்கைகளை விளங்கிக்கொள்ளாமல் அதன் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் மீது மாத்திரம் விரல் நீட்டுவதில் பயனில்லை.

இன்று ட்ரம்ப் இருப்பதுபோன்று வேறு எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுதான் நடக்கும். அமெரிக்க இயந்திரத்தின் பின்னணி செயற்பாட்டாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது மாத்திரமே ஜனாதிபதியின் கடமையாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_9.html

 #புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக தகவல்  விஞ்ஞான துறையின் விசேட  பட்டத்தை பெற்றுள்ளார்.எம்.யூ....
07/01/2026

#புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக தகவல் விஞ்ஞான துறையின் விசேட பட்டத்தை பெற்றுள்ளார்.

எம்.யூ.எம்.சனூன்

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_7.html

புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக தகவல் விஞ்ஞான துறையின் விசேட பட்டத்தை புத்தாண்டு தினத்தன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெற்றுக்கொண்டார்.

இவர் 2011, 2012ம் ஆண்டு புது டில்லியில் நூலக முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சியையும் , 2014 ம் ஆண்டு பட்டய நூலகர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இலங்கை நூலகர் சங்கத்தில் (யாழ் மத்திய நிலையம்) நூலக தகவல் விஞ்ஞான வருகை தரு விரிவுரையாளராக கடமையாற்றி வருவதுடன், வட மேல் மாகாணத்தில் உள்ள நூலகர்களில் தரம் ஒன்றை சேர்ந்த நூலகராக காணப்படுவதோடு, நூலக துறையில் SUPRA தரத்திற்குரிய சகல தகைமைகளையும் இவர் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.madurankulimedia.lk/2026/01/blog-post_7.html

Address

Kanamoolai, Madurankuli
Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when Madurankuli Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurankuli Media:

Share