Vaibz News தமிழ்

  • Home
  • Vaibz News தமிழ்

Vaibz News தமிழ் VAIBZ News is an authorised and registered news website in Ministry of Mass Media of Sri Lanka.

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் ""விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்'' குழுவினர் வருகை ஹட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார...
20/07/2025

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் ""விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்'' குழுவினர் வருகை

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் இன்று (20)ஞாயிறுக்கிழமை இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்

விஷ்வால் குழுமத்தினரால் விஷ்ணு பெருமானை ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு ஆராதிக்கும் ""விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்'' நிகழ்வு இடம்பெற்றதையும் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும்..!– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்...
20/07/2025

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும்..!

– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:

"கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான,தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும்.

நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர். இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள்

புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, எனவும் பிரதமர் தெரிவித்தார்.

மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்..!ஈழத்து  இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்...
19/07/2025

மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்..!

ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் 16 ஜூலை 2025 அன்று உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார்.

1951 ஆகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவில்லில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவர்.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல நூறு நிகழ்ச்சிகளில் மிருதங்க இசை மீட்டி மக்களை மகிழ்வித்து வந்தவர்.
இவரது மிருதங்க நாதம் என்பது மிகவும் உன்னதமானது.
பாடகர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் மிருதங்க நாதத்தை வழங்கிப் புகழ்பெற்றவர்.
ஆடற்கலை அரங்கேற்றங்களிலும் இவரது மிருதங்க இசை மீட்டல் ஆடல் புரிகின்றவர்களுக்கு மிகச்சிறப்பான ஒத்திசைவாக இருக்கும்.
பல மாணாக்கர்களை ஐரோப்பிய தேசத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவர்.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவராகவும் பிரபல்யமான மிருதங்க ஆசிரியராகவும், அணிசேர் கலைஞருமாக விளங்கிய பிரணவநாதன் சங்கீதரத்தினம், லயஞானகுமாரன் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன், பம்பாய் ஜெயஸ்ரீ, கடம் உமாசங்கர், நெய்வேலி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுக்கு தனது மிருதங்க லயத்தால் அழகு சேர்த்தவர்

ஐரோப்பிய நாடுகளில் கர்நாடக இசையைப் பரப்பும் பணியில் முன்னணி பங்கு வகித்தவர்.
மிகவும் நுண்ணியதுடன் அதீத ஈடுபாட்டுடனும், இசைக்காக வாழ்ந்த அற்புத மிருதங்க வித்துவான்.

அவரது மறைவு ஈழத்து இசைப்பாரம்பரியத்துக்கு பேரிழப்பாகும்.
அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜெர்மனியில் வூர்பட்டால் நகரில் நடைபெற உள்ளது.
அவரது நினைவுகள் அவர் மீட்டிப் பதிவாகியுள்ள மிருதங்க இசையூடாக இவ்வுலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது நினைவுகளும் நிலைபெற்றிருக்கும்.


இந்த அரசாங்கம் இடது பக்கம் சிக்னல் போட்டு வலது பக்கமாக சென்று கொண்டு நாட்டை அழித்து வருகிறது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
19/07/2025

இந்த அரசாங்கம் இடது பக்கம் சிக்னல் போட்டு வலது பக்கமாக சென்று கொண்டு நாட்டை அழித்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் கட்டமைப்பு சார் மாற்றமொன்றை மேற்கொள்வதாக இருந்தால், வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். என்றாலும், எந்த பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் இதனை முன்னெடுக்க விளைவதன் காரணமாக இந்த முயற்சி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, கேள்வி எழுப்புவேன்.
அரசாங்கம் இந்த விடயத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அரசாங்கம் பாராளுமன்றத்தில் எனது பேச்சுச் சுதந்திரத்தை பறித்தாலும், இந்த விடயங்களை முன்வைப்பேன். இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து நேர்மறையான தீர்வுகளை தேடுவதற்கு நாடினாலும், அரசாங்கம் எனது பேச்சுரிமையை அனுமதிக்க மறுப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான விதைகள், உரங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான இரசாயன பதார்த்தங்கள் போன்ற முக்கிய பொருட்கள், உபகரணங்கள் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் முயற்சித்த போதிலும், எமக்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை. விவசாயிகளை கோலோட்ச வந்த இந்த அரசாங்கம் விவசாயிகளை அழித்து வருகிறது. குறைந்தபட்சம் அறுவடைகளுக்கான உத்தரவாத விலைகள் கூட விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் முற்றுலுமாக மீறப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

"பிளாக்மெயில்" படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா க்ளிக்ஸ் ..!
19/07/2025

"பிளாக்மெயில்" படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா க்ளிக்ஸ் ..!

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில்...
19/07/2025

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஸ்ரீனிவாஸ், தனது மகள் சரண்ஜாவுடன் யாழில் ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
”யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்ஜா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்விப்பார்கள்.

மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது.

தற்காலத்தில் திரையுலகில் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. முன்னைய கால படங்களில் ஒவ்வொரு படங்களிலும் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். தற்கால படங்களில் அவ்வாறு இல்லை.

ஆனாலும், தற்போது இசை மேடைகள் தாரளமாக பாடகர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. அதனால் பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதனூடாக பாடகர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை தாண்டி இசை மேடைகளில் நேரடியாக பாடி இரசிகர்களை மகிழ்விப்பது ஒரு மன திருப்தியை பாடகர்களுக்கு தருகிறது.

யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஊடாக அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன.

இருந்தாலும் தென்னிந்தியாவில் உள்ள வாய்ப்புகள் வசதிகள் போன்று இங்கு இல்லை. அதனால் இசைத்துறை சார்ந்து கற்பவர்களுக்கு வகுப்புகள் பயற்சிகள் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஏற்பாடுகளை செய்தால் நிச்சயமாக எனது ஆதரவை வழங்குவேன் என பாடகர் ஸ்ரீநிவாஸ் மேலும் தெரிவித்தார்.

படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்..!ஆக்‌ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு காயம் - சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத...
19/07/2025

படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்..!

ஆக்‌ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு காயம் - சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒரு மாதம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல். படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.

இலங்கை சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு ரவி மோகன் ஆதரவு!இன்று காலை கொழும்பில், பிரபல இந்திய நடிகர் மற்றும் தயாரி...
19/07/2025

இலங்கை சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு ரவி மோகன் ஆதரவு!

இன்று காலை கொழும்பில், பிரபல இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன், பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் ஆகியோர் இலங்கை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும், கலாச்சார மேம்பாட்டிற்கும் புதிய பரிமாணங்களை வழங்கவல்ல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.
இந்த சந்திப்பில், இலங்கையின் அழகான சுற்றுலாத் தலங்கள் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான திரைப்படத் தயாரிப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் இயற்கை எழிலையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதன் மூலம், உலகளாவிய பார்வையாளர்களை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையின் இசை மற்றும் கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, நாட்டின் சுற்றுலா கவர்ச்சியை அதிகரிப்பது பற்றியும் பேசப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்கள், இலங்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும் இந்திய திரையுலக பிரபலங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 #இஸ்ரேலில் 20 இலங்கையர் பயணித்த பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக தகவல், இதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும்...
19/07/2025

#இஸ்ரேலில் 20 இலங்கையர் பயணித்த பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக தகவல், இதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன்...
19/07/2025

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. இவர் பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்துள்ளார். சமையல்காரன் பாடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.

மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.★★★

மு.க.முத்து (14 ஜனவரி 1948 பிறந்த இவர்
தமிழ்த் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.

முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார்.

தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது.

தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்பு பணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு.

பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான மாட்டு தாவணி என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.

வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து
தனது 77 வது அகவையில்
19 ஜூலை 2025 இன்று
சனிக்கிழமை சென்னையில்
காலமானார்.

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு!முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அ...
18/07/2025

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.மோகனஜீவன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், இலங்கைக்கான பெண் சாரணிய இயக்கத்தின் அதிகாரிகள், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இன்று யாழ்ப்பாணம் வருகை ..!யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதற்கு ...
18/07/2025

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இன்று யாழ்ப்பாணம் வருகை ..!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதற்கு தேவையான பேருந்தினை வாங்குவதற்கு தேவையான நிதியை இசை நிகழ்வின் மூலமாக சேகரிப்பதன் பொருட்டு யாழ்ப்பாணம் வருகை தந்தார் தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்.

பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vaibz News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaibz News தமிழ்:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

GOWRI BRUNTHAN

Media Personality

Dip-in-Journalism (SRM University )

Former Presenter/ Producer (Sooriyan FM)

Former Shakthi TV News Reader