Gramma College Sammanthurai

Gramma College Sammanthurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gramma College Sammanthurai, Media/News Company, Ampara Road, Sammanthurai.

17/02/2023
உணவின்றி தவிர்ப்பது அடுத்த வருடமும் நீடிக்கும், நெருக்கடி 2 வருடங்களுக்கு தொடரும் - ஜனாதிபதி
14/09/2022

உணவின்றி தவிர்ப்பது அடுத்த வருடமும் நீடிக்கும், நெருக்கடி 2 வருடங்களுக்கு தொடரும் - ஜனாதிபதி

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜ.....

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ...
08/09/2022

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படவில்லை. 3ம் திகதியில் இருந்து இன்று வரை மின்வெட்டு இல்லை. அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படவில்லை. 5ம் திகதி, வழங்கல் அதிகரித்துள்ளது. தேவையான அளவை விட அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் தற்போது உள்ளது. எனவே, இந்த நிலக்கரி பிரச்சினை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வரவில்லை என்றால் ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது. தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை. மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.

வறுமையை காரணமாக வைத்து மாணவர்கள் கல்வியை கைவிடக் கூடாது கல்வியே எமது மூலதனமாகும்-அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்...
08/09/2022

வறுமையை காரணமாக வைத்து மாணவர்கள் கல்வியை கைவிடக் கூடாது கல்வியே எமது மூலதனமாகும்-அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்!

(எம்.என்.எம்.அப்ராஸ்,எம்.ஐ.சம்சுதீன்)

மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால் சமுர்த்தி திணைக்களமானது புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்

சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் உயர்தர மாணவர்களுக்கான (2021-2023) சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும்,சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்று பல்கலைக்கழகத்திற்க்கு தகுதி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும்,கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர். எம்.சாலிஹ் தலைமையில் நேற்று பிற்பகல் (07)கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் மேலும் இங்கு உரையாற்றுகையில்

சமுர்த்தி திட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பதாகும் அவ்வாறு இருக்கும் போது நீங்கள் சிந்திக்கலாம் வறுமையை ஒழிப்பதற்க்கு ஏன் புலமை பரிசில் வழங்க வேண்டுமென்று புலமைபரிசில் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்ய முடியும இதன் மூலம் குடும்பம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

ஆரம்பத்தில் நானும் கல்முனை பிரதேச செயலாளரும் சமுர்த்தி குடும்பத்திலிருந்து இந்த உயர் பதவிகளுக்கு வந்தவர்கள் தான்,அதே போன்று ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் தான் பிற்காலத்தில் உலகில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியாவின் ஜனாதிபதியானார் ,கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சை சாதரண குடும்ப தொழிலாளியின் மகனாவார் இப்படி இவர்கள் கல்வின் முலம் தலை நிமிர்ந்து வாழ முடியுமானால் உங்களுக்குக்கும் அது ஏன் முடியாத விடயமா ?

கல்வியை என் நிலையிலும் மாணவர்கள் விட்டு விடக் கூடாது கல்வி என்பது எமது மூலதனம் இங்கு உள்ள மாணவர்கள் அனைவரும் நாளை சமூகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் நாம் இருக்கும் கதிரையில் எதிர்காலத்தில் மாணவராகிய நீங்கள் முன்னனால் அமர்ந்து அலங்கரிக்க வேண்டும்.

சிங்கப்பூர் நாடு தலை சிறந்த நடாக மாறுவதற்கு பிரதான காரணம் கல்வியாகும்.ஒரு காலத்தில் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக பணம்,வளங்கள் கச்சா எண்ணெய் போன்ற சில பொருட்கள் காணப்பட்டது ஆனால் இனி வரும் காலங்களில் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக கல்வியறிவு மாறவுள்ள நிலை காணப்படுகின்றது பொதுவாக எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் முக்கியத்துவமளிக் கும் மூலதனமாக கல்வியறிவு காணப்படுகின்றது

இதே போன்று எமது வறுமையான குடும்பத்தில் மூலதனமாக கல்வியறிவு இருக்க வேண்டும் நாமும் சமுகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப கல்வியறிவு மிகவும் அவசியமாகும்

கல்வியின் மூலமே குடும்பம் தலை நிமிர்ந்து வாழ வைக்கும் உலக நாட்டுடன் எமது நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக மாற்ற வேண்டியது மாணவர்களின் கடமையாகும் மேலும் மாணவர்கள் மொழி அறிவினை விருத்தி செய்வது அவசியமானதாகும் அதே போல் எமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் இதன் மூலம் நாம் முன்னேற்றமடைந்து கொள்ள முடியும் நாம் உயரத்தில் கல்வி கற்கும் போது கல்வி கற்க்கும் துறையில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் வறுமையை காரணமாக வைத்து கல்வியை கைவிடக் கூடாது இதற்காய் வெட்கப்படவும் கூடாது வாழ்வில் கஷ்ட்டம் வருவது வழமை தான் ஆனால் அது வாழ்வில் தொடர்ச்சியானதாக இருக்காது என்பதை நினைவூட்டுகிறேன்.

எதிர்காலத்தில் மாணவர்கள் நீங்கள் எல்லோரும் சமூகத்தில் முக்கிய துறைகளில் பங்காற்றும் வழிகாட்டியாக வர வேண்டும் என்றார் .

அத்துடன் குறித்த நிகழ்வின் விசேட அம்சமாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்ற மாணவர்கள் இருவர் அண்மையில் வெளியாகிய கல்வி பொது தர உயர் தர பெறுபெற்றின் படி பல்கலைக்கழகத்திற்க்கு தகுதியடைந்த கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து மருத்துவபீடத்துக்கு தகுதி பெற்ற மாணவி எஸ்.டி.எப்.சஜியா,மருதமுனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து பொறியியல் துறை பீடத்துக்கு தெரிவான அல் மனார் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) மாணவன் எம்.என்.இன்சாப் ரஜாயி ஆகியோர் இதன் போது இங்கு கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதன் போது பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தகுதி பெற்ற மாணவி எஸ்.டி.எப்.சஜியா மாணவர்கள் , அதிதிகள் மத்தியில் உரையாற்றுகையில்,மாணவர்களின் கல்விக்கு இவ்வாறான உதவிகள் கிடைப்பது பயன்மிக்கதாய் காணப்பட்டது நான் சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரம் விஞ்ஞான பிரிவுல் கற்ககையை தொடர்ந்தேன் விஞ்ஞான பிரிவில் கற்கும் போது அதிகம் கற்றல் செயற்ப்பாட்டின் போது அதிகம் பணம் செலவாகும் எனது கற்றல் நடவடிக்கைக்கு புலமை பரிசில் மிகப்பெரிய உதவியாக இருந்தது இதனை சரியாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும் உயர் தர பரீட்சை என்பது மிகவும் போட்டி நிறைந்தது சரியான முறையில் திட்டமிட்டு மாணவர்கள் கல்வியை கற்க வேண்டும் இதன் மூலம் எமது இலக்குகளை அடைய முடியும் இவ்வாறான புலமை பரிசில் உதவிகள் மூலம் எனது கல்வி நடவடிக்கைக்கு பயன் மிக்கதாய் காணப்பட்டது.இன்று எனக்கு சிறந்த பேருபெறு கிடைத்துள்ளது இதற்காய் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார் இவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து 216மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்அலி,அவர்களும் மற்றும் கல்முனை பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா,மகாசங்க உதவி முகாமையாளர் எம்.எம்.மன்சூர்,சமுர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.கமால்தீன்,கல்முனை சமூர்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ்,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக எம். ஏ.எம்.பைசால்,மருதமுனை சமூர்தி வங்கி வலய உதவி முகாமையாளர் பி.எம்.இஸ்ஹாக்,கல்முனை சமுர்த்தி வங்கி வலய உதவி முகாமையாளர் ஐ.எல்.அர்சுத்தின், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கலான எம்.எஸ்.அக்பர் ஹலிம், ஏ.எஸ்.எம்.ஜஹ்பர்,சகல பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலைக்கான காசோலையும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

தாங்க முடியாத கடனைக் கொண்ட நாடுகளில் பட்டியலில்  இலங்கையும் உள்ளது – IMFராஜபக்சக்கள் செய்த திருட்டு வேலையினால் நாடு படுப...
08/09/2022

தாங்க முடியாத கடனைக் கொண்ட நாடுகளில் பட்டியலில் இலங்கையும் உள்ளது – IMF
ராஜபக்சக்கள் செய்த திருட்டு வேலையினால் நாடு படுபாதாளத்தில் சென்றுள்ளது ஆனால் அதை மறைத்து விட்டு, அதே ராஜபக்சாகள் கூட்டம் மீண்டும் அமைச்சர் பதவிகளில் பதவி கிடைத்துள்ளது.
கடன் நிலைமை இனி நிலைத்திருக்க முடியாத நாடுகளில் இலங்கையும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“முழு மனிதகுலத்தையும் அரவணைத்து, மிகவும் சோதனையான தருணங்களில் ஒன்றிணைவதற்கான அழைப்புக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். இதை நான் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து ஆதரிக்கிறேன். இந்த அதிர்ச்சிகள் மக்களை சோர்வடையச் செய்துள்ளன என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் தொற்றுநோயால் சோர்வடைந்துள்ளனர். இப்போது அவர்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என அவர்
தெரிவித்தார்.
பல நாடுகளில், நிதி இடம் இல்லாமல் போய்விட்டது, மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில் 25 சதவீத கடன் நிலைமை இனி நிலையானதாக இல்லை. “இலங்கை மற்றும் இதே நிலையில் உள்ள பல நாடுகளை சற்று சிந்தித்துப் பாருங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கானா போன்ற வலுவான அடிப்படைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கூட, வெளிப்புற அதிர்ச்சிகளால் சந்தைகளை அணுகுவது கடினமாக இருக்கும் சூழ்நிலையில் இருப்பதைக் காண்கிறோம். மேலும் ஏழ்மையான நாடுகளில், 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கடன் நெருக்கடியில் உள்ளனர் அல்லது ஆபத்தில் உள்ளனர். எனவே, நான் இதைப் பார்க்கும்போது படம், முடிவு என்ன?பலமான வங்கித் துறையும் நிதி ஸ்திரத்தன்மையும் இருக்கும் வரை நமது பொருளாதாரங்களை ஒப்பீட்டளவில் எளிமையான வழிமுறைகள் என்று நாம் இனி நினைக்க முடியாது.நினைவில் கொள்ளுங்கள்-நிதி நெருக்கடிக்குப் பின்னர் உலகம் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தியது மேலும் மீள்தன்மையுடையது.இப்போது, ​​பின்னடைவு பற்றிய கருத்தாக்கம் இன்னும் விரிவானதாக விரிவடைய வேண்டும்.எங்களுக்குப் படித்த, ஆரோக்கியமான மற்றும் சில சமூகப் பாதுகாப்பின் பாதுகாப்பைக் கொண்ட மீள்தன்மையுள்ள மக்கள் தேவை.எமக்கு மீள்வழங்கும் பொருளாதாரங்கள் மாத்திரம் தேவையில்லை. மக்கள் தங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், நியாயம் இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைகள் இருப்பதாகவும் உணர்கிறார்கள். மேலும் எங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான கிரகம் தேவை,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

*போதைபொருள் பாவனை - பாடசாலை மாணவர்களின் பைகளை பரிசோதிக்க நடவடிக்கை..!**விபரம்*:
07/09/2022

*போதைபொருள் பாவனை - பாடசாலை மாணவர்களின் பைகளை பரிசோதிக்க நடவடிக்கை..!*

*விபரம்*:

நகர்ப்புற மற்றும் பிரதான பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்...

இலங்கையை வங்குரோத்தடையச் செய்தவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர...
07/09/2022

இலங்கையை வங்குரோத்தடையச் செய்தவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், (06) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் உள்ளூர் ஊழல் ஆகிய தண்டனை விலக்கு உட்பட பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையை மீட்பதற்கும், நெருக்கடியின் அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பதற்கும் ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மீதான நம்பிக்கை மற்றும் அமைதியான போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

https://www.jaffnamuslim.com/2022/09/blog-post_35.html

பாராளுமன்றம், மக்கள், புதிய ஜனாதிபதி – கற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான பாடங்கள்Daily FT இணையத்தள ஆசிரியர் தலையங்கம் - வியா...
07/09/2022

பாராளுமன்றம், மக்கள், புதிய ஜனாதிபதி – கற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான பாடங்கள்

Daily FT இணையத்தள ஆசிரியர் தலையங்கம் - வியாழன், 21 ஜூலை 2022

தமிழாக்கம் : முஹம்மத் பகீஹுத்தீன்.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்காவை 20 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் தெரிவு செய்தது. அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். பிரதான எதிர் தரப்பு போட்டியாளரான டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளுக்குகள் மாத்திரமே கிடைத்தன.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இடைக்கால ஜனாதிபதியை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும். இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் டி.பி. விஜேதுங்க பிரேமதாசவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அன்று இடக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விஜேதுங்க அவர்கள் பிரேமதாசவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகவும் மற்றும் அவரது இயல்பான வாரிசும் ஆவார். அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தது. மேலும் பிரேமதாசாவின் எஞ்சிய பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கான சட்டப்பூர்வத்தன்மையும் மக்களின் ஆணையும் அவருக்கு இருந்தது.

2022 ஆண்டில் நிகழ்நதுள்ள விடயங்களும் மிகவும் வித்தியாசமானது என்று குறிப்பிடுவதற்கு இல்லை.

80 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மிகவும் பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே விக்கிரமசிங்க ஆவார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க கால்நூற்றாண்டு காலம் ஐ.தே. கட்சியின் தலைவராக இருந்த நிலையில் 2020 ஆண்டில் நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவரது தலைமையின் கீழ் களமிறங்கிய ஐ.தே.கட்சி நாடளாதவிய ரீதியில் பெற்ற வாக்குகள் வெறும் 3 வீதத்திற்கும் குறைவானதாகும். படுமோசமான தோல்வியை சந்தித்த அந்தத் தேர்தலில் ஐ.தே.க.வின் எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் புண்ணியம் காரணமாக அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது.

ஜனநாயகத்தை மதிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியின் தலைவர் இவ்வளவு மோசமான படுபயங்கரமான தோல்வியை சந்திக்க நேரிட்டால் கட்டாயமாக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதுதான் ஒரு கனவான் அரசியல்வாதிக்கு மரியாதையாகும். இங்கு அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட தனியொரு ஆசனத்தை நிரப்புவதற்காக ரணில் விக்கிரமசிங்க தன்னை தானே நியமித்துக் கொண்டார்.

கடந்த மே மாதம், கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு யூ.என்.பி தலைவர் ஒப்புக்கொண்டமை யாருமே எதிர்பார்க்காத விடயமாகும். இதனால் ஜனாதிபதி கோட்டாபயவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடுமுழுவதும் பொங்கி எழுந்த மக்கள் இயக்கத்தின் உயிரோட்டத்தையே அவர் நிலைகுலையச் செய்து விட்டார்.

ரணிலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருந்த இறுக்காமான சம்பந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு கடும் நஞ்சாகவே பட்டது. அவர்கள் 'கோட்டா கோ ஹோம்' என்ற எதிர்ப்புக் கோஷத்துடன் விக்கிரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாகவே முன்வைத்தனர்.

இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தனது பதிவி காலத்தில் இராஜினாமா செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான ஆணையைப் பெற்ற ராஜபக்ச அவர்கள் மிக மோசமனா முறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யதன் காரணமாக ஆட்சி செய்வதற்கான சட்டபூர்வ தன்மையை இழந்தவராகக் கருதப்பட்டார்.

இலங்கை மண்ணில் ஜூலை 9 ஆம் திகதியன்று மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததை உலகமே அறிந்தது. பொங்கியெழுந்த மக்களின் ஆக்ரோசம், வெறுப்பு கடும் அதிருப்தி காரணமாக, ரணில் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் முற்றிலும் இழந்துவிட்டார் என்பதையே அது நிரூபித்துள்ளது.

தற்போது நாட்டில் பற்றி எரியும் சில கேள்விகள் உள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரினால் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருக்கும் போது ஆட்சியதிகாரம் செய்வது தர்மமாகுமா? அது ஒரு கனவான் அரசியலாகுமா? விக்கிரமசிங்கவை தெரிவு செய்ததன் மூலம் மக்கள் எழுச்சி இயக்கத்தின் விருப்பத்தை பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளதா? போராட்டக்காரர்களின் அழைப்புக்கு பாராளுமன்றம் செவிசாய்த்துள்ளதா?

நேற்றைய வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இந்தக் கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்பதே திட்டவட்டமான பதிலாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க சட்டப்பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத்தின் பொறிமுறையும் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையில் சட்டப்படியும் அமைந்தன. ஆனால் சட்டபூர்வதன்மையுடையது என்பதற்கும் சட்டப்படி என்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. பாராளுமன்றம் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளமை இந்த வேறுபாட்டை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆணை கிடையாது. அவர் ஒரு கும்பலின் பிரதிநிதியாக இருந்தன் மூலம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். உண்மையில் அவர் பெரும்பான்மையான SLPP வாக்குகளின் பலத்தால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை பொதுசன முன்னணி (SLPP) எனும் அரசியல் கூட்டணி பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த கடும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒரு கட்சியாகும். அக்கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வந்துள்ள ஜனாதிபதியும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அல்ல என்பது தெளிவு.

பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவிற்கு பாதுகாவலராக வரக்கூடிய ஜனாதிபதிகள் விக்கிரமசிங்கவாக அல்லது வேறு பிரதிநிதிகளாக இருக்கட்டும், அவர் யாராக இருந்தாலும் பதவியில் இருந்து வெளியேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றே மக்கள் எழுச்சிப் போராளிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற இலங்கை தேசத்திற்கு, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு அவருடைய ஒரு பாதுகாவலராக அமையும் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதால் அந்த இலக்கை அடையவே முடியாது. மக்கள் எழுச்சி இயக்கமானது, ராஜபக்ச கும்பல்களால் தெரிவு செய்யப்படும் அடுத்த வாரிசை நிச்சயமாக எதிர்க்கும். துரிதமான பாரிய ஒரு செயற்திட்டம் அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான விரைவான ஒரு திட்டம் கொண்டுவரப்படாத வரை எழச்சிப் போராளிகளின் அழுத்தும் கூடுமே தவிர குறையாது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தீர்க்கமான ஒரு தெரிவுதான் உள்ளது. அது என்ன வென்றால், 19வது திருத்தத்தில் பொதிந்துள்ள கட்டமைப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மற்றும் ஒழுங்குவிதிகளையும் குறைந்தபட்சம் மீட்டெடுக்கும் வகையில் 21வது திருத்தத்தை விரைவாக நிறைவேற்றுவதாகும். அதுவே தற்போதைய ஸ்திரத்தன்மைக்கான ஒரே வழியாகும்.

அடுத்த தேர்தலில் மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வரையில் ஒரு அமானிதமாகவே ஜனாதிபதி ரணில் தனது பதவியை வகிக்கிரார் என்பதை இடைக்கால ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டம் கட்டமான மாற்றம் வேண்டும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற பெரும் கூச்சல் நிறைந்த சூழலில், வீதியில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான சமிக்ஞையை கொடுக்காமல் ஜனாதிபதி விக்கிரமசிங்க வினைத்திறனுடன் ஆட்சி செய்வார் என நம்ப முடியாது. அதுவும் அவர் தனக்கு முன்சென்றவரின் கசப்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினாலே தவிர நிறைவேறாது.

Address

Ampara Road
Sammanthurai

Telephone

+94767790995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gramma College Sammanthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share