F.B Online

F.B Online social media

பாலஸ்தீன வீரர்களுக்குவாழ்த்துக்கள்                                  Greetings to the Palestinian heroes
08/05/2021

பாலஸ்தீன வீரர்களுக்கு
வாழ்த்துக்கள் Greetings to the Palestinian heroes

அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்யப்படாத செயல்களுக்கு எவ்வித பெறுமானமும் கிடையாது. (அல்-இஹ்லாஸ்)
08/05/2021

அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்யப்படாத செயல்களுக்கு எவ்வித பெறுமானமும் கிடையாது. (அல்-இஹ்லாஸ்)

22/04/2021

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் - அவர்களுக்காக ...,

1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

21/04/2021

/ #குழந்தைகளோடு # நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்
அருமையான பயான் கேட்டு பயன்படுங்கள்

நோன்பை முறிக்கும் காரியங்கள் யாவை.?01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:உடலுறவில் ஈடுபடுதல்சாப்பிடுவது, குடிப்பதுமாதவிடாய் ஏற...
14/04/2021

நோன்பை முறிக்கும் காரியங்கள் யாவை.?

01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:

உடலுறவில் ஈடுபடுதல்
சாப்பிடுவது, குடிப்பது
மாதவிடாய் ஏற்படுதல்
பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்
வேண்டுமென்றே வாந்தியெடுப்பது
முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவது
நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்

02) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?

A) நோன்பை முறிக்காத செயல்கள்:

வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது

கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்

இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்
சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)

குளித்தல், நீந்துதல்
வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது
பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)

வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)

வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது

வாய்கொப்பளிப்பது
வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.

வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது
நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு சுருமா இடுதல்

03) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?

1) ஸஹர் செய்தல்

2) விரைந்து நோன்பு துறத்தல்

3) துஆச் செய்தல்

04) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)

இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

05) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?

பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

06) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?

நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

07) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?

யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)

08) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?

A) “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)

09) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?

A) ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.

10) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?

A) கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

11) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?

A) ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

அதிகமாகவே அறியாத மக்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும் பகிர்ந்து அறியபடுத்துவோம்.

நாளை  #கந்தளாய் # பேராறு பகுதியில் இலவசமாக சீனி பரிசோதிக்கப்படும் மருத்துவ சேவை ...
06/02/2021

நாளை #கந்தளாய் # பேராறு பகுதியில் இலவசமாக சீனி பரிசோதிக்கப்படும் மருத்துவ சேவை ...

✅ T-shart   ✅ මිල රු 770/=   ✅ S M L    ✅ Odar inbox
01/02/2021

✅ T-shart
✅ මිල රු 770/=
✅ S M L
✅ Odar inbox

Superior quality and Stylish 💟   #36-42
01/02/2021

Superior quality and Stylish 💟


#36-42

132/1 கந்தளாய்.                             அனைத்து  தலபாடங்களும் செய்து கொடுக்கப்படும். தொலைபேசி இலக்கம் றிஸ்வி=0758953...
29/01/2021

132/1 கந்தளாய்.
அனைத்து தலபாடங்களும் செய்து கொடுக்கப்படும்.
தொலைபேசி இலக்கம் றிஸ்வி=0758953522. 👍👍👍👍👍👍👍👍👍

மனித நேயத்தை உணர்த்தும் ஓர் அழகிய புகைப்படம்அறபு நாட்டின் வைத்தியர் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறத்தில்"மருத்துவ ஆலோசனை...
09/01/2021

மனித நேயத்தை உணர்த்தும் ஓர் அழகிய புகைப்படம்
அறபு நாட்டின் வைத்தியர் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறத்தில்
"மருத்துவ ஆலோசனை தேவையாயின் என் வாகனத்தை நிறுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்" என எழுதி அறிவிப்பு செய்து மக்களுக்கு தன்னாலான சேவைகளை இலவசமாக செய்து வருகிறார்.

அவ்வாறு தன்னிடம் மருத்துவ ஆலோசனை வேண்டிய ஒருவருக்கு ஆலோசனை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது.
இக்காலத்திலும் இவ்வாறான நல்லவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இறைவன் அவருக்கு அருள் செய்வானாக.

*"أوقفني إن كنت تريد استشارة طبية" *

 #மது #  #பழக்கத்திற்கு # அடிமையான மற்றும் அடிமையாக எத்தனிப்போருக்கான பதிவு.!!!!ஆரம்பத்தில் நண்பர்களுடன் சந்தோஷத்திற்காக...
25/11/2020

#மது # #பழக்கத்திற்கு # அடிமையான மற்றும் அடிமையாக எத்தனிப்போருக்கான பதிவு.!!!!

ஆரம்பத்தில் நண்பர்களுடன் சந்தோஷத்திற்காக ஆரம்பிக்கும் குடிப்பழக்கம் நாளடைவில் குடி தான் உங்கள் நண்பர்களாகிவிடுகின்றது.!!

பின்னர் குடி உங்களுள் நிரந்தரமாகவே ஊடுருவும் போது உங்களிடமுள்ள அனைத்து சந்தோஷமும் உங்களை விட்டு வெளியேறி உங்களை தனிமைப்படுத்துகின்றது.!!
நிரந்தரமில்லா குடிக்காக நிரந்தரமான சந்தோஷத்தை முழுமையாக தொலைக்கின்றீர்கள்.!!

உங்களுள் மது பழக்கத்திற்கு அடிமையான நண்பர்களோ உறவினர்களோ இருந்தால் அவர்களை மதுப்பழக்கத்திலிருந்து வெளியேற்ற முயற்சியுங்கள்.!!!
குடிப்பதற்காக ஆயிரம் காரணத்தை அவர்கள் தம் வசம் வைத்திருப்பார்கள் முதலில் அவற்றை கழையுங்கள்.!!!!

Address

Kanthale
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when F.B Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share