Puttalam Pages

Puttalam Pages புத்தளத்தில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை எங்கள் Puttalam Pages பக்கத்தில் கண்டுகளிக்கலாம்..

26/02/2024

United Petroleum enters into Sri Lankan retail petroleum market. 200 fuel stations island wide

Read more : https://rb.gy/8oiry7

புத்தளத்தின் சாதனையாளனேவருக! வருக!கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி (செவ்வாய்கிழமை) அன்று புத்தளத்தின் லகூன் அமைப்பின் ஏற்பா...
12/09/2023

புத்தளத்தின் சாதனையாளனே
வருக! வருக!

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி (செவ்வாய்கிழமை) அன்று புத்தளத்தின் லகூன் அமைப்பின் ஏற்பாட்டில், எமது உறுப்பினரான L.A.M Nafsan அவர்களுடைய இலங்கை முழுவதுக்குமான 25 மாவட்டங்களை தொடும் நோக்கில் 3 தொனிப்பொருட்களை சுமந்தவாறு, விழிப்புணர்வுமிக்க சைக்கிள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டார். இறைவனின் பாதுகாப்பு மற்றும் அவரின் முயற்சியுடன் வரும் 15ம் திகதி செப்டம்பர் 2023 (வெள்ளி) அன்று, மாலை 4 மணியளவில் KAB Auditorium வந்தடைந்து, தனது சைக்கிள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

இலங்கை மண்ணில் புத்தள
இளைஞனின் சாதனை இதுவாகும்.
இலங்கையில் முதன்முறையாக சைக்கிள்
சுற்றுப்பயணத்தின் ஊடாக 25
மாவட்டங்களை தொட்டு, கடந்த ஆகஸ்ட்
மாதம் 15ம் திகதி இப்பயணத்தை ஆரம்பித்து,
இந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி (சுமார்
ஒரு மாத காலப்பகுதிக்குள்) முடிக்கவும்
உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது மற்றும்
இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளுள் இதுவும் ஒன்றே
என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..

DATE - 15.09. 2023 ( வெள்ளிக்கிழமை )
Time - 3.00 pm
ஊர்வல ஆரம்பம் - Near Puttalam Navy Camp ( Kurunegala Rd )
நிகழ்ச்சி நடைபெறும் இடம் - KAB Auditorium Puttalam

Lagoon Team Puttalam

முஹர்ரம் புதுவருட தினத்தை முன்னிட்டு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் தரம் 6 மற்றும் தரம் 7 மாணவர்களின்  விஷேட வைபவம்.க...
20/07/2023

முஹர்ரம் புதுவருட தினத்தை முன்னிட்டு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் தரம் 6 மற்றும் தரம் 7 மாணவர்களின் விஷேட வைபவம்.

கல்லூரி தரம் 6/7 பகுதியில் பகுதித் தலைவர் A.K ஹிதாயா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட 1445 இஸ்லாமிய புது வருட தின நிகழவுகள் 2023.07.20 புதன்கிழமை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் சிறப்பாக நடாத்தப்பட்டது..

இதில் பிரதம அதிதியாக புத்தளம் ஸாஹிரா கல்லூரி அதிபர் I. A நஜீம் அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக உதவி அதிபர்களான A.அப்துல் ஆசிர், A.R ரிஸானா ரஹீம், M.N.M ஷரீக், இஸ்லாம் பாட இணைப்பாளர் மொளவியா Z.A கமருன் நிஸா அவர்களும் கலந்துகொண்டனர்.

இவ்வைபவத்தில் முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள் பற்றி
முகாமைத்துவப் பகுதித்
தலைவர் அஷ்ஷெய்க் M.R.M இர்பான்(நளீமி)
சிறப்பரை நிகழ்த்தினார்.

அத்தோடு மாணவர்கள்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

( Zahira Media )

தாய்லாந்து வரை சென்று 36th King's Cup World Sepaktakraw championship 2023ல் வெண்கல பதக்கங்களை🥉 வென்று நம் நாட்டையும் நம்...
18/07/2023

தாய்லாந்து வரை சென்று 36th King's Cup World Sepaktakraw championship 2023ல் வெண்கல பதக்கங்களை🥉 வென்று நம் நாட்டையும் நம் புத்தளத்தையும் பெருமைப்படுத்திய நம் மண்ணின் மைந்தர்களை வரவேற்கும் வீதி ஊர்வல நிகழ்வு...

புத்தளத்தைச் சேர்ந்த உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்பும் வீதி ஊர்வலமும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.

இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.

விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் அனைவரையும் இவ்வரவேற்புக்கும் வீதி ஊர்வலத்திலும் கலந்துகொள்ள வருகை தருமாறு அன்புடன் அழைப்பதுடன், எமது அழைப்பை ஏற்று உங்கள் பூரண பங்குபற்றுதலை வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

Hisham Hussain
நன்றி

2023 ஜூலை 6 - 16 வரை தாய்லாந்தில் நடைபெற்ற 36 வது King’s Cup உலக கிண்ணத்துக்கான ஸெபக்தக்ரோ போட்டியின், ஆண்கள் பிரிவில் இ...
17/07/2023

2023 ஜூலை 6 - 16 வரை தாய்லாந்தில் நடைபெற்ற 36 வது King’s Cup உலக கிண்ணத்துக்கான ஸெபக்தக்ரோ போட்டியின், ஆண்கள் பிரிவில் இலங்கை மூன்றாமிடத்தை தன்வசம் ஆக்கிக் கொண்டது.

வாழ்த்துக்கள்👏👏

லாஓஸ் தங்கப் பதக்கத்தையும், ஈரான் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை மற்றும் சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இலங்கை அணிக்காக ஆண்கள் பிரிவில்,
(1) சகீ அஹ்மத்
(2) அதீப் ஹஸன்
(3) அஸ்ஹார் ஹுஸைன்
(4) ஹஸ்ஸாம் அஹ்மத்
(5) முஹம்மத் ஆதிப்
(6) முஹம்மத் நுஸ்கி ( கம்பளை )

இந்த அணியில் குறிப்பிட்ட முதல் ஐந்து வீரர்களும் புத்தளத்தை சேர்ந்தவர்களாவர்.

" MASTERS ATHLETICS SRI LANKA " 15, 16  ஜூலை 2023 அன்று நடத்தப்பட்ட Annual Championship 2023 போட்டியில் புத்தளத்தை சேர்ந...
17/07/2023

" MASTERS ATHLETICS SRI LANKA "

15, 16 ஜூலை 2023 அன்று நடத்தப்பட்ட Annual Championship 2023 போட்டியில் புத்தளத்தை சேர்ந்த ஹுமாயூன் ஆசிரியர் மற்றும் துபைல் ஆசிரியரும் மெய்வல்லுனர் போட்டியில் பங்குப்பற்றி தேசிய ரீதியில் புத்தள மண்ணிற்கு
02 தங்கப் பதக்கங்களும்,02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றறுத் பெற்றுத்தந்துள்ளனர்..

ஹுமாயூன் ஆசிரியர்-
High Jump,200m
🥇🥇 02. Gold Medal
* 2017 ம் ஆண்டு நிகழ்த்திய 1.57 மீட்டர் உயரம் தாண்டுதல் சாதனையை முறியடித்து இம்முறை 1.60 மீட்டர் உயரம் தாண்டி New Meet Recordயினை பதிவுசெய்துள்ளார்.

துபைல் ஆசிரியர் -
100m,200m,
🥈🥈 02 Silver Medal

அதுமட்டுமின்றி 08 -12 நவம்பர் மாதம் 2023, Phillipines நாட்டில் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டியிலும் பங்குபெற உள்ளனர்.

வாழ்த்துக்கள்👏

17/07/2023

புத்தளம் லகூன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட " போதையை கொன்றொழிப்போம், சமூகத்தை வென்றெடுப்போம் " என்ற தலைப்பில் மார்க்க தெளிவு விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது....இன்று காலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநி...
12/07/2022

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது....

இன்று காலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து வி.ஐ.பி வாயிலாக வெளிநாடு செல்ல முயற்சித்த முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.

புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முழு வண்ணப் படம் வெளியிடப்பட்டது.    இந்த படம...
12/07/2022

புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முழு வண்ணப் படம் வெளியிடப்பட்டது.
இந்த படம் இன்றுவரை பிரபஞ்சத்தின் மிக ஆழமான, மிக விரிவான அகச்சிவப்புக் காட்சியாகக் கூறப்படுகிறது.

இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையின் போது.......Happy Eid Adha to you and for fa...
10/07/2022

இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையின் போது.......

Happy Eid Adha to you and for family💐💐💐

Clicks by - Asardeen

President Gotabaya Rajapaksa has informed that he will resign from the Presidency on the 13th of July 2022: Speaker Mahi...
09/07/2022

President Gotabaya Rajapaksa has informed that he will resign from the Presidency on the 13th of July 2022: Speaker Mahinda Yapa Abeywardene.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.

Address

Puttalam
613000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puttalam Pages posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puttalam Pages:

Share