02/12/2024
சம்மாந்துறை ஊடக மையத்தின் நன்றி நவிலல்!
சம்மாந்துறை ஊடக மையம்
கனமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கடந்த 2024 நவம்பர் 26ம் திகதி மாவடிப்பள்ளி பாதை வெள்ள அனர்த்தத்தின் போது உழவு இயந்திரம் தடம் புரண்ட நிகழ்வில் மூழ்கி ஷஹீதான ஆண்மீக வாரிசுகள் மற்றும் மரணமடைந்த சகோதரர்கள் அனைவர்களுக்கும் உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனம் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு :
இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்த ஜனாஸாக்களை மீட்டெடுக்கும் தேடும் பணியில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் அனைத்தையும் புறந்தள்ளி மனிதாபிமான அடிப்படையில் முற்று முழுதாக இரவு பகலாக மனிதநேயத்துடன் பணியாற்றி உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்!
காரைதீவு இராவணன் கழகம்,
கோவில் நிர்வாகம்,
காரைதீவு பொதுமக்கள் மற்றும் மாளிகைக்காடு,
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பினர் உட்பட பொதுமக்களுக்கும் எமதூரின் நலன் விரும்பிகள் மற்றும் களத்தில் பணியாற்றிய சகோதரர்கள், சிவில் சமூகத்தினர், அனைத்து துறைசார்ந்த ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் சம்மாந்துறை பொதுமக்கள் சார்பாக சம்மாந்துறை ஊடக மையம் நன்றிகளை தெரிவிக்கின்றது.
விஷேடமாக சம்மாந்துறை பொதுமக்களுக்காக களத்தில் இருந்து உடனுக்குடன் நம்பத்தகுந்த உண்மை செய்திகளை வழங்கிய சம்மாந்துறை ஊடக மையத்தின் ஊடகங்களான சம்மாந்துறை TREND மற்றும் விழிFM ற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு..
செய்திகளுக்காக நேரடியாக களத்திலிருந்த
றிகாஷ் எம். அலியார் & தில்ஷாத் பர்வீஸ் - சம்மாந்துறை TREND
அம்ஜத் & இம்றான் - விழி FM
ஷாதிர் ஏ ஜப்பார் - சமூகம் TV
அஹ்னாப் - கெத்கலரி
மேலும் பக்கபலமாக இருந்த
அறூஸ் முஹம்மட் - விழி FM
ஹஷான் & ரோஷன் - Hi TV
இன்ஷாப் - RJ Media
சில்ஹான் - Talent Plus
ஜஃப்ரான் - Hash Tamil
ஆகியோருக்கு நன்றிகளையும் : சேவை தொடர வாழ்த்துக்களையும் சம்மாந்துறை ஊடக மையம் தெரிவித்து கொள்கின்றது.
சம்மாந்துறை ஊடக மையம்