14/06/2026
புல்மோட்டையின் முக்கிய சமூகப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய
அப்துல் சமது அயினியப்பிள்ளை
அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி முழு புல்மோட்டை மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
1990களில் அவர் ஆற்றிய சமூக சேவைகள் அளப்பரியவை. யுத்த காலத்தின் சவாலான சூழ்நிலைகளில், அவரது சிங்கள மொழிப் புலமையும் வெளி நிறுவனங்களுடனான தொடர்புகளும் பல பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்தன. சட்ட உதவிகள் குறைவாக இருந்த காலத்தில், மக்களின் நலனுக்காக தனது செல்வாக்கையும் அனுபவத்தையும் அர்ப்பணித்தார்.
அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலம் முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசமான ஆதரவாளராக இருந்து வந்த அவர், கொள்கையில் உறுதியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டார்.புல்மோட்டை பெரிய பள்ளிவாசல் செயலாளருக இருந்தவர்.
1811 பரியார் எனப்படும் பாரம்பரிய வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவரும், புல்மோட்டையின் முதல் குடியினருள் ஒருவருமான அவர், அனைவராலும் மதிக்கப்பட்ட சமூகத் தலைவராகத் திகழ்ந்தார். அவரது குடும்பம் பரந்தது; அன்பும் மரியாதையும் பெற்ற குடும்பத் தலைவராக வாழ்ந்தார்.
அவரது சேவைகள், தியாகங்கள் மற்றும் மக்களுக்காக செய்த அர்ப்பணிப்புகள் என்றும் புல்மோட்டை மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.