KVC Media Updates

KVC Media Updates KVC Media is a registered media in Kuchchaveli founded in 2015 | www.kuchchaveli.com - Updating latest news R.

KVC media is a first registered media in Kuchchaveli, Trincomalee, Sri Lanka founded by A. Muzammil BSc (Hons) UK, under the domain name www.kuchchaveli.com General secretary A.A.Riyaz of the media.

24/02/2026
24/02/2026

போதை ஒழிப்புக்கு முன்னுதாரணமாக திகளும் திரியாய் கிராம இளைஞர்கள்!!👍👏👌

8வது நாளாகவும் தொடரும் அதிரடி வேட்டை!!

நீங்க வடிக்க வடிக்க நாங்க கொத்திட்டே இருப்போம்…..

Anura Kumara Dissanayakeஅநுர குமார திசாநாயக்க Sri Lanka Police

19/02/2026

KVC MEDIA SPECIAL REPORT: திருகோணமலை கல்வி அபிவிருத்தி நிதி - கிராமப்புறங்கள் புறக்கணிப்பா? குச்சவெளிக்கு ஏன் இந்த பாரபட்சம்?

திருகோணமலை | பிப்ரவரி 19, 2026
திருகோணமலை மாவட்டத்தின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் அறிவிக்கப்பட்ட 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடானது, மாவட்டத்தின் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள் மற்றும் குறிப்பாக குச்சவெளி பிரதேசத்தை முற்றாகப் புறக்கணித்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

📍 செய்தியின் பின்னணி:
பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டில், திருகோணமலை நகரைச் சுற்றியுள்ள மற்றும் ஏற்கனவே ஓரளவு வசதிகள் கொண்ட தேசிய பாடசாலைகள் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளன. கிண்ணியா மற்றும் திருகோணமலை நகர் சார் பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மிக முக்கியமான பின்தங்கிய பிரதேசமான குச்சவெளி முற்றாக விடுபட்டுள்ளது.

❓ குச்சவெளி ஏன் புறக்கணிக்கப்பட்டது?
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் போதிய கட்டிட வசதிகள், நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றன.

• உள்கட்டமைப்பு குறைபாடு: குச்சவெளியின் பல பாடசாலைகளில் இன்றும் தற்காலிகக் கொட்டகைகளிலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

• நிபந்தனைகள் முரண்பாடு: இந்த 150 மில்லியன் நிதியானது பெரும்பாலும் "தேசிய பாடசாலைகளின்" (National Schools) புனரமைப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. குச்சவெளி போன்ற பகுதிகளில் பெரும்பாலானவை மாகாணப் பாடசாலைகளாக (Provincial Schools) இருப்பதால், தொழில்நுட்ப ரீதியாக அவை இந்த நிதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

🏚️ கிராமப்புற பாடசாலைகளின் குமுறல்
"நகரப்பகுதிகளில் உள்ள வசதியான பாடசாலைகளுக்கு மீண்டும் மீண்டும் நிதி வழங்கப்படுவதால், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் மேலும் பின்னோக்கித் தள்ளப்படுகிறது" என கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிராமப்புறங்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை?
1. நிர்வாகச் சிக்கல்: மத்திய அரசின் நிதி என்பதால், அது தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது.
2. அரசியல் செல்வாக்கு: நகர் சார்ந்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக நிதி அங்கு ஈர்க்கப்படுகிறது.
3. தரவு சேகரிப்பு: பின்தங்கிய கிராமங்களின் உண்மைத் தேவைகள் முறையாகப் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

📢 KVC Media-வின் கோரிக்கை:
வளர்ச்சி என்பது நகரத்தை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கக்கூடாது. குறிப்பாக குச்சவெளி போன்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு என்பது நகரில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லையில் இருக்கும் குச்சவெளி மாணவர்களுக்கும் உரித்தானது."
அறிக்கை: KVC Media Editorial
| | | | | | | | |

17/02/2026
17/02/2026

பிறையே !
நீ பிறந்துவிட்ட து சந்தோசம் - ஆனால்
உன் புனிதம் புரியாமல் புறக்கணிக்கப்படுவது வேதனையை தருகிறது !

நீ இடமாரிப்பிறப்பதால் தானோ என்னவோ
எம் இலங்கை மண்ணில் மதிப்பின்றி மிதிக்கப்படுகிறாய்!

நீ பிறந்த சாட்சியம்
சிறந்த முறையில் சொல்லப்பட்டும்
நம் நாட்டு எல்லையை தாண்டிப் பிறந்ததால்
மனசாட்சியை மறந்து மறுப்பது தான் வேதனையை தருகிறது !

உன் பிறப்பு ஒரு பூகோள நிகழ்வு - அது
மாதத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும் அட்புத நிகழ்வு!
ஒரு முறை மட்டுமே உன்னால் பிறக்க முடியும் என்ற உண்மை தெரிந்தும்
எம் நாட்டின் எல்லையில் ஏன் பிறக்காமல் போனாய் என
பிடிவாதமாய் முரண்டு பிடித்து
உன் முதல் நாளின் புனிதத்தை வீணடிப்பது வேதனையை தருகிறது!!

-Muza-

17/02/2026

இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருடன் உரையாடிய பின்னரே அந்நாட்டு அணி, இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க முடிவு. (பாகிஸ்தான் அமைச்சர்)

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி அநுரகுமார இதன்போது நன்றி தெரிவித்தார்.
| | | | | | | |

16/02/2026

🏏😢❤️ | MIYAN EGG CHAMPIONS TROPHY 2026 - வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த அல்ஹிலால் அணியின் அணித்தலைவர் Siros Shaan அவர்களின் உருக்கமான பேச்சு..!
| | | | | | |

ஜூலை இறுதியில் இலங்கையில் கடும் மின்சார நெருக்கடி! ⚡நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜூலை 31 முதல் ஒன்றரை மாதங்களுக்கு நுரைச...
15/02/2026

ஜூலை இறுதியில் இலங்கையில் கடும் மின்சார நெருக்கடி! ⚡

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜூலை 31 முதல் ஒன்றரை மாதங்களுக்கு நுரைச்சோலை மின்நிலையம் மூடப்பட வாய்ப்புள்ளதாக உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். இதனால் நாடு தழுவிய ரீதியில் நீண்ட நேர மின்வெட்டு அல்லது மின்கட்டண உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

15/02/2026

ஹிங்குரானை - தமண வீதியின் பரனேகம வளைவில் லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக உறுதி செய்யப்பட்டது.

14/02/2026

| அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அமெரிக்க முன்வைத்த திட்டத்தை துணிச்சலுடன் நிராகரித்துள்ளது ஈரான்…!
——————————————————

ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் 1.5% மட்டுமே செறிவூட்டலுடன் தொடர வேண்டும் என்று அமெரிக்கர்கள் முன்மொழிந்தது.

ஈரான் 60% வரை செறிவூட்டப்பட்ட 400 கிலோகிராம் யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்

அமெரிக்கா தடைகளை நீக்காது, ஈரானை தாக்குவதை மட்டுமே தவிர்க்கும் என நிராகரித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் திட்டங்களை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
| |

11/02/2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்!

Address

Main Street, Jayanagar, Kuchchaveli
Trincomalee
10350

Alerts

Be the first to know and let us send you an email when KVC Media Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KVC Media Updates:

Share

Our Story

KVC is a registered Media in Kuchchaveli, Trincomalee (Eastern Province) of Sri Lanka founded by A. R. Muzammil - Graduate of University of Westminster (UK) Bachelor of Science in Information Systems with Business Management. We as a member of KVC invest our own fund to work hard to help our community to overcome many problems which exist over several decades. We are living in different countries leaving our own families, relatives, friends, properties, communities and our lovely beautiful resourceful country because of the betterment of our society. Kuchchaveli is a coastal town located North-West of Trincomalee, Fishing is the main livelihood of the people living in this small magnificent beautiful village. But there are no developments or supports to develop people’s lives. Despite their attempts to improve the education of the younger generation, living status and economical enhancement via their traditional fishing had failed continuously for many generations as many children are compelled to engage in employment as a laborer or to join their father in his regular fishing due to the lack of regular income to spend on their education. The Kuchchaveli Voices Connect (KVC) will mainly focus on existing social, economic problems or our Kuchchaveli community and will take strategic steps to overcome. #KVC #kuchchaveli #Trincomalee #Nilaveli கனவுகளை சுமந்து கடல் கடந்து வாழ்வைத் தேடும் பயணத்தில் உதயமான சோக வடுக்களை துடைத்து சொந்தங்களோடு உறவாடி ஒன்றாய் இணைந்து நம் இதயங்கள் பேசிக்கொண்டு பசியாறும் உறைவிடமாய் உருவானது தான் இந்த கே வீ சி !!