Ezhuna

Ezhuna ஈழக்கற்கைகள் சார்ந்த ஆய்வுகளுக்கான உரையாடல் தளம்

எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாபநோக்கற்ற அமைப்பாகும்.

மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு - நல்லூர் சிவகுரு ஆதீனம்.எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுத...
18/10/2025

மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு - நல்லூர் சிவகுரு ஆதீனம்.

எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் 'மாறுபாடில்லா உண்டி' எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

வேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க, 'ஏன் இந்தப் புத்தகத்தினை வாசிக்க வேண்டும்?' என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ணன் பிரவீன்ராஜ் அவர்கள் உரையாற்றியிருந்தார். நூலாசிரியரும் சித்த மருத்துவருமாகிய தியாகராஜா சுதர்மன் அவர்களால், அருகிவரும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக பெருகி வருகின்ற நோய்கள் தொடர்பில் சிறப்புரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள், மாணவர்கள், சித்த மருத்துவத் துறையினர், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முழு விபரங்களிற்கு

எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் 'மாறுபாடில்லா உண்டி' எனும் நூலின் அற.....

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள் | இலங்கை: பயங்கரவாதத் தடைச் சட்டம் - ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு | ஆங்கில ...
17/10/2025

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள் | இலங்கை: பயங்கரவாதத் தடைச் சட்டம் - ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு | ஆங்கில மூலம் : சூரியா விக்ரமசிங்க | தமிழில் : எஸ்.கே. விக்னேஸ்வரன்

1971 ஆம் ஆண்டு நடந்த ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கையாள்வதற்காக 1972 இல் ‘குற்றவியல் நீதி ஆணையங்கள் சட்டம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் விதிகள் பணப்பரிமாற்றக் கட்டுப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இதனால் உருவாக்கப்பட்ட ஆணையங்கள் ஆயுள் தண்டனை உட்பட்ட, சிறைத் தண்டனைகளை விதிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தன.

இந்தச் சட்டம் எட்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்பதும், நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், எளிய பெரும்பான்மையுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் அதை நீடிக்க முடியும் என்பதும் அதில் உள்ளடங்கியிருந்தது. ஆயினும் இது 1977 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் இல்லாமலாக்கப்பட்டது.

முழுமையான கட்டுரைக்கு

1971 ஆம் ஆண்டு நடந்த ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கையாள்வதற்காக 1972 இல் ‘குற்றவியல் நீதி ஆணையங்கள் சட்டம்...

நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்.எழுநாவினால் வெளியிடப்பட்ட சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா.சடகோபன் அவர்கள...
17/10/2025

நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்.

எழுநாவினால் வெளியிடப்பட்ட சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா.சடகோபன் அவர்களின் " சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு " நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர், சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 ( சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

1968 - 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி - பகுதி 1 |  ஈழத்தமிழர் அரசியல் வரலாறு | சி. அ. யோதிலிங்கம்சுதந்திரத்திற்குப் பின...
16/10/2025

1968 - 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி - பகுதி 1 | ஈழத்தமிழர் அரசியல் வரலாறு | சி. அ. யோதிலிங்கம்

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு சக்திகள் தொழிற்பட்ட போதும் தமிழரசுக்கட்சி மட்டுமே ஒரு போராட்ட சக்தியாக தமிழ்த்தேசிய அரசியலை வீரியத்துடன் முன்னெடுத்தது. 1956 முதல் 1961 வரை அதன் போராட்ட வீச்சு அதி உச்ச நிலையில் இருந்தது. 1965 இல் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தில் அங்கம் பெற்றதைத் தொடர்ந்து வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் சென்றது.

ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் போராட்டத்தை நடாத்துவதற்கென உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் இளைஞர் இயக்கமாக தமிழர் அரசியலில் தோற்றம் பெற்றது. இதுவே பின்னர் தொடர்ச்சியான தீவிர இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது.

முழுமையான கட்டுரைக்கு

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு ச...

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை - பகுதி 2 | இலங்கையின் அரசியல் ...
15/10/2025

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1900 - 1981: பன்முகநோக்கு |ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

1911 ஆம் ஆண்டில் ‘படித்த இலங்கையர்’ ஆசனத்திற்கான தேர்தல், சிங்கள - தமிழ் உயர்குழாம்களிடையே தேசியவாத உணர்வை வளர்த்தது. மிதவாதிகளான சிங்கள, தமிழ்த் தலைவர்கள் 1917 ஆம் ஆண்டில் ‘இலங்கைச் சீர்திருத்தக் கழகம்’ (Ceylon Reform League) என்ற அமைப்பை உருவாக்கினர். அதே ஆண்டில் ‘இலங்கை தேசிய அமைப்பு’ (Ceylon National Association) என்னும் அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பின்னர் இரு ஆண்டுகள் கடந்த பின் 1919 ஆம் ஆண்டில் இவ்விரு அமைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டு ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ (Ceylon National Congress) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றிணைந்த சிங்கள, தமிழ் தலைவர்களிடையே பின்னர் கருத்து வேறுபாடுகள் முற்றின. 1921 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் உடைவுற்றது.

முழுமையான கட்டுரைக்கு

1911 ஆம் ஆண்டில் ‘படித்த இலங்கையர்’ ஆசனத்திற்கான தேர்தல், சிங்கள - தமிழ் உயர்குழாம்களிடையே தேசியவாத உணர்வை வளர்த.....

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம்...
15/10/2025

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ் பிராந்தியம்.

எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

நூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. யேசுதாஸ் அவர்கள் "உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் உசாத்துணைக்காக இவ்வாறான ஆய்வு நூல்கள் வெளிவருவது அரிதானதொன்று, சமூகத்திற்கு, குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ் ஆய்வு நூல்களை எழுநா வெளியிடுவது பாராட்டப்பட வேண்டிய விடயம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முழு விபரங்களிற்கு

எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உ.....

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் வடிவங்களும் அவற்றின் உருவாக்கங்களும் | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் ...
14/10/2025

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் வடிவங்களும் அவற்றின் உருவாக்கங்களும் | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் | சின்னையா மௌனகுரு

தமிழ் நாடக வரலாற்றை ஆராய்ந்த பலரும் சமயச் சடங்குகளையே அதன் மூலங்களாகக் குறிப்பிடுகின்றனர். சமயச் சடங்கு எனும் அந்தக் கருப்பையில் இருந்தே ஆடலும் பாடலும் உள்ளிட்ட ஏனைய கலைகளும் தோன்றியதாகவும், பின்னாளில் அந்த ஆடல்களும் பாடல்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து கூத்துகளாக மாறியதாகவும் ஒரு கொள்கை நிலவுகிறது.

சமயச் சடங்குகளை நாடகமாகக் கொள்ளலாமா? என்று சிலர் வெகுண்டெழலாம். அவர்களுடைய கூற்றில் நியாயப்பாடு உண்டு, ஏனெனில் சடங்கு ஒருபோதும் நாடகமாகாது. காரணம், அது முழுக்க முழுக்க நம்பிக்கையோடு செய்யப்படுவதும், மீண்டும் மீண்டும் நடத்தப்படுவதுமாகும். இந்தச் சமயச் சடங்குகளையே ஆய்வாளர்கள் கலைகளின் கருப்பை எனக் குறிப்பிடுகின்றனர்.

முழுமையான கட்டுரைக்கு

தமிழ் நாடக வரலாற்றை ஆராய்ந்த பலரும் சமயச் சடங்குகளையே அதன் மூலங்களாகக் குறிப்பிடுகின்றனர். சமயச் சடங்கு எனும.....

கருத்துரை | கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு | துலாஞ்சனன் விவேகானந்தராஜாதமிழ் பேசும் சக ...
14/10/2025

கருத்துரை | கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு | துலாஞ்சனன் விவேகானந்தராஜா

தமிழ் பேசும் சக கிழக்கிலங்கைத் தமிழரை விட மகியங்கனை – தம்பானையில் சிங்களம் பேசும் உள்நாட்டு வேடரை, அவர்கள் தங்களுக்கு நெருங்கியவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதும், தமிழரிடமிருந்து வேடர் சுவீகரித்துக்கொண்ட மாரி, காளி முதலிய தெய்வங்களை வேடர் இன்றும் ‘தமிழ்க்கலை’ என்றே வேறுபடுத்தி அழைப்பதும், இந்நூலை வாசிக்கும் ஒருவருக்குப் பிடிபடும்.

முழுமையான கருத்துரைக்கு

கடந்த 2025.07.20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் எழுநாவ....

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை - பகுதி 1 | இலங்கையின் அரசியல் ...
13/10/2025

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1900 - 1981: பன்முகநோக்கு |ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் பயனாக சட்டசபை (Legislative Council) என்ற அமைப்பு அறிமுகமானது. இவ்வாறு அறிமுகமான சட்டசபை என்ற நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியுற்று, சனப்பிரதிநிதிகள் சபை, செனற் என்ற இரு சபைகளைக் கொண்ட பராளுமன்றமாக உருவாகியது. இலங்கை, பாராளுமன்ற முறை ஜனநாயக நாடாக வளர்ச்சி பெறுவதற்கான மூலவித்து 1833 இல் இடப்பட்டது.

இலங்கையின் மக்கள் சமூகங்களின் பங்கேற்புக்கான (Popular Participation) ஒரு நிறுவனமாக சட்டசபை வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அச்சபை ஆளுநரின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. அது காலனி நாடான இலங்கையின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களைக் கொண்ட சபையாக இருக்கவில்லை. அச்சபையில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை முன்மொழியும் அல்லது தெரிவு செய்யும் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கவில்லை.

முழுமையான கட்டுரைக்கு

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் பயனாக சட்டசபை (Legislative Council) என்ற அமைப்பு அறிமுகமானது. இவ்வாறு அறிமுகமான சட்டச...

நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் எழுநாவால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின்  " வடக்கு-கிழக்குப் பிர...
13/10/2025

நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்

எழுநாவால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் " வடக்கு-கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்" என்ற நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் யாழ் பிராந்திய சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மலையகத்தின் போராட்ட எழுச்சியும் தியாகிகளின் வரலாற்று எழுதுகையும்: மாத்தளை ரோகிணியின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தி...
11/10/2025

மலையகத்தின் போராட்ட எழுச்சியும் தியாகிகளின் வரலாற்று எழுதுகையும்: மாத்தளை ரோகிணியின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நூலை முன்வைத்து | எம்.எம். ஜெயசீலன்

மாத்தளை ரோகிணி என அறியப்படும் திரு. ஐயாத்துரை அவர்களுக்கு மலையகத் தமிழர் வரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் தனித்துவமானதோர் இடமுண்டு. ஒரு தொழிலாளியாக இருந்து, அத்தொழிலாளர் குழுவிற்குத் தலைமை தாங்கும் தொழிற்சங்கத்துக்குத் தலைவராக உயர்ந்த சிறப்புக்குரியவர், அவர். தொழிற்சங்கவாதியாக இயங்கிய காலத்திலும் அரசியல்வாதியாகப் பரிணமித்த காலத்திலும் கொள்கைப் பற்றுடன் அவர் செயலாற்றி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இத்தனைக்கும் மேலாக அவர் ஒரு மக்கள் படைப்பாளியாகவும் ஆய்வாளராகவும் பயணித்துள்ளார். அவரின் பங்களிப்புகளுள் முக்கியமானதொன்றாக, ‘உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ என்ற நூல் விளங்குகிறது. அந்நூலே மலையகத்தில் இடம்பெற்ற உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்தவர்களின் அடிப்படையான செய்திகளை முதன்முதல் விரிவாகத் திரட்டித் தந்துள்ளது.

முழுமையான கட்டுரைக்கு

மாத்தளை ரோகிணி என அறியப்படும் திரு. ஐயாத்துரை அவர்களுக்கு மலையகத் தமிழர் வரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் தன.....

கருத்துரை | உத்தியாக்கள்: சில நினைவலைகள் | சின்னையா மௌனகுருஉத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராச...
11/10/2025

கருத்துரை | உத்தியாக்கள்: சில நினைவலைகள் | சின்னையா மௌனகுரு

உத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராசிரியர் ரகுபதி என்னிடம் ஒரு முறை கூறினார். 1980களில் இது நடந்தது. இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் என் ஆய்வைப் படித்தபின் அவர் இப்படிக் கூறியமை நினைவுக்கு வருகிறது. எனது கலாநிதிப்பட்ட ஆய்வில் இந்த உத்தியாக்களைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பின் கடற்கரையோரம் வாழ்கின்ற வேடர் சமூகம், இறந்தபின் உயிரோடு மேலே வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் தம் முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடு தான் உத்தியாக்கள் வழிபாடு.

முழுமையான கருத்துரைக்கு

உத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராசிரியர் ரகுபதி என்னிடம் ஒரு முறை கூறினார். 1980களில் ....

Address

#63, Sir Pon Ramanathan Road, Kallady, Thirunelvelly

Alerts

Be the first to know and let us send you an email when Ezhuna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ezhuna:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Ezhuna Media Foundation is a non - profit, charitable independent media organization founded in 2012. The primary objective of this organization is to record the various voices of the people, especially those occupying the margins of society. Operating in the social spaces closely related to Sri Lanka’s Tamil speaking communities, Ezhuna aims at recording, preserving and engaging with various forms of arts and culture associated with these communities. It also aims to specialize in print medium, visual medium, radio broadcasting and internet medium covering a range of social, cultural, political and economical issues. As an independent body, Ezhuna Media Foundation will bring together different social groups, and organizations representing conflicting ideological positions. The foundation looks forward to collaborating with individuals and organizations that are interested in contributing to its endeavors in the above mentioned domains. Objectives * Initiate the traditional print medium efforts that publishes books, journals, magazines and newspapers * Introduce the most powerful visual medium to specialise in producing documentries, short-films and talk shows * Provide a radio broadcasting service which broadcasts content that is popular and relevant to Sri Lanka's Tamil speaking communities and provide a mechanism for enabling individuals, groups to tell their own stories and to share experiences. * Build a more interactive internet and mobile medium that would connect rest of the mediums and also function in all possibilities.