மக்கள் நண்பன்

மக்கள் நண்பன் News and More
மக்களுடன் மக்களுக்காக

14/09/2025

சம்மாந்துறை நடுவீதியில் உலாவித் திரியும் யானை.

சம்மாந்துறை தைக்காப்பள்ளிக்கு அருகாமையில் காட்டு யானை ஒன்று வழிதவறி உலாவித் திரியும் காட்சியே இது. யானையைக் கண்டு பொதுமக்கள் சிதறியோடுவதனையும் காண முடிகிறது.

14/09/2025

வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்கள் இப்படியான தவறுகளை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்களை நம்பியே உங்கள் முதலாளிகள் அவர்களது குழந்தைகளை உங்களது பராமரிப்பில் விட்டுச் செல்கின்றனர்.

உங்களது முதலாளிகள் விடையத்தில் உங்களுக்கு கோபதாபங்கள் இருக்கலாம் அந்தக் கோபத்தை அவர்களது குழந்தைகள் மீது ஒரு போதும் காட்டி விடாதீர்கள்.

அவர்களது குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் தீங்கு செய்து அந்தக் குழந்தைகளுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கான தண்டனைகள் அரபு நாடுகளில் மிகக் கடுமையாகவிருக்கும் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

அன்சார்.
சம்மாந்துறை.
2025-09-14.

05/09/2025

நீங்கள் எங்கிருந்தாலும் இந்த விடையத்தில் அலட்சியம் இல்லாமல் இருங்கள். இது எனது அனுபவரீதியான அறிவுரை.

04/09/2025

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள், அதாவது ஹவுஸ் டிரைவர், ஹாரிஸ், வீட்டுப் பணிப்பெண், தோட்ட வேலை செய்பவர்களுக்கு மருத்துவ காப்பீடு (இன்சூரன்ஸ்) இருக்காது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் இவர்களால் சிகிச்சை பெறவேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.

இது போல் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

சாதாரண காய்ச்சல், முதல் நாள்பட்ட நோய் (sugar) போன்றவைகளுக்கும் சிகிச்சை பெறலாம். மேலும் மருந்துகளும் இலவசமாக பெறலாம்.

மேலும் இது சம்பந்தமான உங்கள் அனுபவங்களை பகிரலாம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். அதேபோல் சந்தேகங்கள் இருந்தாலும் கமெண்டில் தெரிவிக்கலாம்.

நாம் தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்!நாம் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும். ஆம...
04/09/2025

நாம் தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்!

நாம் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும். ஆம். அதில் நமக்கு நன்மை செய்யும் மனிதர்களும் உண்டு. நமக்கு தீமை செய்யும் மனிதர்களும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் விதம்தான் மாறுபடும். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கீழ்க்கண்ட 7 மனிதர்களிடம் நாம் மிக ஜாக்கிரதையாக இருந்துவிட்டால் போதும். நம்மை அசைக்கவே முடியாது இது நிச்சயம் யார் அந்த ஏழு மனிதர்கள் இதோ இப்பதிவில் படியுங்கள்.

1. உப்பு மூட்டை மனிதர்கள்:

இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.

2. கொசு மனிதர்கள்:

இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.

3. ஆதிக்க மனிதர்கள்:

இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உங்கள் சுதந்திரத்தை கட்டுப் படுத்தவும் விரும்புபவர்கள்.

4. முதலை மனிதர்கள்:

இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள். மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும்போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

5. பச்சோந்தி மனிதர்கள்:

இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

6. கனவுக் கொலையாளிகள்:

இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

7. குப்பை மனிதர்கள்:

இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.

நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும்.அப்படிப்பட்ட பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பத...
30/08/2025

நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும்.

அப்படிப்பட்ட பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது...
சாப்பிட்டியா, தூங்குனியா, என்ன பண்றீங்க, எப்படி இருக்கீங்க என்று தன்னைப் பற்றி சிந்திக்கும் ஒருவன் வேண்டும் னு நினைப்பாங்க அப்படி ஒரு ஆண் கிடைத்தால் கண்டிப்பாக அந்த பெண் அவனைப் பொக்கிஷம் போல பார்த்துப்பாள்.

பெண்கள் அதிகமா காதல் வச்சிட்டால் அவங்களுக்கு Posisive அதிகமாக் இருக்கும். தன்னுடையவன் மற்ற பெண்களிடம் சிரிச்சிப் பேசுறது கூட கோபத்தை உண்டு பண்ணும் அதைப் புரிந்து ஆண்கள் நடந்தால் நல்லாயிருக்கும்.

சோகமாக இருக்கும் பொழுது தோள் கொடுக்கும் ஒரு தோழனாய், கண்ணீரைத் துடைத்து விடும் ஒரு காதலனாய் அரவணைப்பு தருவதில் ஒரு தாயாக இருக்கும் ஆண்மகன் வேண்டும்.

பெண் எல்லாரையும் நினைத்து அழ மாட்டாள், எல்லாரையும் பார்த்து சிரிக்கவும் மாட்டாள் இதையெல்லாம் உங்களுக்காக பண்ணுனா நீங்க எவ்வளவு ஸ்பெஷல் என்று தெரிஞ்சிக் கொள்ளுங்க அதை விட்டுட்டு ஏன் எப்பவும் அழு மூஞ்சியா இருக்கேன் னு கேட்காதீங்க.

நீங்க எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்கன்னு அடிக்கடி கால் பண்ணிக் கேட்பதற்க்கு காரணம் நீங்க பத்திரமா இருக்கீங்களானு பார்க்க தான் அது தெரியாமல் ஏன் அடிக்கடி கால் பண்ணி நச்சரிக்கிறன்னு திட்டாதீங்க.
24 மணி நேரமும் வேலையிலேயே பிஸியாக இருக்கும் ஆண்களே உங்கள் கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் பெண்ணை பார்க்கக் கூடாதா..

தன்னைப் பெருமையாக பார்க்கும், தனக்கு சரிசமமான உரிமை தரும், தன் சுயமரியாதையை மதிப்பளிக்கும் ஒரு ஆணே ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்பு.

மொத்தத்தில் ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்ப்பது கொட்டிக் கொடுக்கும் அன்பு, கொட்டிக் கொடுக்காமல் சொல்லும் அறிவுரை, தன்னை குழந்தையைப் போல பாவிக்கும் மனப்பக்குவம், கோபப்படும் போது கொஞ்சி சமாதானப்படுத்துவது.

இது போல சின்னச் சின்ன விஷயங்களை தெரிஞ்சி வச்சிக்காமல் பொண்ணுங்களைப் புரிஞ்சிக்க முடியலைன்னு டயலாக் பேசாதீங்க.

வயசு நாற்பது தொடும்போது வாழ்க்கைய கொஞ்சம் பின்நோக்கி பாத்தா ! தேவையே இல்லாத விஷயத்துக்கெல்லாம் கௌரவம் பாத்திருக்கோம்ண்ணு...
30/08/2025

வயசு நாற்பது தொடும்போது வாழ்க்கைய கொஞ்சம் பின்நோக்கி பாத்தா ! தேவையே இல்லாத விஷயத்துக்கெல்லாம் கௌரவம் பாத்திருக்கோம்ண்ணு தோணுது.

சிலதுகள அதுபாட்டுக்கு விட்டிருக்கலாம். சிலர் கூடலாம் பழகியிருக்கவே கூடாதுன்னெல்லாம் தோணும். இந்த கடந்து வந்த பாதைல கத்துக்கிட்ட விஷயங்கள் என்னண்ணா,

1. எப்பவுமே நம்ம அப்பா அம்மா தொழில சொல்றதுல கௌரவ குறைச்சல் படவே கூடாது.

2. நம்ம வீட்டுக்கு நண்பர்கள கூட்டிட்டு வர்றதுக்கு தயங்க கூடாது. நம்ம வீடு சின்னதாச்சே, அவங்க ஏதும் நினைப்பாங்களான்னு யோசிக்கவே கூடாது. ஒரு கட்டத்துல அதெல்லாம் மேட்டரே கிடையாதுன்னு தோணும்.

3. கோடிக்கணக்கான மக்கள்ல நமக்கு ஒரு தொழில் இருக்குன்றதே சாதனை தான். நம்ம படிச்சது என்ன செய்ற தொழில் என்னன்னு நினைக்க கூடாது. If you are employed, you are blessed.

4. நண்பர்கள் நம்ம கூடவே இருப்பாங்கன்னு நினைச்சி அவங்களுக்காக உறவுகள உதாசினப்படுத்த கூடாது. ஒரு கட்டத்துல அதுலாம் போலின்னு தெரியும்போது யாருமே கூட இருக்க மாட்டாங்க.

5. Skills அ கூட்டிக்கிட்டே இருக்கணும். எத கத்துக்கிறோமோ அத ஈடுபாட்டோட கத்துக்கணும். Learning new things ன்றது ஒரு மிகப்பெரிய Saving.

6. சாத்தியமே இல்லன்னாலும், நடக்கும்ன்னு சில விஷயங்கள நம்பணும். Trust me, அஞ்சு வருஷத்துக்கு முதல் வெளிய சொல்லியிருந்தா சிரிச்சிருக்க கூடிய விஷயங்கள் கூட எனக்கு நடந்திருக்கு.

7. வாழ்க்கைல எந்த தப்பு பண்ணாலும் அத தனியா பண்ணணும். Crime partner அப்டின்றது later நம்ம வாழ்க்கைக்கு மிகப்பெரிய threat. சம்பந்தமே இல்லாத கடமைப்பாடுகளுக்கு அது காரணமா இருக்கும்.

8. எந்த சந்தர்ப்பத்துலயும் சொந்தக்காரங்க கிட்ட உதவின்னு போய் நிக்க கூடாது. நீங்க அஞ்சு பேருக்கிட்ட கேட்டிருப்பீங்க. அஞ்சுபேரும் குடுத்திருக்க மாட்டான். அந்த அஞ்சுபேரும் சந்திக்கும்போது என்கிட்டயும் கேட்டான்னு ஏதோ அஞ்சிபேரும் கொடுத்த மாதிரி பேசிப்பானுங்க. 'ஏதும் உதவி வேணும்ன்னா கேளுங்க' ன்ற வார்த்தைய எப்பவும் நம்பாதீங்க.

9. Coca Cola அஞ்சி மிலியன் குடுக்குறான், பத்தாயிரம் போட்டா மூணு மாசத்துல ஒரு லட்சம் கிடைக்கும், அம்பது லட்சம் குடுத்தா Canada Visa ன்ற Scam ல எல்லாம் ஏமாற கூடாது. எதுல சும்மா ஒரு ரூபா வருதுன்னு சொன்னாலும் அது Scam தான்.

10. எதோ நம்மள விட்டு போகுதுன்னா இன்னொண்ணு எப்பவோ நல்லதா கிடைக்கும்ன்னு நம்பணும். அது கண்டிப்பா கிடைக்கும். அத உணர சில வருஷங்கள் தேவைப்படும். ஆனா ஓன்று எதையும் சந்தேகம் மட்டும் பட்டு அலட்சியம் படுத்த கூடாது அப்புறம் ரொம்ப கஷ்டம் இப்ப நான் அப்படி தான் இருக்கேன்
வாழ்க்கை பல அனுபவங்கள தரும். ஒவ்வொண்ணுல நம்மள நாம சிறப்பாக செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையின் நெடுந்தொலைவு பயணத்தில் வழிகாட்டும...
30/08/2025

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையின் நெடுந்தொலைவு பயணத்தில் வழிகாட்டும் ஒளிக்கீற்றாக விளங்குகிறது. தன்னம்பிக்கை இல்லாதவருக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் அதனை வெளிக்காட்டும் தைரியம் இல்லாமல் போகிறது. எனவே பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது மிகவும் அவசியமான கடமையாகும்.

1. சுய சிந்தனைக்கு வழிகாட்டல்

குழந்தைகள் சுயமாக சிந்திக்கவும், முடிவு எடுக்கவும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். சிறிய விஷயங்களிலேயே அவர்கள் கருத்துக்களை கேட்டு மதிப்பளிக்க வேண்டும். உதாரணமாக, வீட்டின் சின்னச் சின்ன வேலைகளில் அவர்கள் செய்யும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு “நானும் மதிக்கப்படுகிறேன்” என்ற நம்பிக்கையைத் தரும்.

2. படிப்பும் வீட்டுப் பணிகளும்

கல்வி என்பது அறிவை மட்டும் அல்ல, நம்பிக்கையையும் வளர்க்கும். படிப்புடன் சேர்ந்து வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவது குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம் மற்றும் சுயநிலைத் திறனை வழங்கும். உதாரணமாக, தண்ணீர் ஊற்றுதல், புத்தகங்களை அடுக்கி வைப்பது, எளிய சமையல் வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.

3. அன்பும் ஒழுக்கமும்

குழந்தைகளை அடித்து அச்சுறுத்துவதால் அவர்கள் மனதில் பயம் மட்டுமே ஊறும்; தன்னம்பிக்கை வேரே இல்லாமல் போகும். அதேவேளை எதையும் கவனிக்காமல் சுதந்திரம் அளித்துவிட்டால் அவர்கள் பொறுப்பில்லாதவர்களாக மாறலாம். எனவே அன்புடன் கூடிய ஒழுக்கம் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும் சீரிய வழி.

4. ஊக்கமும் பாராட்டும்

“நீ ராசா அல்லவா?”, “நீ ராசாத்தி தானே?” போன்ற அன்பான ஊக்கவுரைகள் குழந்தைகளின் இதயத்தில் பெரும் வலிமையை ஊற்றும். குழந்தையின் சிறிய சாதனையையும் பாராட்டுவது அவருக்கு அடுத்த முயற்சிக்குத் தைரியமாக மாறும்.

5. எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்த்தல்

“மக்கு, மண்டு, மண்டூகம்” போன்ற இழிவுபடுத்தும் சொற்கள் குழந்தையின் உள்ளத்தை காயப்படுத்தும். இது அவர்களின் சுயநம்பிக்கையைத் தகர்க்கும். பெற்றோர் ஒருபோதும் குழந்தையை அவமதிக்கக் கூடாது; மாறாக, குறையைச் சொல்லும்போது கூட ஊக்கத்துடன் சொல்லப்பட வேண்டும்.

6. பயமின்றி தன்னிலை வெளிப்படுத்த உதவுதல்

குழந்தைகள் அச்சமின்றி தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். “பயம் இல்லாத மனம்”, “உண்மையான பேச்சு”, “உயர்வான பண்பு” போன்ற குணங்கள் அவர்களின் தனித்தன்மையை வலுப்படுத்தும். பெற்றோர் குழந்தையின் கேள்விகளை அடக்காமல் ஊக்குவிக்க வேண்டும்.

7. தோல்வியை ஏற்கக் கற்றுத்தல்

தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைப் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதே வெற்றிக்கான அடிப்படை என்பதை உணர்த்தினால் அவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையுடன் நிற்கக் கற்றுக் கொள்வார்கள்.

8. முன்மாதிரியாக இருத்தல்

குழந்தைகள் பெற்றோரைப் பார்த்தே வாழ கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் சிரமங்களில் தன்னம்பிக்கையுடன் நிற்பதை அவர்கள் கண்டால், அதே குணம் குழந்தைகளுக்கும் தானாக ஊறும்.

முடிவுரை.

தன்னம்பிக்கை கொண்ட பிள்ளைகள் நாளைய சமூகத்தின் தன்னிறைவு பெற்ற தலைவர்களாக உருவாகுவர். அவர்களுக்கு அன்பு, பொறுப்பு, ஊக்கம், ஒழுக்கம், நம்பிக்கை ஆகியவற்றைச் சேர்த்து வளர்ப்பதே பெற்றோரின் பெரிய கடமை.

👉 “தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முதுகெலும்பு” – அதனை பிள்ளைகளுக்குக் கொடுப்பதே பெற்றோர் செய்யக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.

சம்மாந்துறை அமானா வங்கியினால் மத்திய கல்லூரி மாணவர்களின் நன்மை கருதி வழங்கப்பட்ட உபகரணங்கள்.விபரம் - https://www.sammant...
07/08/2025

சம்மாந்துறை அமானா வங்கியினால் மத்திய கல்லூரி மாணவர்களின் நன்மை கருதி வழங்கப்பட்ட உபகரணங்கள்.

விபரம் - https://www.sammanthurai24.com/2025/08/Amana-bank-sammanthurai.html

கிழக்கு மாகாண கட்டழகராக தெரிவு செய்யப்பட்ட யோஷூவா சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் கௌரவிப்பு.விபரம் - https://www.s...
06/08/2025

கிழக்கு மாகாண கட்டழகராக தெரிவு செய்யப்பட்ட யோஷூவா சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் கௌரவிப்பு.

விபரம் - https://www.sammanthurai24.com/2025/08/Premium-fitness-sammanthurai.html

Address

No/9/B/3, Ampara 12A, 2nd Road, Udanga/01
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் நண்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மக்கள் நண்பன்:

Share