05/08/2026
விதிமுறைகளை மீறி பள்ளி நேரத்தில் பயணிக்கும் மணல் டிப்பர்கள்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி!
கும்புறுப்பிட்டி(Kumburubitty Jungle Beach) இருந்து புல்மோட்டை வரை தொடர்ச்சியாக இல்மனைட் மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்கள், பாடசாலை வேலை நேரங்களில் பயணிக்கக் கூடாது என உயர் அதிகாரிகள் ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இருப்பினும், இந்த உத்தரவை முற்றிலும் புறக்கணித்து, தற்போதும் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் இந்த மணல் வாகனங்கள் அத்துமீறிச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும் இந்தச் செயல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.