13/07/2026
சுற்றுலாப்பயணியை உயரத்திற்குத் தூக்கி வீசிய காட்டெருமை.!!
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த அமெரிக்கக் காட்டு எருமையின் மிகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.
சுற்றுலாப் பயணி எருமையின் மிக அருகில் சென்றபோது, ஆத்திரமடைந்த எருமை அவரைத் தனது கொம்புகளால் முட்டி காற்றில் சுமார் 8 அடி உயரத்திற்குத் தூக்கி வீசியுள்ளது.
நெஞ்சைப் பதறவைக்கும் இந்த முழுத் தாக்குதல் சம்பவத்தையும் அங்கிருந்த புகைப்படக் கலைஞர் மைக் மேக்லியோட் தனது கேமராவில் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார்.
வனவிலங்குகளுக்கு மிக அருகில் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்த அதிர்ச்சியூட்டும் #வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பலத்த காயமடைந்த அந்தச் சுற்றுலாப் பயணி தற்போது அவசர மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.