LeadNews

LeadNews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LeadNews, Media/News Company, Sammanthurai.

இரவு பகல் பாராது களத்தில் சுகாதார தரப்பினர்;சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !  #சம்மாந்துறைசம்மாந்துறை ஐ...
06/05/2021

இரவு பகல் பாராது களத்தில் சுகாதார தரப்பினர்;சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை ! #சம்மாந்துறை

சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை வர்த்தக சம்மேளன தலைமையிலான இளைஞர் குழு, பாதுகாப்பு படையினர் இணைந்து சம்மாந்துறை பிரதேசத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு நேற்று(05) இரவு திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை விளினையடி சந்தி, போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத் திடீர் பரிசோதனை நடவடிக்கையானது தினமும் இரவு 10.00 மணிவரை நடைபெற இருப்பதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்ததோடு சுகாதார வழிமுறையை பேணாதோர் மீது கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெசாக் மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகை காலம் என்பதனால் மக்கள் புத்தாடைகள் மற்றும் பண்டிகை கால கொள்வனவில் சம்மாந்துறை வர்த்தக நிலையங்களில் பரபரப்பாக இயங்கிவருவதனால் சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

500 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்க சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு!சம்மாந்துற...
15/04/2021

500 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்க சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு!

சம்மாந்துறை நிருபர்
(ஐ.எல்.எம் நாஸிம்)

புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பள்ளிவாசல்களின் கீழுள்ள மஹல்லாவாசிகள் 500 பேருக்கு பேரிச்சம் பழங்கள் வழங்குவதற்காக சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) காலை ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட பகுப்பாய்வாளர் அஸ்மி யாசீன் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அமைப்புக்களின் தலைவர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பேரீச்சம் பழங்களை பங்கிட்டனர்.

533 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தொலைபேசி எண்கள், தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின...!🟥In Sri Lanka - On, April...
04/04/2021

533 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தொலைபேசி எண்கள்,

தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின...!

🟥In Sri Lanka - On, April 04, 2021

நூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்படுத்தப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்.

இதில் அமெரிக்காவில் 32 மில்லியன் பயனர்கள், இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனர்கள் மற்றும் இந்தியாவில் 6 மில்லியன் பயனர்கள் ஆகியோரின் தரவுகளும் அடங்கும்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் பயனாளர்கள் நேரடியாக பட்டியலிடப்படவில்லை. எனினும் ஏனைய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் மில்லியன் கணக்கானவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்படுத்தப்பட்ட தரவு தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த திகதிகள், சுயவிவர வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்களில் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவையும் உள்ளன.

பேஸ்புக்கின் தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் ஷெப்பர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரவு திருடப்பட்டதாகக் கூறினார், மேலும் நிறுவனம் இந்த சிக்கலைக் கண்டுபிடித்து சரி செய்தது.

ஆனால் சனிக்கிழமையன்று வெளிப்படுத்தப்பட்ட தரவுகளை கண்டறிந்த சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால், பிசினஸ் இன்சைடரிடம் தகவல் திருட்டு அல்லது ஃபிஷிங் மோசடிகளுக்கு இணையத்தள மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.

பேஸ்புக் மற்றும் அதன் சமூக ஊடக தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் மீதான பயனாளர்களின் நம்பிக்கை ஏற்கனவே குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

01/01/2021
கல்முனை பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் Covid 19 இன்றைய நிலவரம்20.12.2020
20/12/2020

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் Covid 19 இன்றைய நிலவரம்
20.12.2020

வழி விலகாத வேதாந்த விதிகள்!-சுஐப் எம். காசிம்-மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக "கொவி...
19/12/2020

வழி விலகாத வேதாந்த விதிகள்!
-சுஐப் எம். காசிம்-

மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக "கொவிட் 19" சூழலைப் பயன்படுத்தி இருக்கலாம். கலாசாரப் பாகுபாடுகள், இலங்கையில் ஏற்படுகிறதா? என வெளிநாடுகளில் நோக்கப்படுமளவுக்கு, ஜனாஸா எரிப்பின் எதிரொலிகள் ஏற்படுத்தி வருகின்றன. "உள்நாட்டுப் பிரச்சினைகளை ஊருக்குள்ளே பேசித் தீர்ப்போம், வெளிநாடுகளின் தலையீடுகள் வேண்டியதில்லை" என்ற ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசுக்கு, லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பிரிட்டன் பாராளுமன்ற கவனயீர்ப்பு உரைகள் என்பன அதிருப்தியை ஏற்படுத்தியேயிருக்கும். லண்டன் முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தின் அடித்தள சக்திகளை அடையாளம் காணும் பொறுப்புக்கள், ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்காது. நாட்டை சர்வதேசக் களத்துக்கு கொண்டு சென்ற விடயத்தில் இந்த அரசு சோம்பேறியாக இருக்கப் போவதில்லையே!.

கனத்தையில் தொடங்கப்பட்ட கபன் சீலை போராட்டம் மத, இன வேறுபாடுகள் இன்றி, நாடு தழுவிய ரீதியில் பரவியமையும் அரசுக்கு நமைச்சலாக இல்லாதிருக்காது.
இந் நிலையில் புலிகள் சார்பான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், லண்டன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கான ஆதாரங்கள் ஊர்ஜிதமானால் நிலைமைகள் நிச்சயமாக வேறு திசையிலேயே பயணிக்கும். சிறுபான்மைச் சமூகங்களை ஒன்றிணைக்க விரும்பும் அந்நிய ஆதிக்க சக்திகளின் ஏற்பாடாகவே தென்னிலங்கைக்கு இது காட்டப்படும். இது ஏற்படாதிருந்தால் மாத்திரமே, லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவைக்கான களப்பணி எனலாம்.

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயம், எந்த வகையிலும் நியாயத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், இந்த உரிமைக்கான குரல்கள், ஒரே கருத்தில் இருக்கவில்லை என்பதுதான் கவலை. சித்தாந்தம் வேறு, வேதாந்தம் வேறு என்ற புரிதலில் உள்ள பலவீனங்களே, இந்த உரிமைக்கான வெற்றியைத் தூரமாக்கி வருகின்றது.

"இஸ்லாம் விரும்பும் உச்சபட்ச ஆத்மீக ஒழுங்கியல் நம்பிக்கை 'நல்லடக்கம்'. இதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும்" என்ற கருத்தியலில் மாத்திரமே குரல்கள் எழும்ப வேண்டும். மாறாக நல்லடக்கத்திற்கான மார்க்க விளக்கம், வியாக்கியானங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. ஒவ்வொரு மதங்களதும் நம்பிக்கைகள், லௌகீக நடைமுறைகளில் வேறுபடுவதால் மத வியாக்கியானங்களை முன்வைத்து விவாதிப்பது, குரல் எழுப்புவது மாற்று மதத்தவரின் நம்பிக்கைகளில் குறுக்கிடவே செய்யும்.

பௌத்த, இந்து மதங்களின் இறுதிக் கிரியைகள் அக்னிச் சுவாலையுடன் தொடர்புடையன. இந்நிலையில், உயிரிழந்த உடல்களுக்கு தொடுகை உணர்வு உண்டென்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. லௌகீகப் பார்வையில், இம்மதங்களின் நடைமுறைகள் வேறுபடுவதையே இவை உணர்த்துகின்றன. இந்த வேறுபாடுகளின் பின்புலங்களைப் புரிந்துகொள்வதனூடாகவே, சமயங்களின் வேதாந்தங்களைப் புரிய முடிகிறது. இதனால்தான், மதங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியுமே தவிர, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனப்படுகிறது. இந்த இணக்கம் ஏற்பட்டிருந்தால் எல்லோரும் ஒரே மதத்தவராகியிருப்போமே!.

இதில், இன்னொரு சிலரின் நடவடிக்கைகள், சமூகக் கூட்டுப் பொறுப்பிலிருந்து அவர்களை விலக்கியும் வைத்துள்ளது. மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாவதால் வெளியாகும் ஜனாஸாக்களின் உடற்பாகங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, மண்ணறையின் லௌகீகக் காட்சிகளை அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தியுள்ளனர். மண்டை ஓடுகள், எலும்புகள், அங்கச் சிதைவுகளைக் காணும் மாற்று மதத்தினர், உக்கிப்போன எலும்புகளிடமா கேள்விக்கணக்குகள்? இவையா மண்ணறையில் உயிர்ப்பிக்கப்படும்? என வாய்பிளக்கின்றனர். கொரோனா ஜனாஸாக்களையும் அடக்கம் செய்தால் இவ்வாறுதான் எலும்புகள் மண்ணுடன் கலந்துவிடுமென, ஏனைய சமூகத்தினர் எண்ணுவதற்கு, இந்த சமூகப் பொறுப்பிலிகள் வழிகளைத் திறந்து விடுவதுதான் கவலை. நல்லடக்கத்தின் நம்பிக்கைக்காகப் போராட்டம் நடக்கும் சூழலிலா, இந்தப் பொறுப்பிலிகள் இவ்வாறு நடந்துகொள்வது?

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் இச்சந்தேகத்தை தெளிவுபடுத்திவிட்டது. "இறந்து ஈச்சம்பாளைகளான எலும்புகளாகி உக்கிய பின்னருமா நாங்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம்? என நிராகரிப்பாளர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நபியே! நீர் கூறும். நீங்கள் எதுவுமில்லாத நிலையிலிருந்த போது, உங்களைப் படைத்த இறைவனுக்கு இது பெரிய காரியமில்லை" (புனிதகுர்ஆன்).

எனவே,லௌகீக வியாக்கியானங்கள் இல்லாமல் மத நம்பிக்கையை வென்றெடுக்க குரல்கொடுப்பதே உள்ள வழி. இந்த விடயத்தில், அரசாங்கத்திற்கு இருந்த கடினமான மனநிலை சற்றுக் கசிந்து வந்தமைக்கான நிலைமைகள் தென்படவே செய்கிறது. கொங்ரீட்டிலான ஜனாஸாப் பெட்டிகள் பற்றி அரசாங்கம் அங்கலாய்ப்பதும், இறுக்கமான நிலைப்பாடுகள் தளர்ந்த அடையாளந்தான்.

எனினும், இவற்றை இலங்கையில் அடக்கம் செய்வதற்கு எதிராகக் கிளம்பும் கெடுபிடிகளே அரசுக்கு சவாலாகி வருகிறது. "நல்லடக்கம் வேண்டும் அவ்வளவுதானே! மாலைதீவா, மலேஷியாவா எங்கென்றாலும் எமக்கென்ன" என்ற தற்காலிக நிலைப்பாட்டுக்கு வருவதும், இனவாதக் கெடுபிடிகள் நீளும் நிலையில் தப்பில்லை என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

இனவாதக் களம் கூர்ந்த பார்வையில் விரியும் சூழலிலும் இலங்கையில்தான், நல்லடக்கம் வேண்டுமென விரும்புவது, அடிப்படைவாதச் சாயம் பூசப்படும் ஆபத்தையே இன்னுமின்னும் ஏற்படுத்துமென சிலர் சந்தேகிக்காமலும் இல்லை. ஆனால், முக்கிய அமைச்சர் ஒருவரின் மனக் குமுறல்கள், "தாய் நாட்டில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும்" என்ற ஒட்டுமொத்த சமூகத்தின் விருப்பையே வெளிப்படுத்துகிறது. மாலைதீவிலும் இதற்கு எதிரான சலசலப்புக்கள் எழும்பத் தொடங்கியுள்தால், பேரினவாதம் விழித்துக்கொள்வதற்குள்ளும், முடிவுகளை மாலைதீவு மீள்பரிசீலிக்க முன்னரும் முஸ்லிம்கள் முன்யோசனையுடன் நடந்துகொள்வதுதான் தீட்சண்யமாக இருக்கும்.

"விஞ்ஞானமே நிரூபித்துவிட்ட பின்னரும் அனுமதிக்கவில்லையே!" என்று அரசாங்கத்தைக் குறை கூறுவது கள விளம்பரத்துக்கு நல்லதாக இருக்கும். ஆனால், ஆத்மீக நம்பிக்கையை (நல்லடக்கம்) வெல்வதற்கான கடுமையான உழைப்புக்களை, இவ்விருப்பங்கள் இழுத்தடிக்கவே செய்யும்.

கடந்த காலங்களில், சிறுபான்மைத் தலைமைகளின் தீட்சண்யத்துக்கு தலைக்கனம் ஏற்பட்டதால்,விடப்பட்ட தவறுகளின் வலிகளைத்தான் முஸ்லிம்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இந்த நேரத்திலா இதைச் சொல்வது? என சிந்திப்பதல்ல தீட்சண்யம். இனியும், இவ்வலிகள் ஏற்படாதவாறு சிந்திப்பதற்கு கடந்த காலத் தலைக்கனங்கள் வழிகாட்ட வேண்டியுள்ளதே!.

லண்டன் ஆர்ப்பாட்டங்கள் வேறு பின்னணிகளுடன் முடிச்சுப் போடப்பட்டால், நிலைமைகளை நினைக்கவே பரிதாபமாக இருக்கும். இருபது நாள் குழந்தை எரிக்கப்பட்ட மனக்காயங்களும் குமுறல்களும், ஏற்கனவே எரிந்து போன எமது சொந்தங்களின் செந்தணல்களும் மூன்றாம் தேசத்தின் முதுகெலும்பாகக் கட்டி எழுப்பப்பட வேண்டுமானால், தலைக்கனமன்றி தீட்சண்யமே தலைசிறந்த தீர்வாக இருக்கும்.

ஜனாசாக்களை புதைப்பதற்கு நீர்மட்டம் ஆழத்திலுள்ள வறண்ட  நிலப்பகுதியொன்றை கண்டறியுமாறு பிரதமர் பணிப்புரை-மத ரீதியாக தீர்மான...
10/12/2020

ஜனாசாக்களை புதைப்பதற்கு நீர்மட்டம் ஆழத்திலுள்ள வறண்ட நிலப்பகுதியொன்றை கண்டறியுமாறு பிரதமர் பணிப்புரை-மத ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்து

சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதர் ரிஷாட் அவர்களது மணிபர்ஸ் தொலைந்து விட்டது, அதில் அவரது சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்...
07/12/2020

சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதர் ரிஷாட் அவர்களது மணிபர்ஸ் தொலைந்து விட்டது, அதில் அவரது சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை மற்றும் அலுவலக அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இருக்கிறது.

சம்மாந்துறையிலிருந்து அம்பாறை நோக்கிச் செல்லும் வழியிலேயே அவரது மணிபர்ஸ் தொலைந்துள்ளது, இதனை கண்டெடுத்தவர்கள் தயவு செய்து கீழே தரப்பட்டுள்ள அவரது இலக்கத்தினை தொடர்பு கொண்டு ஒப்படைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முஹம்மட் ரிஷாட் - 0779995226

சம்மாந்துறை பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!--------------------------------------------------------------...
07/12/2020

சம்மாந்துறை பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
--------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை ,சம்மாந்துறை பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியராக கடமைபுரியும் சம்மாந்துறையை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு முடிவு கிடைக்க பெறாமல் அவரின் சொந்த ஊரான சம்மாந்துறைக்கு 26ஆம் திகதி வருகை ததந்தனையடுத்து சுய தனிமைப்படுதலில் உள்ளாக்கப்பட்டிருந்தார்.

அவரின் பி.சி.ஆர் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பட்டதற்கமைய கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதற்கமைய அவருடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் துறைமுக அதிகார சபை ஊழியர்கள் மற்றும் நபரின் உறவினர்களுக்கும் கடந்த வியாழக்கிழமை 36 நபர்களுக்கு பி.சி.ஆர்மேற்கொள்ளப்பட்டது.

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி நேற்று ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேசத்தில் மொத்தமாக ஆறு பேர் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டல எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் வேண்டுகோள்வளிம...
01/12/2020

வளிமண்டல எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் வேண்டுகோள்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக
"சிவப்பு "எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாரை மாவட்டம்
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காலநிலை மாற்றத்தினால்
கடுமையானகாற்று அல்லது சூறாவளி அனர்த்தம் ஏற்படுமாயின்
முன்னர் அதன் பாதிப்புக்கள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும் அதற்கேற்ப பிரதேச மக்கள் முன்னாயத்தமாக தயார்ப்படுத்திக்கொள்வது மிக அவசியமானதாகும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக வீட்டுகளின் கூரைகள், சுவர்கள் என்பன உறுதியுடை யனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளல்,இல்லையெனின் அவற்றை திருத்துதல்.வீட்டினுள் சேதங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தல்,கடுங்காற்றின் போது காயங்களை அல்லது உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைஅகற்றுதல்,வெள்ளப்பெருக்கின் போது அருகில் உள்ள உயரமான பகுதிகளுக்குச் செல்வதற்கான வழிகளை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தல்,சுவரில் தொங்கவிடப்படிருக்கும் கடிகாரம், புகைப்படங்கள், உயரத்தில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றுதல்,தூய தண்ணீரைச் சேமித்து வைத்திருத்தல் (தூக்கிச் செல்லக்கூடிய போத்தல்களில்),
அனர்த்த நிலையின் போது
சகல விதமான மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுதல்,உறுதியான பாதுகாப்பான பகுதியில் வாகனங்களை நிறுத்துதல், காற்றின் வேகம் குறையும்போது சூறாவளி நின்றுவிட்டது என எண்ணிவிடாதீர்கள். வேறு திசையில் காற்று வீசக்கூடும். சூறாவளி அபாயம் நீங்கிவிட்டது என வளிமண்டல திணைக்களம் அறிவிக்கும் வரை பாதுகாப்பான இடங்களிலேயே இருக்க வேண்டும் என பிரதேச மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்களின் ஒத்துழைப்பு அவசியம்!🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝கடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல...
30/11/2020

உங்களின் ஒத்துழைப்பு அவசியம்!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

கடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்கொண்டிருந்தவர்கள் தமது விபரங்களை தத்தமது பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தி பரிசோதனை செய்வதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்.

உங்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது கணக்கில் எடுக்க முடியாத இலேசான சில அறிகுறிகள் இருக்கலாம். ஆயினும், உங்களிடம் இருந்து ஏனையோருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் பரவக்கூடும்.

அத்துடன், அவ்வாறானவர்கள் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தம்மை சுய தனிமைப்படுத்துவதும் அவசியமாகும்.

ஒன்றுபட்டு எமது பிராந்தியத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்!

Dr. N. Ariff,
Regional Epidemiologist,
Office of RDHS,
Kalmunai

Address

Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when LeadNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LeadNews:

Share