WIN TV

WIN TV இது மாற்றத்திற்க்கான மக்களின் குரல்!!!முகநூல்,மற்றும் எமது இனையவழி ஊடாகவும்..உடனுக்குடன் செய்திகளை பார்வையிடலாம். எப்போதும் இணைந்திருங்கள். .wintv.lk

GR plaza Grand Opening. ...Srilanka  Trincomalee. குதூகலமாக கொண்டாடப்பட்ட GR Plaza வின் பிரமாண்டமான திறப்புவிழா!!திருகோண...
23/08/2026

GR plaza Grand Opening. ...Srilanka Trincomalee.

குதூகலமாக கொண்டாடப்பட்ட GR Plaza
வின் பிரமாண்டமான திறப்புவிழா!!

திருகோணமலையில் வாழ்கின்ற மற்றும் திருகோணமலையை நோக்கி வருகை தருகின்ற மக்கள் தங்களின் பெரும்பாலான தேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் முகமாக 68000 சதுரஅடி பரப்பளவில் பல்வேறு வசதிகளைக் கொண்ட GR Plaza இல. 406 பிரதான வீதியில் மிக பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாடிகளைக் கொண்ட GR Plaza வானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இயற்கையான அம்சங்களை உள்ளீர்க்கின்ற வகையிலும் திருகோணமலையின் இயற்கை அழகை ரசிக்கின்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இதில் நிலக்கீழ் தளமானது சுமார் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கீழ் தளத்தில் பாரிய சுப்பர் மார்க்கட்டும், முதலாம் மாடி மற்றும் இரண்டாம் மாடியில் பிரமாண்டமான 500 பேருக்கு மேற்பட்டோர் இருக்கக்கூடிய மண்டபங்களும் காணப்படுகின்றன. இதில் திருமண நிகழ்;வுகள், பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியவாறு அனைத்து வசதிகளுடனும் இவை அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மூன்றாம் மாடியில் இந்தியாவின் பிரபலமான சேலம் ஆர்ஆர் புரியாணி அமைந்துள்ளது. இது உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இருந்து உணவு உண்ணக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலையின் மலைகள், கடல்கள், கப்பல்கள் போன்றவற்றை ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் உள்ள நான்காம் மாடியில் பிரமாண்டமான 15 சொகுசு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்துள்ள மேல் தளத்தில் நீச்சல் தடாகம், சொகுசு அறைகள், மாலைநேர கபே என்பன அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையினுடைய அழகை இங்கிருந்து ரசிக்கக்கூடிய வாய்ப்பு இங்கு கிடைக்கின்றது. குறிப்பாக திருகோணமலையை நோக்கி வருகின்ற சுற்றுலாப்பிரயாணிகளுக்கு இது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

இந்த கட்டமானது திருகோணமலையில் முதன் முறையாக பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பட்டய கட்டட கலைஞரான கீதபொன்கலன் கெனத் வடிவமைத்திருந்தார். கட்டட வேலைகளை கிறேஸ் கன்ஸ்ட்ரக்ஷன் மேற்கொண்டிருந்தது. இங்கிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு தாவரங்களுக்கு பயன்படுத்துகின்ற விதத்தில் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற இயற்கையோடு இயற்கையை நேசிக்கின்ற பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவற்றைவிட 100க்கும் அதிகமானவர்களுக்கான வேலை வாய்ப்பை இந்த GR Plaza நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் பல குடும்பங்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவுள்ளதோடு திருகோணமலையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளது. இவற்றின் ஊடாக இலங்கை நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

திருமணமாகி 3 மாதங்களேயான யுவதிக்கு நேர்ந்த சோகம்!!!************************************திருகோணமலை, நிலாவெளி - இக்பால் நக...
19/08/2026

திருமணமாகி 3 மாதங்களேயான யுவதிக்கு நேர்ந்த சோகம்!!!
************************************
திருகோணமலை, நிலாவெளி - இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவர், திருமணமான சில மாதங்களிலேயே தீ விபத்தில் சிக்கி உ**யி**ரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரி**த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குப்பைகளை எரி**க - ம**ணெண்**ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த Paint Thinner (தின்னர்) திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் பலத்த தீ**க் - காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் திகதி அவர் உ**யி**ரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

🛑Paint Thinner எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. குப்பைகளை எரி**க அதைப் பயன்படுத்தக் கூடாது.

🛑இவ்வாறான பொருட்களைச் சமையலறை, விறகு அடுப்பு அல்லது தீ மூலங்களுக்கு அருகில் வைக்காமல், நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் தனியாகச் சேமிக்க வேண்டும்.

🛑இத்தகைய இரசாயனப் பாட்டில்களில் தெளிவாக அடையாளமிட்டு, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பத்திரமாக வைப்பது அவசியமாகும்.

இந்த சம்பவத்தை ஒரு பாடமாகக் கொண்டு, நாமும் நம் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க, இதுபோன்ற ஆபத்தான பொருட்களைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

யுவதியின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


#திருகோணமலை #தீவிபத்து #தீபாதுகாப்பு #உயிர்பாதுகாப்பு #விழிப்புணர்வு

19/08/2026

இந்தியா ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம்!!!
****************************************
13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் மகா பாலியல் வன்கொடுமை!!!!

இந்த நிலையில்,குறித்த 32 பேரையும் பிடித்த பொது மக்கள் அவர்களை
கயிற்றால் கட்டி,வீதியில் வைத்து தாக்குதல் நடத்தினர்..
சமூக ஊடகங்களில்
பெரும் வைரலாகி வரும் கானொளி..

திருகோணமலை மாவட்டப் பொது மருத்துவமனையில் சாதனை— சிறுநீரகவியல் பிரிவு***************************************52 வயதான ஆண் ...
15/08/2026

திருகோணமலை மாவட்டப் பொது மருத்துவமனையில் சாதனை— சிறுநீரகவியல் பிரிவு*
**************************************

52 வயதான ஆண் நோயாளி ஒருவரிடமிருந்து, *3.1 kg கிலோ* எடையுள்ள ஒரு பிரம்மாண்டமான சிறுநீர்ப்பைக் கல்லை, திறந்த சிறுநீர்ப்பைக் கல் அறுவை சிகிச்சை (open vesicolithotomy) மூலம் சேதமின்றி வெற்றிகரமாக அகற்றியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முன்னறிவிப்புக்காக, கின்னஸ் உலக சாதனைகளால் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல்லின் எடை 1.9 kgகிலோ ஆகும் (பிரேசில், 2003). முறையான சரிபார்ப்பும், ஒரு மருத்துவ அறிக்கையும் தயாராகி வருகின்றன.

டாக்டர் பிரகலாததன் பாலகிருஷ்ணன் (ஆலோசகர் சிறுநீரகவியல் நிபுணர்), டாக்டர் ஜே.எம். இஹ்ஷான் (மருத்துவ அதிகாரி), டாக்டர் எம்.எம். ரிஸ்லி (மருத்துவ அதிகாரி), டாக்டர் சி. பிரகலாததன் (சிறுநீரக சுகாதார அதிகாரி) மற்றும் டாக்டர் அமிலா ஜெயகாடு (ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர்) ஆகியோர் தலைமையிலான குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு மயக்க மருந்து, அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் வார்டு செவிலியர் குழுவினர் ஆதரவளித்தனர்.

கவனிக்கப்படாத சிறுநீர்ப்பை வெளியேற்றத் தடை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கும், நமது பிரிவின் திறனுக்கும் இது ஒரு சான்றாகும். இதில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

15/08/2026
14/08/2026

குடிவரவு,மற்றும் குடியகழ்வு, திணைக்களத்திற்க்குள் அத்துமீறி பிரவேசித்த ராட்சத முதளையாள் பதற்றம்..

ஹிஜாப் அணியாமல் பாடியதால் 74 கசையடிகள்! ஈரானியக் கலைஞர் பரஸ்தூ அஹ்மதிக்குக் கடும் தண்டனை!!!
05/07/2026

ஹிஜாப் அணியாமல் பாடியதால் 74 கசையடிகள்! ஈரானியக் கலைஞர் பரஸ்தூ அஹ்மதிக்குக் கடும் தண்டனை!!!

05/07/2026

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 1000-இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீக்கம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால.

20/06/2026

பார்வையற்ற அப்துல்லாஹ்வின்..அருமையான உபதேசம் க.பொ.ச.த பரீட்சை வாழ்க்கையின் முடிவல்ல..

Address

Trincomalee
31000

Telephone

+94715736975

Alerts

Be the first to know and let us send you an email when WIN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WIN TV:

Shortcuts

Share