04/03/2026
Update : ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் இதுவரை 87 சடலங்கள் மீட்பு
Update : இலங்கையில் மூழ்கடிக்கப்பட்டது ஈரானின் நீர்மூழ்கிக்கப்பல் என அமெரிக்க பாதுகாப்பு செயலகம் அறிவிப்பு!
இதற்கு முன்னர் இலங்கையை அன்மித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது ஈரானின் கடற்படைக்கு சொந்தமான IRIS DENA எனும் கப்பல் என கூறப்பட்டது. பிந்திய தகவலின்படி இது ஈரானின் நீர்மூழ்கிக்கப்பல் என அமெரிக்க பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.
காலியை அன்மித்த சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 40 இற்கும் மேற்பட்ட ஈரானியரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ள போதிலும் 100 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.