09/08/2026
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(09) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியாட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
🇱🇰