Kutty story தமிழ்

Kutty story  தமிழ் செய்திகளை உடனுக்குடன்
அறியவும் கலைக்கலாச்சார நிகழ்ச்சிகளை நேரடியாக
பார்க்கவும்....

25/08/2025

✍️அடுத்த வருடம் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

✍️நாடு முழுவதிலும் நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வைத்தியர்கள் இடம...
24/08/2025

✍️நாடு முழுவதிலும் நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்வளவு சட்டம் படித்துமா மக்கள் பணத்தில் கைவைத்து கடைசியில் கைதியாகி கட்டிலில் கிடக்கார் இந்த மனுசன்???(4) 🔴 இலங்கை சட்ட...
24/08/2025

இவ்வளவு சட்டம் படித்துமா மக்கள் பணத்தில் கைவைத்து கடைசியில் கைதியாகி கட்டிலில் கிடக்கார் இந்த மனுசன்???
(4) 🔴 இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

5) 🔴 லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.)

👇👇👇

‼️ ரணில் விக்கிரமசிங்க பற்றிய சிறு குறிப்பு...

1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.

2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம்.

3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.

4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

5) லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.

6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.

7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.

8) இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.

9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.

10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.

11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.

12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.

13) இளைஞர் சேவைகள் கழத்தை ஆரம்பித்தவர்.

14) அற-நெறிக் கல்விக்கு வித்திட்டவர்.

15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் (COLLEGE OF EDUCATION)

16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்.

17) போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்குவதை ஆரம்பித்தவர்.

18) ஒரே தடவையில் அரச ஊதியம் 10000/-ரூபாவால் அதிகரித்தவர்.

19) இலங்கைக்கு முதன்முதலில் கையடக்கத் தொலைபேசி சேவையை (CELL TEL LANKA) கொண்டு வந்தவர்.

MR.THIRUKUMAR NADESAN (திருக்குமார் நாடேசன்) என்பவர்.
அவர் CELL TEL LANKA (அப்போது TIGO, பின்னர் HUTCH ) நிறுவனத்தின் நிறுவுனர்களில் ஒருவராக இருந்தார்.
1989-ல், அவர்தான் இலங்கைக்கு முதலாவது மொபைல் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார் என்று பதிவுகள் சொல்கின்றன. - (நான் சொல்லல்ல - Facebook copy paste தான் மக்களே)

பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் !நூருல் ஹுதா உமர் இலங்கை சமாதான கற்கை...
23/08/2025

பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் !

நூருல் ஹுதா உமர்

இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கடந்த 1996 ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக இணைந்ததன் மூலம் தனது எழுத்துகளால் பிரகாசித்த எஸ்.எல். றியாஸ் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உலக கிண்ண வெற்றியை தொடர்ந்து ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள் என்ற தலைப்பில் டெஸ்ட் விளையாடும் அனைத்து கிரிக்கெட் அணிகளினதும் சாதனைகளை தொகுத்து ஒரு நூலை 2001 ஆம் வருடம் வெளியிட்டார். அதுவே அவரின் முதலாவது நூலாகும்.

அன்று ஆரம்பித்த அவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. குழந்தை உளவியல் பற்றி 1400 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வு நூலை (Understanding and supporting Children Psychological Needs) எனும் தலைப்பில் 2 பாகங்களாக வெளியிட்டிருந்தார். மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள் பற்றிய ஆய்வு சுமார் 1100 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இடம் பெறும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் Violence Against Muslims in Independent India என்ற ஆய்வு 1700 பக்கங்கள் கொண்டது. அவை 3 பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

The Evolution of Muslim Political Aspirations in Sri Lanka என்ற இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி ஏன் தேவைப்பட்டது என்ற ஆய்வு ஆதிகாலம் முதல் இன்று வரை ஆய்வு செய்து சுமார் 750 பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் 21st Century Romeo and Juliet என்ற கதையானது William Shakespeare இன் Romeo Juliet கதையை அடியொற்றி எழுதப்பட்டது. Romeoவும் Juliet உம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் சமூக ஊடகங்கள் இவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்ற ஒரு கற்பனை நூலை உட்பட தேசிய இனப்பிரச்சினைக்கான காரணங்கள் பற்றிய பல நூல்கள் அடங்களாக 65 நூல்கள் இந்த கண்காட்சியில் இடம் பிடித்திருந்தது.

இந்நிகழ்வில் மூத்த உலமா "வரலாற்றில் ஒரு ஏடு புகழ்" மௌலவி ஏ.சி.எம். புகாரி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஸ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எம். நௌசாத் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

14 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!தில்சாத் பர்வீஸ் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை...
23/08/2025

14 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

தில்சாத் பர்வீஸ்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனம் போன்றவற்றை கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (21) வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உஹனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 8 கிலோ 168 கிராம் ஹெரோயின், 666 கிராம் ஐஸ் போதைப் பொருள், ரூபாய் 8 இலட்சத்தி 23 ஆயிரம் (823,000.00) பணம், மின்னணு தராசு 03, கையடக்கத் தொலைபேசி 04, வாகன போலி எண் தகடுகள் 06, ஒரு கார், ஒரு வேன், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

22/08/2025
------&&&&&----
22/08/2025

------&&&&&----

உண்மை!! ❤️❤️,  பற்றி தெரியாத பத்து உண்மைகள்1. நிறுவுதல் மற்றும் வரலாறு: BMW, Bayerische Motoren Werke AG, ஜெர்மனியின் மு...
22/08/2025

உண்மை!! ❤️❤️
,
பற்றி தெரியாத பத்து உண்மைகள்
1. நிறுவுதல் மற்றும் வரலாறு: BMW, Bayerische Motoren Werke AG, ஜெர்மனியின் முனிச்சில் 1916 இல் நிறுவப்பட்டது, ஆரம்பத்தில் விமான இயந்திரங்களைத் தயாரித்தது. நிறுவனம் 1920 களில் மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கு மாறியது மற்றும் இறுதியில் 1930 களில் ஆட்டோமொபைல்களுக்கு மாறியது.
2. ஐகானிக் லோகோ: BMW லோகோ, பெரும்பாலும் "ரவுண்டல்" என்று குறிப்பிடப்படுகிறது, இது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் நான்கு நாற்கரங்களுடன் குறுக்கிடும் கருப்பு வளையத்தைக் கொண்டுள்ளது. இது விமானப் பயணத்தில் நிறுவனத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது, நீலம் மற்றும் வெள்ளை தெளிவான நீல வானத்திற்கு எதிராக சுழலும் உந்துசக்தியைக் குறிக்கிறது.
3. தொழில்நுட்பத்தில் புதுமை: வாகனத் தொழில்நுட்பத்தில் அதன் கண்டுபிடிப்புகளுக்காக BMW புகழ்பெற்றது. இது 2013 இல் உலகின் முதல் மின்சார கார், BMW i3 ஐ அறிமுகப்படுத்தியது, மேலும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.
4. செயல்திறன் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பாரம்பரியம்: BMW மோட்டார்ஸ்போர்ட்டில், குறிப்பாக டூரிங் கார் மற்றும் ஃபார்முலா 1 பந்தயத்தில் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பிராண்டின் M பிரிவு, அவற்றின் வழக்கமான மாடல்களின் உயர்-செயல்திறன் மாறுபாடுகளை உற்பத்தி செய்கிறது, அவற்றின் துல்லியமான பொறியியல் மற்றும் உற்சாகமான ஓட்டுநர் இயக்கவியல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
5. உலகளாவிய இருப்பு: BMW ஒரு உலகளாவிய வாகன நிறுவனம்
6. சொகுசு மற்றும் வடிவமைப்பு: BMW ஆனது ஆடம்பர மற்றும் தனித்துவமான வடிவமைப்பிற்கு ஒத்ததாக உள்ளது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதியுடன் நேர்த்தியுடன் கலக்கும் வாகனங்களை உருவாக்குகிறது.
7. நிலையான நடைமுறைகள்: BMW அதன் வாகனங்களில் சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை இணைத்து, அதே போல் BMW i4 மற்றும் iX போன்ற மாடல்களுடன் மின்சார வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, நிலைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது.
8. Global Manufacturing: BMW ஆனது ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட, உலகளவில் பல உற்பத்தி வசதிகளை இயக்குகிறது, இது உலகளாவிய ரீதியிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியையும் உறுதி செய்கிறது.
9. பிராண்ட் போர்ட்ஃபோலியோ: அதன் புகழ்பெற்ற BMW பிராண்டிற்கு கூடுதலாக, நிறுவனம் MINI மற்றும் Rolls-Royce ஐயும் கொண்டுள்ளது, இது பல்வேறு வகையான வாகன சுவைகள் மற்றும் ஆடம்பரப் பிரிவுகளை வழங்குகிறது.
10. கலாச்சார தாக்கம்: BMW வின் வாகனங்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்குரியதாக மாறுகிறது

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளுக்கு பணம் செலுத்தாமல் தப்பியோடிய 20 வயதுடைய இளைஞன் அதிரடியாக கைது!தில்சாத் பர்வீஸ் சம்ம...
22/08/2025

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளுக்கு பணம் செலுத்தாமல் தப்பியோடிய 20 வயதுடைய இளைஞன் அதிரடியாக கைது!

தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறையில் ஆன்லைன் ஊடாக ரூபாய் 45,000 பெறுமதியான பொருளை ஆர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருளுக்கு பணம் வழங்காமல் தப்பியோடி உள்ளார் என்று நேற்று முன்தினம் (20) புதன்கிழமை முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் மேற்பார்வையில், பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (21) வியாழக்கிழமை சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஆன்லைன் ஊடாக ஆர்டர் செய்யப்பட்டு பணம் வழங்காமல் கொண்டு சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

✍️கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் முன்னிலையில் கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்நூருல் ஹ...
22/08/2025

✍️கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் முன்னிலையில் கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று (21) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.கரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், மருத்துவ முகாமுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் கோமாரி மற்றும் திருக்கோவில் பிரதேச மக்களின் நலன் கருதி தாண்டியடி பிரதேசத்தில் குறித்த மருத்துவ முகாமை நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டு, சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் குறித்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

பன்னினாரா??
22/08/2025

பன்னினாரா??

🚨 Team India’s Likely ODI Squad vs Australia [Times Now] 🇮🇳🏏📸 Getty Images/IPL(CricketGully, Cricket, Team India, BCCI, ...
22/08/2025

🚨 Team India’s Likely ODI Squad vs Australia [Times Now] 🇮🇳🏏

📸 Getty Images/IPL

(CricketGully, Cricket, Team India, BCCI, Rohit Sharma, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant, Japsrit Bumrah, KL Rahul)

Address

Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutty story தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share