21/07/2023
அல்ஹம்துலில்லாஹ் --எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.....
மூதூர்,தோப்பூரின் முதலாவது -மருந்தாக்கவியலாளர்- B.Pharm (Hons) அப்துல் றஸ்ஸாக் ரோசன் றஸ்னா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (2023.07.21) ஆந் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37வது பொது பட்டமளிப்பு விழாவில் மூதூர் ஆனைச்சேனையை வசிப்பிடமாக கொண்ட அப்துல் றஸ்ஸாக் ரோசன் றஸ்னா - B.Pharm (Hons) பட்டம் பெற்று மூதூர்,தோப்பூரின் முதலாவது (மருந்தாக்கவியலாளர்) எனும் சிறப்புப் பட்டத்தை பெற்றவர் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளார்.
இவர் மூதூர் நாவலடியைச் சேர்ந்த அல்ஹாஜ் MK-அப்துல் றஸ்ஸாக்,தோப்பூரைச் சேர்ந்த ஹாஜியானி AS.முறுசிலா வீவீ தம்பதியினரின் மகளும், மூதூர் தாவூத் முகமட் ஆஷீக் (BA,DO ஆசிரியரின்) மனைவியுமாவார்.
இவர் தோப்பூர் தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் முதலாவது பழைய மாணவியும்,தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரி, தி/ஸாகிறா கல்லூரி என்பவற்றின் பழைய மாணவியுமாவார்.
தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் பயிலும்போது ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் பின்னர் அதே கல்லூரியில் க.பொ. த .சாதாரண தரத்தில் 8A,B தர சித்திகளைப் பெற்றார்.
இவர் ARM.றஸான் (Water board), ARM.றஸ்லான் (மௌலவி) ஆகியோரின் சகோதரியுமாவார்.
இவருக்கு பாலர் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை கற்றுக் கொடுத்த ஆசிரியைகள் /ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகளை குடும்பம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்:-
ஏ.எஸ்.எம்.தாணீஸ் -BBA,JP(WI),
Ex.Member Of Piradeshiya Sabha Muthur.