SAMMANTHURAI NEWS

SAMMANTHURAI NEWS Sammanthurai Official Number 1 News Media Official Hot🔥News 📰
0763443860
Since 26/9/2019

International Diplomats நிறுவனத்தின் இலங்கைக்கான Ambassador (தூதுவர்)ஆக ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் நியமனம்!சர்வதேச இளைஞர...
08/07/2026

International Diplomats நிறுவனத்தின் இலங்கைக்கான Ambassador (தூதுவர்)ஆக ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் நியமனம்!

சர்வதேச இளைஞர் தலைமைத்துவம், இராஜதந்திரம், அமைதிக் கட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சர்வதேச அமைப்பான International Diplomatsஆக நாட்டின் முக்கிய சமூக பொறுப்புகளில் தொடர்ந்து செயற்படும் நபர்கள் தெரிவு செய்து
இலங்கையில் சிலர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனனர் பல்வேறு பகுதிகளில் இலங்கைக்கான Ambassador ஆக சமூக சேவையாளர், ஊடகவியலாளர் மற்றும் இளைஞர் அமைப்பின் தலைவர் முபாறக் அஸ்லம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

International Diplomats என்பது உலக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களை ஒன்றிணைத்து, இராஜதந்திரம், தலைமைத்துவம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs), அமைதி, மனித உரிமைகள், கலாசார பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பயிற்சிகள், மாநாடுகள் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை வழங்கும் முன்னணி சர்வதேச அமைப்பாகும்.

இந்த சர்வதேச அங்கீகாரம், சமூக சேவை, இளைஞர் மேம்பாடு, ஊடகப் பணிகள் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் திரு. முபாறக் அஸ்லம் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பிற்கான பாராட்டாகக் கருதப்படுகிறது.

மற்றும் தற்போது LOLC Life Assurance – கல்முனை கிளையில் Senior Sales Manager • SSM ஆகப் பணியாற்றி வருகிறார். அதேவேளை, இலங்கையின் ஊடகத் துறையிலும் செயற்பட்டு வரும் அவர், சமூக நலன், அரசியல் இளைஞர் அதிகாரமளித்தல், மனிதநேய சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இலங்கைக்கான International Diplomats Ambassador என்ற புதிய பொறுப்பின் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல், தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல், உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அமைதி, மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் பணிகளில் அவர் செயற்படவுள்ளார்.

எஸ். முபாறக் அஸ்லம் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும், அவரின் எதிர்கால சர்வதேசப் பணிகள் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Journalist Mubarak Aslam Appointed as Ambassador for Sri Lanka by International Diplomats

Journalist, social worker, and youth leader S. Mubarak Aslam has been appointed as an Ambassador for Sri Lanka by International Diplomats, a global organization dedicated to promoting international youth leadership, diplomacy, peacebuilding, and global cooperation.

International Diplomats recognizes and appoints outstanding individuals who have demonstrated excellence in community service, leadership, youth empowerment, and international engagement. As part of its latest ambassadorial appointments, several individuals from Sri Lanka have been selected to represent the organization, with S. Mubarak Aslam being among those honored.

International Diplomats is a leading international organization that brings together young people, students, professionals, and emerging leaders from around the world. The organization provides global opportunities through leadership training, international conferences, diplomacy initiatives, cultural exchange programs, peacebuilding activities, human rights advocacy, and programs aligned with the United Nations Sustainable Development Goals (SDGs).

This international recognition reflects Mr. Mubarak Aslam’s continued commitment to community service, youth development, journalism, and leadership.

Currently, Mr. Mubarak Aslam serves as the Senior Sales Manager (SSM) at LOLC Life Assurance – Kalmunai Branch. Alongside his professional career, he is actively engaged in the media sector and continues to contribute to social welfare, youth empowerment, humanitarian initiatives, political awareness, and public education.

In his new role as International Diplomats Ambassador for Sri Lanka, he will work to introduce Sri Lankan youth to international opportunities, strengthen leadership skills, promote global collaboration, and support initiatives related to peace, human rights, diplomacy, and sustainable development.

We extend our heartfelt congratulations to S. Mubarak Aslam on this prestigious international appointment and wish him every success in his future endeavors representing Sri Lanka on the global stage.

14/05/2026
🚨 Job Opportunity at LOLC Life Assurance Kalmunai Branch 🚨📌 Only 10 Vacancies Available!📄 More Details:Send Your CV Toda...
10/05/2026

🚨 Job Opportunity at LOLC Life Assurance Kalmunai Branch 🚨

📌 Only 10 Vacancies Available!

📄 More Details:
Send Your CV Today!
📞 076 344 3860

Please Share Your sharing will be helpful for job seekers. நீங்கள் பகிர்வதன் மூலம் இன்னொருவருக்கு பிரயோசனமாக இருக்கும்

சம்மாந்துறை SJB மற்றும் STR இளைஞர் அணியின் இப்தார் நிகழ்வு:சம்மாந்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் Samagi Jana Balawegaya)  ...
14/03/2026

சம்மாந்துறை SJB மற்றும் STR இளைஞர் அணியின் இப்தார் நிகழ்வு:

சம்மாந்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் Samagi Jana Balawegaya) (SJB) மற்றும் STR இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு 12-3-2026 வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது

இந்த நிகழ்வு கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, நிகழ்வின் அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சமீம் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களான இறக்காமம் அமைப்பாளர் நப்ரிஸ், நிந்தவூர் அமைப்பாளர் ஜெமீல். முஹமட் அலி மற்றும் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ரமழான் மாதத்தின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026 ஆண்டு புதிய நிர்வாக சபை தெ...
02/03/2026

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும்
கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026 ஆண்டு புதிய நிர்வாக சபை தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும்!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இயங்கும் கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும் 2-3-2026 திங்கட்கிழமை சங்கத் தலைவர் முபாறக் அஸ்லம் அவர்களின் தலைமையில், அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

மேலும், 2025ஆம் ஆண்டு கருவாட்டுக்கள் 2 சக வாழ்வுச் சங்கத்தின் சங்க அமர்வுகளுக்கான கூட்ட அறிக்கையும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்

இவ் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஏ. எம். வாஜித் அலி, கருவாட்டுக்கள் 2 கிராம நிலதாரி நிஹாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் நழிபா மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக:
• சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்கள்
• பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்
• கிராம மட்ட அபிவிருத்தி திட்டங்கள்
• சமுதாய ஒற்றுமையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள்
போன்ற முக்கிய
எதிர்கால செயல்திட்டங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை

தலைவர் – முபாறக் அஸ்லம்
செயலாளர் – அஸ்மியா
பொருளாளர் – றினோ
உப தலைவர் – றனிசா
உப செயலாளர் – தாஜூதின்

📌 செயற்குழு உறுப்பினர்கள்
1. UL அவ்வா உம்மா
2. AL ஜுனைதா
3. சிபானா
4. MM பாயிசா
5. B ஹில்மியா
6. B ஹிதாயா
7. சபானா

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டில் சங்கத்தின் நோக்கங்களையும் சமூகப் பணிகளையும் மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் சக வாழ்வு பண்பையும் மேம்படுத்தும் முக்கியமான கட்டமாக அமைந்தது.

அம்பாறை மாவட்ட SJB இளைஞர் சக்தி அணி வாக்களிப்பு மூலம் தெரிவு!செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)...
12/02/2026

அம்பாறை மாவட்ட SJB இளைஞர் சக்தி அணி வாக்களிப்பு மூலம் தெரிவு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான “சமகி” பயிற்சி பட்டறையும், மாவட்ட இளைஞர் அணி நிறுவும் நிகழ்வும் 08.02.2026 அன்று அம்பாறை விடுதி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய அளவில் முன்னெடுக்கப்படும் இளைஞர் அணி அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன அவ் நிகழ்வில்

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசாத் சிரிவர்தன (இளைஞர் சக்தியின் தவிசாளர்) மற்றும் சுரங்க ரத்னாயக ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு, ஜனநாயக விழிப்புணர்வு, எதிர்கால செயற்பாடுகள், தலைமைத்துவ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, வாக்களிப்பு முறையின் மூலம் அம்பாறை மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள்:

தலைவர் – எம்.ஐ. பௌசுல்லா (சம்மாந்துறை)

செயலாளர் – முபாறக் அஸ்லம் (சம்மாந்துறை)

பொருளாளர் – என்.எம். ஜெஸ்ரான் (சம்மாந்துறை)

இணைப்பாளர்
Tvah . Dulanji
நாமல்ஓயா

உப தலைவர்
Lahiru lakshan
தெஹியத்த கண்டி

உப இணைப்பாளர் – எஸ்.எல். ஆகிப் (சம்மாந்துறை)

உப செயலாளர்
Gs. Subhashani Gurusinha
நாமல்ஓயா

உப பொருளாளர்
Dissanayaka
தெஹியத்த கண்டி

Mohan Prakash
உப இணைப்பாளர்
வளத்தாபிட்டி

போன்றோர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்
மேலும் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து மாவட்ட முக்கிய நிர்வாக பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்கள்
சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கீழ் வெற்றி பெற்றனர்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகத்திற்கு, எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணிக்காக இளைஞர்களை இணைக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை வழிநடத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தில் ஜனநாயக அடிப்படையிலான இளைஞர் நிர்வாக அமைப்பை உருவாக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர் அணிக்கு சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உ...
09/02/2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர் அணிக்கு
சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உப இணைப்பாளர் வாக்களிப்பு மூலம் தெரிவு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான சமகி பயிற்சி பட்டறை மற்றும் மாவட்ட இளைஞர் அணி நிறுவும் நிகழ்வு இன்று (08.02.2026) அம்பாறை விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசாத் சிறிவர்தன மற்றும் சுரங்க ரத்னாயக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன், கட்சியின் இளைஞர் பங்களிப்பு, அரசியல் விழிப்புணர்வு, எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் பேரில், இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் அணி நிறுவும் பணியின் முதல் கட்டமாக இந்த திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, வாக்களிப்பு முறையின் மூலம் அம்பாறை மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்படி,

அம்பாறை மாவட்ட இளைஞர் அணி தலைவர் : சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ. பௌசுல்லா

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த: முபாறக் அஸ்லம்

பொருளாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த:: என்.எம். ஜெஸ்ரான்

உப இணைப்பாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த:: எஸ்.எல். ஆகிப்

ஆகியோர் வாக்களிப்பு மூலம் வெற்றி பெற்றனர்.

இதனுடன், உப தலைவர், உப செயலாளர், உப பொருளாளர் தெஹியத்த கண்டி நாமல் ஓயா வளத்தாபிட்டி பதியத்தலாவ உஹன அம்பாறை உள்ளிட்ட பிரதேச உறுப்பினர்கள் பிற நிர்வாக பதவிகளுக்கும் தகுதியான இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வு, அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி, தலைமைத்துவ வளர்ச்சி மற்றும் ஜனநாயக அடிப்படையிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைந்த ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

🇱🇰 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰எமது அன்புத் தாய்நாடு இலங்கை,ஒற்றுமை, அமைதி, சமத்துவம்மற்றும் முன்னேற்றம் நிறை...
04/02/2026

🇱🇰 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰

எமது அன்புத் தாய்நாடு இலங்கை,
ஒற்றுமை, அமைதி, சமத்துவம்
மற்றும் முன்னேற்றம் நிறைந்த
ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
பயணிக்க வாழ்த்துக்கள்!

நாம் அனைவரும் ஒரே தாய் நாட்டின்
மக்கள் — தமிழ், சிங்கள, முஸ்லிம்,
கிறிஸ்தவர் என எந்த வேறுபாடும் இன்றி,
அனைத்து இனங்களும் அனைத்து மதங்களும்
ஒற்றுமையோடு கை கோர்த்து
முன்னேற வேண்டிய தருணம் இதுவே.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம்
அனைவருக்கும் நீதி, மரியாதை
மற்றும் மனிதநேயம் கிடைப்பதே.
அந்த உயர்ந்த இலட்சியத்தை
ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். ✨

ஒற்றுமையே எமது பலம் – அதுவே இலங்கையின் எதிர்காலம். 🇱🇰

ஜனாஸா அறிவித்தல்
27/01/2026

ஜனாஸா அறிவித்தல்

சம்மாந்துறையில் வீட்டுடன் கூடிய கடை விற்பனை அறிய சந்தர்ப்பம் யாரும் தவற விட வேண்டாம் 🏡 House & Shop for Sale – Prime Loc...
25/01/2026

சம்மாந்துறையில் வீட்டுடன் கூடிய கடை விற்பனை அறிய சந்தர்ப்பம் யாரும் தவற விட வேண்டாம்
🏡 House & Shop for Sale – Prime Location, Sammanthurai Town 🏪

Property Type:
✔️ 3-Bedroom House with

1 Shop
Land Size:
📏 3.8 Perches

House Details:
• 2 Bedrooms with wooden
flooring
• Fully tiled house
• Approx. 15 years old
• Water & electricity facilities available

Excellent Location Advantages:
📍 Only 70m from Sammanthurai Seylan Bank

📍 150m from Sammanthurai Clock Tower

📍 150m from Sammanthurai Town Hall

✨ Ideal for residential or business purposes in the heart of Sammanthurai town.
📞 Contact: 0763443860 /072 260 2700

Price:2.20C and negotiable

📲 Call for more details and viewing arrangements.

Address

Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when SAMMANTHURAI NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAMMANTHURAI NEWS:

Shortcuts

Share