mulli1stnews net

mulli1stnews  net மாற்றத்தின் புதிய தேசத்தின் குரல்

https://www.mulli1stceylon.lk/2025/08/blog-post.html  mulli1stnews  net Mulli 1st News.net Msabdulhaleem Msabdulhaleem
15/08/2025

https://www.mulli1stceylon.lk/2025/08/blog-post.html
mulli1stnews net Mulli 1st News.net Msabdulhaleem Msabdulhaleem

🔸காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு; கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோர....

உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!✍️ எஸ். சினீஸ் கான்உலக நாடுகள் தற்போது சுகாதார துறையை முன்னேற்று...
13/08/2025

உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான்

உலக நாடுகள் தற்போது சுகாதார துறையை முன்னேற்றுவதை நோக்கி பயணிக்கின்றன. இந்நிலையில், சவூதி அரேபியா தனது பாரம்பரிய செயற்பாடுகள் மற்றும் பண்பாடுகளுக்கு இணையாக, நவீன மருத்துவ வசதிகள், ஆராய்ச்சித் தளங்கள் மற்றும் மருத்துவக் கல்வி வளங்களை மேம்படுத்தி, உலக சுகாதார மேடையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.

சவூதி அரேபியா, தனது Vision 2030 எனும் தூர நோக்குத் திட்டத்தின் கீழ் பல்துறை முன்னேற்றங்களை அடைந்து வரும் முன்னோடி நாடாக திகழ்கிறது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பல மாற்றங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இவ்வருடம் ஒக்டோபர் 27 முதல் 30 வரை, ரியாத்தில் உள்ள Exhibition and Convention Center-இல் 8வது Global Health Exhibition நடைபெறயிருக்கிறது.

“Invest in Health” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சி, உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்கள், உலகத் தர மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் துறைகளையும் ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் சிறப்பான வாய்ப்பு இதுவாகும்.

இந்தக் கண்காட்சியில், டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த், தடுப்பு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிகிச்சை முறைகள், மருந்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய முன்னேற்றங்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட உள்ளன. உலக மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் இங்கே உருவாகும்.

இந்நிகழ்வு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மருத்துவ முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் மூலம், சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெறும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.

இத்தகைய முயற்சிகள், மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சவூதி அரசின் வினைத்திறனை பிரதிபலிக்கின்றன. கட்டமைப்புப் புரட்சி, அறிவியல் முன்னேற்றம், மற்றும் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் மேன்மைதான், இன்று சவூதி அரேபியாவை உலக சுகாதார மேடையில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடா...
13/08/2025

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள மக்கள் மத்தியில் நெத்தன்யாஹு அரசின் மீது அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதுடன், மனிதக்கொலைகளால் உள்நாட்டிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அத்துடன், உலக சமாதானத்தைச்சீர்குலைக்கும் செயற்பாடாகவும் இருந்து வருகின்றது.

இம்மனிதகுல பேரவலத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென உலகின் பல்வேறு அரபு, மேற்குல நாடுகள் முயற்சியின் பின்னணியில் சவூதி அரேபியாவும் அதன் தலைமையிலான அரபு உலகமும் இரு தேச தீர்வு (Two-State Solution) எனப்படும் வழி மூலம் இச்சிக்கலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.

இரு தேச தீர்வு (Two-State Solution) என்ற கருத்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பிரித்தானிய
அரசின் பீல் ஆணைக்குழு முன்மொழிந்தது. இதனை முதல் சர்வதேசளவிலான அதிகாரபூர்வ திட்டமாக 1947ல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் (181) கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பால் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டம் முன்வைக்கப்பட்டாலும் உள்ளக முரண்பாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில், சவூதி அரேபியாவின் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டமான தற்போதைய யோசனை என்பது புதிதாகத்தோன்றியதல்ல. இது 2002ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரபு சமாதான முன்மொழிவு (Arab Peace Initiative) என்பது தான் இத்திட்டத்தின் அடிப்படையாகும்.

சவூதி அரேபியா தலைமையிலான இந்த யோசனையானது 1967ம் ஆண்டைய எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலாமை தலைநகராகக்கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை ஏனைய நாடுகளின் ஆதரவுடன் நிறுவும் திட்டமாகும்.

தற்போது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மன்னரின் ஆலோசகராக முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலஸ்தீனத்திற்கு தீர்வு வேண்டி இரு பக்கத்தினருடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான சவூதியின் முயற்சியின் பலனாக இத்திட்டத்திற்கு ஐநா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இவையனைத்தும் அமைதியை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இத்திட்டத்தை இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தலைமையில் கடுமையான வலதுசாரி அரசு பலஸ்தீன அரசு ஒழுங்குபடுத்தப்படாதது. ஹமாஸ் போன்ற இயக்கங்கள் பயங்கரவாதப் பின்னணியில் இருப்பதான காரணங்களை முன்வைத்து இரு தேச தீர்வைத்தள்ளிப்போடுகிறார்கள்.

மேலும், பலஸ்தீனம் தனி நாடாக உருவாவது தங்களது நாட்டுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இவ்விடயத்தில், ஹமாஸ் அமைப்பின் நிலைமை மிகவும் மாறுபட்டது. அவர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் பலஸ்தீனத்தேசம் உருவாகுவதை ஏற்கும் வகையில் சில சமரசங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், இஸ்ரேலின் காசா மீதான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் கணிசமான பாதுகாப்பு நிபந்தனைகள், ஹமாஸை தீர்வுக்குத்தயாராக மறுக்கும் சூழ்நிலைக்கே இட்டுச்செல்கின்றன.

இஸ்ரேலானது ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். காசா நெருங்க முடியாத பாதுகாப்பு பரப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கின்றது. ஹமாஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்விவகாரத்தில் பலஸ்தீனத்தின் நிலைப்பாடாக
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பி.எல்.ஓ (PLO) அமைப்பு, இரு தேச தீர்வுக்கு ஆதரவளிக்கிறது.

அவர்கள் 1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேம் தலைநகராகும் ஒரு சுயாதீன தேசம் வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர். ஆனால், இஸ்ரேலின் குடியிருப்புப்போக்குகள், அமெரிக்காவின் அதிருப்தியான நடத்தை அவர்களின் நம்பிக்கையையே சீர்குலைக்கின்றன.

இவ்விடயத்தில் மேற்குலகத்தை நம்பலாமா?

கடந்த காலங்களில் நடைபெற்ற வரலாற்றுப்பிழைகள், இஸ்ரேலின் நலன்சார் நிலைப்பாடுகள், வணிக, பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்டவற்றால் மேற்குலகம் பலஸ்தீனத்திற்கு சீரான நீதியை வழங்குமென்பதில் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர். “மேற்குலகம் கொடுக்கும் வாக்குறுதிகள், வார்த்தைகளாகவே மாறி விடக்கூடாது” என்ற கருத்தும் பலஸ்தீன ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.

இரு தேச தீர்வுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதகங்களாகப் பார்க்கும் போது, இரு தேச தீர்வு பலஸ்தீன மக்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த சுதந்திரத்தை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேம்படும்.

இஸ்ரேல் 1967ம் ஆண்டு எல்லைக்குள் திரும்ப வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான மோதல்கள் குறையலாம்.

இவ்வாறான பல நன்மைகள் இத்திட்டத்தினூடாக ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தீர்வு செயற்படுத்தப்பட முடியாமல் போனால், பலஸ்தீனர்கள் மற்றும் சுயாதீன பலஸ்தீனை விரும்பும் உலக மக்களும் மீண்டும் ஏமாற்றமடைவார்கள்.

இஸ்ரேலின் பாதுகாப்பு நிபந்தனைகள் பலஸ்தீனத்தின் முழுமையான சுதந்திரத்துக்கு தடையாக அமையலாம். ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஒதுக்கப்பட்டால், உள்நாட்டு முரண்பாடுகள் தீவிரமாகலாம் போன்ற இவ்வாறான பாதகங்களும் ஏற்படலாம்.

நீண்டு கொண்டு செல்லும் பலஸ்தீன, காசா போரையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் தொடர்ந்தும் அனுமதிக்காது, ஊகங்கள், சந்தேகங்களை அடைப்படையாகக்கொண்டு இது சரி வருமா? இல்லையா? என்று விவாதம் செய்து காலத்தை கடத்தாது, இப்பிரச்சினைக்கு தீர்வாக இரு தேச தீர்வுத்திட்டத்தை சவூதி முன்வைத்திருப்பதை முன்மாதிரியான செயலாக பார்ப்பதோடு, இது தொடர்பான சவூதி அரேபியாவின் கடப்பாடு என்ன என்ற கேள்வுகளுக்கு பதிலை பின்வருமாறு பார்க்கலாம்.

சவூதி அரேபியா என்ற நாடு, ஒரே நேரத்தில் இஸ்லாமிய உலகத்தின் தலைமை பொறுப்பையும், மேற்குலகத்துடனான நட்பு நிலையையும் சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொண்டு வருகிறது.

புனித ஹஜ்/உம்ரா கடமைகளுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் சவூதி உலகத்தில் நம்பிக்கை பெறும் நாடாகவே திகழ்கிறது.

இதற்கேற்ப, பலஸ்தீனத்திற்கு நீதி வழங்குவதில் முனைப்புடன் செயற்பட வேண்டியது சவூதியின் நீதி, சமாதானக்கடமை மட்டுமின்றி, மதப்பொறுப்பாகவும் இருக்கிறது.

பலஸ்தீனம் அதற்கான நியாயமான எல்லைகளோடு சுதந்திர நாடாக உருவாகும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாடோடு, இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் அட்டூழியங்களைக்கண்டித்தும் அதற்கெதிராக செயற்பட்டும் வருகிறது.

எனவே, இதுவொரு நம்பிக்கையின் சந்தர்ப்பமாக மாறுமா? அல்லது மீண்டும் ஏமாற்றத்தை தருமா? என்பது உலகம் எப்படி பதிலளிக்கிறது என்பதில் தான் இருக்கிறது.

உலக நாடுகள் இவ்விடயத்தில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ பகைத்துக்கொண்டு பலஸ்தீனத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய எவ்விதத்தேவைகளும் இல்லாத நிலையில், பலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு உலக நாடுகளில் வாழும் மக்களின் போராட்டங்களும் சற்று உலக நாடுகளை பலஸ்தீன விவகாரத்தில் திரும்பிப்பார்க்க வைத்தாலும், பலஸ்தீன பிரச்சினைக்குத்தீர்வு என்று வரும் போதும் சவூதி அரேபியாவின் தீர்வை ஆதரிப்பதால் சவூதியுடனான நட்பும் அதன் பயன்களும் தங்களுக்குத்தேவை என்ற அடிப்படையில் பல நாடுகள் இன்று பலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம்.

இவ்விவகாரத்தில் சவூதி அரேபியா தனது பங்களிப்பை முழுமையாக வழங்கி வரும் இந்நேரத்தில், உலக நாடுகளும் நீதியுடனும் மனமுடைந்த பலஸ்தீன மக்களது குரலுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகின்றது. உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதோடு, அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு சவூதி அரேபியாவிற்கு இருக்கிறது.

சவூதி அரேபியாவின் தீர்வுத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரபுலகிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குமிக்க பலமான நாடாக சவூதி மாறி விடுமென்பதால் சவூதியின் எதிரிகள் இத்தீர்வு வருவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

சவூதி அண்மையில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச்சூழ்ந்துள்ள மனிதப்பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” 1967ம் ஆண்டு எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என உறுதியாகத்தெரிவித்துள்ளது.

இவற்றைத்தடுப்பதற்கான குழப்பங்களை ஏற்படுத்த தவறான கருத்துக்களையும் சந்தேகங்களையும் பரப்பும் வேலைகளை திட்டமிட்ட அடிப்படையில் எதிரிகள் செய்வார்கள். அண்மைக்காலமாக இவ்வாறான சில செயற்பாடுகளும் நடந்ததைப் பார்க்கலாம்.

எனவே, இரு தேச தீர்வு என்ற திட்டம் தொடர்பான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஊகங்களை விட்டுவிட்டு இறைவனிடம் இத்தீர்வு பலஸ்தீனத்திற்கான விடிவாக அமைய வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்.

நிச்சயமாக இறைவன் எமது பிரார்த்தனையை ஏற்று ஹுதைய்பியா உடன்படிக்கையின் பின்னராக கிடைத்த வெற்றி போல பலஸ்தீனத்திற்கான வெற்றியை வழங்கப்போதுமானவன்.

Presidential Fund Rewards Outstanding A/L Performers in the Eastern ProvinceI had the honour of taking part as a guest a...
27/07/2025

Presidential Fund Rewards Outstanding A/L Performers in the Eastern Province

I had the honour of taking part as a guest at today’s awarding ceremony held at the Swami Vipulananda Institute of Aesthetic Studies in Batticaloa, where 360 students from the Eastern Province were recognized for their exceptional achievements in the 2023 and 2024 G.C.E. Advanced Level examinations.

Each student received a grant of Rs. 100,000 from the Presidential Fund, in appreciation of their academic excellence across all six subject streams. This recognition extended to top-performing students from Trincomalee, Ampara, and Batticaloa districts.

I was pleased to join this meaningful occasion alongside Hon. Jagath Wickramarathne, Speaker of Parliament; Hon. Jayantha Lal Rathnasekara, Governor of the Eastern Province; Hon. Prabu Kandasamy, Member of Parliament; Prof. Peratheepan, Vice Chancellor of Eastern University; as well as all Government Agents and senior officials of the province.

A special word of appreciation goes to Senior Additional Secretary to the President, Mr. Subash Roshan Gamage, whose dedicated coordination and commitment were pivotal in making this initiative a success.

As a government that believes in equity and merit, we have now opened the Presidential Fund to the public—making it a tool not of privilege, but of justice. Let this be a beginning that ensures no talented student is left behind, no matter where they come from.

ஜனாஸா அறிவித்தல் கந்தளாய் பேராறு அனைக்கட்டு பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அஜீஸ் சேர் சற்றுமுன் காலமானார்...
26/07/2025

ஜனாஸா அறிவித்தல்

கந்தளாய் பேராறு அனைக்கட்டு பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அஜீஸ் சேர் சற்றுமுன் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் அன்னாரின் அனைத்து விடயங்களையும் ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவர்க்கத்தை வழங்குவயாக ஆமீன் 🤲

இவர் சகோதரர் ரஸ்மி, ஆசிரியர் நிஸ்மி, சகோதரர் ஹில்மி மற்றும் சகோதரர் சல்மி அவர்களின் தந்தையும் மர்ஹூம் அமீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் இவர் தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் பிரதி அதிபர் ஆவார்

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு  - நினைவுரையி...
26/07/2025

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு - நினைவுரையில் ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் நேற்று (25) இடம்பெற்ற ஆர்.சம்பந்தன், மாலினி பொன்சேகா, லக்கி ஜெயவர்தன ஆகியோர் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) மறைந்த அண்ணன் ஆர் .சம்பந்தன் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தொடந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் நாங்கள் மிக அபூர்வமாக காண்கின்ற ஆளுமை என்று சொன்னால் அது மிகையாகாது.

சம்பந்தனுடைய அரசியல் வெவ்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராயப்பட வேண்டும். அவருடைய சரிதை எழுதப்படுகின்ற போது அந்தந்த யுகங்களில் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான அவருடைய பங்களிப்பை நாம் நிறையவே பேசலாம்.

உண்மையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அடிப்படையில் தமிழ் விடுதலைக்கட்சிகளை ஒன்றிணத்து தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கான ஜனநாயகப் போராட்டத்தை பாராளுமன்றத்தினூடாக செய்வதற்காக முதல் முறையில் அவர் 1977ம் ஆண்டு தந்தை செல்வாவுடைய மரணத்திற்கு பின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.

1983ம் ஆண்டு கலவரத்திற்குப்பிற்பாடு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இச்சபையிலிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்த பின்னணியில், அவரும் இராஜினாமா செய்து தமிழகம் சென்றார்.

தமிழகத்திலிருந்து கொண்டு அகதியாக தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த போராட்டம், அப்போராட்டத்தில் மும்மூர்த்திகளாக அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், அண்ணன் சம்பந்தன் ஆகியோர் இருந்தார்கள்.மேலும், தமிழர் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் இந்திய அரசோடு நீண்ட பேச்சுவார்த்ததைகளிலும் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான அரசியல் தலைமை எங்களுக்கு மத்தியில் இன்றில்லை என்பதையும் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற விவகாரத்தை தன்னுடைய பிற்காலத்தில் மிகத்தெளிவாக உணர்ந்து கொண்டு வடகிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு பொழுதும் நடைபெற்று விடக்கூடாதென்பதில் மிக கரிசனையோடு செயற்பட்ட ஒருவராகவும்,பகிரங்கமாக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக அதனை அவர் கூறி வந்தார். அதையிட்டு அவருக்கு நாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்ணன் சம்பந்தனைப்பற்றி நீண்டநேரமாக நாங்கள் பேசலாம். அவருடைய அரசியலில் இன்னுமொரு சவாலுக்குரிய சந்தர்ப்பமாக 2000ம் ஆண்டுக்கு பிற்பாடு அமைந்தது.

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, அப்பேச்சுவார்த்தை சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் தயார்படுத்தலின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயமானது.

வெவ்வேறாகப்பிரிந்து நின்ற அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து 22 பேரைக்கொண்ட பெரியதொரு பாராளுமன்றக்குழுவாக ஒரு பாரிய அரசியல் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பாக மிக முக்கியமான பங்களிப்பை நல்கினார்கள்.

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவில் நான் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம்களின் சார்பில் நோர்வே ஏற்பாட்டாளர்களோடு கலந்து கொண்டேன்.

அப்பேச்சுவார்த்தைகளின் போது அடிக்கடி அண்ணன் சம்பந்தனோடு கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அவரோடு ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக ஒன்றாக நான் கடமையாற்றி இருக்கிறேன்,

அச்சந்தர்ப்பத்தில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்காண்கின்ற விடயத்திலும் இன்னும் தீர்வு காணப்பட்டிருக்கின்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நாங்கள் அடிக்கடி எங்களுக்குள்ளே அளவளவியிள்ளோம்,

எப்படி சுமுகமாக இப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது என்பது சம்பந்தமான பல பிரச்சினைகளில் அவரோடு நான் கழித்த அந்த இனிய நினைவுகளைப்பற்றி மீண்டும் நான் இங்கு நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படிச்செயற்பட்டார் என்பது பற்றி நிறையப்பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார்

அவரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்திக்கின்ற அதேவேளை, தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார் என்பதை நான் சான்று பகிர்கின்றேன்.

Happy to take part in the Foundation Laying Ceremony to build a state of the art , Science Section And the Laboratory fo...
23/07/2025

Happy to take part in the Foundation Laying Ceremony to build a state of the art , Science Section And the Laboratory for my Alma Mater KMMV - Kalutara with total funding from Qatar Charity!

This is a long felt need for the community in my native town and extremely grateful to Qatar Charity for undertaking this monumental project at my request.

கௌரவிப்பு விழா; பிரதம அதிதியாக சட்டத்தரணி முஜீப் அமீன்..!தி/கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந...
20/07/2025

கௌரவிப்பு விழா; பிரதம அதிதியாக சட்டத்தரணி முஜீப் அமீன்..!

தி/கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும், க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்குமான கௌரவிப்பி நிகழ்வு கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இந்நிகழ்வின், பிரதம அதிதியாக பிரபல்ய சமூக சேவையாளரும், பரக்கா சரட்டி நிறுவனத்தின் தெற்காசியா பிராந்தியத்திற் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.

இதன்போது, சட்டத்தரணி முஜீப் அமீன் செய்துவரும் சமூக சேவைகளை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினரால் சினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

- ஊடகப்பிரிவு

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!✍️ எஸ். சினீஸ் கான்சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே...
19/07/2025

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான்

சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம், சமூகசேவை, கல்வி, மனிதாபிமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் நிலவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள சவூதி அரேபியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உதவிகள், இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இருந்துள்ளன.

• மத மற்றும் கலாச்சார உதவிகள்.

இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு மதப்பணிகள், மஸ்ஜித்கள், அரபுக் கல்விக்கான கல்லூரிகளை நிர்மாணிக்கும் பணிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்களிப்பு அளித்துள்ளது. பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய நூலகங்கள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஷாக்கள் ஆகியவை சவூதி நிதியுதவியில் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களுக்கு தேவையான உதவிகள், விசா சலுகைகள், வசதியான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றும் வழங்கப்பட்டுள்ளன.

• பொருளாதார உதவிகள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் போதும், இயற்கை அனர்த்தங்களுக்குப் பிறகும், சவூதி அரேபியா நன்கு ஆதரவளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் நெருக்கடிகளை சமாளிக்க சவூதி அரசு இலங்கைக்கு எரிபொருள் கையளிக்கவும், நிதி உதவிகளை வழங்கவும் உதவியது. குறிப்பாக 2022-23 ஆம் ஆண்டுகளில் இலங்கை மிகுந்த பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, சவூதி அரேபியாவிலுள்ள “சவூதி அபிவிருத்தி நிதி” (Saudi Fund for Development - SFD) நிதி உதவிகளை வழங்கியது.

இது தவிர, பல முக்கியமான குடிநீர் திட்டங்கள், பாலங்கள், வீதி அபிவிருத்தி, வைத்திசாலைகள், கல்வி கட்டிடங்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் இந்நிதியின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

• மனிதாபிமான உதவிகள்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது, சவூதி அரேபியா இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட உதவிகள் குறிப்பிடத்தக்கவை. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளித்தன.

மேலும், சவூதி அரசின் கீழ் இயங்கும் “King Salman Humanitarian Aid and Relief Centre” (KSRelief) நிறுவனம், பல்வேறு நேரங்களில் இலங்கையின் கிழக்குப்பகுதி மற்றும் முஸ்லிம் பகுதிகளில் நிவாரணப் பொதிகள், உணவுப் பொருட்கள், மருத்துவச் சேவைகள் போன்றவற்றை வழங்கியுள்ளது.

• கல்வி மற்றும் பயிற்சி உதவிகள்.

சவூதி அரேபியா பல இலங்கை மாணவர்களுக்கு அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றலுக்கான உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இஸ்லாமியக் கல்வி, அரபு மொழிப் பயிற்சி, ஹதீஸ், ஷரீஅத் சட்டம் உள்ளிட்ட துறைகளில் கல்வியறிவு பெற இலங்கை மாணவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது, நாட்டில் உயர் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய புலமையை வளர்க்கவும் உதவியாக அமைந்துள்ளது.

அதனுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வி தொடர்பான கருத்தரங்குகள், ஆகியவற்றிலும் சவூதி அரசின் ஆதரவு காணப்படுகின்றது.

அண்மையில் கூட வயம்ப பல்கலைக்கழகம் நகர திட்டம் திறந்துவைக்கப்பட்டது.

இருநாட்டு உறவுகளின் வளர்ச்சி
இலங்கை-சவூதி உறவுகள் நாடுகளின் அதிகாரபூர்வ சந்திப்புகளால் மேலும் வலுவடைந்துள்ளன. பல இலங்கைத் தூதுவர்கள் சவூதியில் பணியாற்றியுள்ளதுடன், சவூதி அரசத் தலைமையிலும் இலங்கை அரசின் உயர் நிலை அரசியல்வாதிகள், அமைச்சர் குழுக்கள் ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

இவ்வாறு இலங்கை - சவூதி அரேபியா உறவுகள் நீண்டகாலமாக தொடர்கிறது.

19/07/2025

Land for sale
இறு போகம் செய்யக்கூடிய வயல் 3A 1R,13Pஏக்கர் காணி விற்பணைக்கு
முள்ளிப்பொத்தானை கண்டி பிரதான வீதியில் விற்பணைக்கு உண்டு

#தொடர்பு-077-4444068

ஊடகவியலாளருக்கு கௌரவ சின்னம் வழங்கி வைப்பு!!ஊடகத்துறையில் 18 வருடங்களாக இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாகச் செயற்பட்ட...
19/07/2025

ஊடகவியலாளருக்கு கௌரவ சின்னம் வழங்கி வைப்பு!!

ஊடகத்துறையில் 18 வருடங்களாக இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி அவர்களின் ஊடக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர்.

ஊடகவியலாளரின் பிறந்த இடமான தோப்பூரில் திருகோணமலை தோப்பூர் -பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது குறித்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவிப்பு சின்னத்தினை தோப்பூர் வர்த்தக சங்கம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when mulli1stnews net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mulli1stnews net:

Share