01/07/2025
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி
திருக்கோணமலை
206 வது ஆண்டில்
1819 ம்ஆண்டில் மெதடிஸ்த மிஷனால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 206 வது ஆண்டில்
கால்பதித்துள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்தின் முதலாவது பாடசாலை இதுவே.
இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு காலி
கரையை1814 ம்ஆண்டில் வந்தடைந்த மெதடிஸ்த மிஷனரிமார்
அந்த ஆண்டிலேயே தமது கல்விப்
பணிகளை காலி,மாத்தறை,மட்டக்க-
ளப்பு ஆகிய இடங்களில் ஆரம்பித்த-
னர்.சாமுவேல் ப்ரோட்பென்ற் என்ற
திருப்பணியாளர் திருக்கோணம-
லைக்கு பொறுப்பாக நியமிக்கப்-
பட்டு 1817 இல் அவர் இங்கு வந்து
மிஷன் பணிகளை மேற்கொண்டார்.
1819இல் மெதடிஸ்த பெண்கள்
பாடசாலை தொடங்கப்பட்டது. இது
ஆங்கில பாடசாலையாக இயங்கியது.
தொடர்ந்து சுதேச(தமிழ்) மாணவர்க-
ளுக்காக பெருந்தெருவிலும்
(தற்போது பெருந்தெரு விக்னேஸ்வரா
ம.வி), குட்டுக்கரவாடியிலும்(தற்போது
ஜமாலியா முஸ்லிம் ம.வி) இரு பாட-
சாலைகள் மெதடிஸ்த மிஷனால்
ஆரம்பிக்கப்பட்டன.
சாம்பல்தீவு,நிலாவெளி,குச்சவெளி
திரியாய்,மூதூர் போன்ற பகுதிகளிலும்
பல பாடசாலைகளை மெதடிஸ்த
மிஷனரிமார் ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்,பிற்-
பகுதியிலும் திருக்கோணமலை
மாவட்டத்தில் முறைசார் பாடசாலைகளை ஆரம்பித்த பெருமை
மெதடிஸ்த மிஷனையே சாரும்.
மிஷன் இல்லத்தில் இயங்கி வந்த
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை
1856இல் மெதடிஸ்த திருச்சபைக்கு
அருகில் தனியான கட்டிடத்திற்கு இட-
மாற்றப்பட்டது.1859இல் மேலும் பலகட்டிடங்கள் அமைக்கப்பட்டு விடுதி
வசதியும் கொண்ட பாடசாலையானது.
ஆரம்ப காலத்தில் வேம்படிப்பாட-
சாலை எனவும் இப்பாடசாலை
அழைக்கப்பட்டது.
செல்வி.எவரெட்,செல்வி.கார்டினர்
செல்வி.கிறீன்வூட் முதலிய ஆங்கி-
லேயர் பாடசாலையின் அதிபர்களாக
கடமையாற்றியிருக்கின்றனர்.
1949இல் திருமதி.எம்.அருமைநாய-
கம் அவர்கள் முதலாவது சுதேச
அதிபராக பொறுப்பேற்றார்.அவரைத்
தொடர்ந்து,
திருமதி.இ.ஆர்.குணரெட்ணம்
திரு.என்.சந்திரகாந்தன்
திருமதி.எம்.சோமசுந்தரம்
செல்வி.கே.பொன்னம்பலம்
திருமதி.உ.ஜோதிநாதன்
ஆகியோர் அதிபர்களாக கடமையாற்-
றியுள்ளனர்.தற்போது திருமதி.
தேவதாஸ் அவர்கள் அதிபராக
கடமையாற்றுகின்றார்.
மாவட்டத்தின் மூத்த பாடசாலைக்கு
எமது வாழ்த்துகள்.
சி.தண்டாயுதபாணி
மேனாள் அதிபர்
இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி