தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City

தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City News & media website
(1)

17/06/2025

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது - அதற்குப் பின்னரான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது ; எரிசக்தி அமைச்சு..

வவுனியா புளியங்குளம் பகுதியை சேர்ந்த அமரர் சுவர்ணலதாவின் கணவனுக்கு சுவர்ணலதாவுடன் தான் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை அ...
05/06/2025

வவுனியா புளியங்குளம் பகுதியை சேர்ந்த அமரர் சுவர்ணலதாவின் கணவனுக்கு சுவர்ணலதாவுடன் தான் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை அனுப்பி வெறுப்பூட்டிய அருட்குமரன் இவர்தான், இதோடு அல்லாமல் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தானே அப்பா என்றும் கூறியுள்ளார். இவர் செய்த செயலால்தான் மனைவியின் கழுத்தை அந்த கணவன் ஆத்திரத்தில் வெட்டியுள்ளான்.

04/06/2025
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிசார் பலகோ...
04/06/2025

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிசார் பலகோணத்தில் விசாரணை

வவுனியா அனந்தர்புளியங்குளம் நொச்சிக்குளத்தை சேர்ந்த ர. சுவர்ணலதா என்ற 32 வயது பாடசாலை ஆசிரியை அவரின் கணவரால் காட்டுப்பகு...
03/06/2025

வவுனியா அனந்தர்புளியங்குளம் நொச்சிக்குளத்தை சேர்ந்த ர. சுவர்ணலதா என்ற 32 வயது பாடசாலை ஆசிரியை அவரின் கணவரால் காட்டுப்பகுதியில் வைத்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கணவர் தலையுடன் புளியங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

வைத்தியர் முகைதீன் கொலை! நீதிபதி மா.இளஞ்செழியனின் தீர்ப்பை மாற்றி புளொட் நெடுமாறன் விடுவிப்புவவுனியாவில் வைத்தியர் முகைத...
20/05/2025

வைத்தியர் முகைதீன் கொலை! நீதிபதி மா.இளஞ்செழியனின் தீர்ப்பை மாற்றி புளொட் நெடுமாறன் விடுவிப்பு

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன்,அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

வவுனியாவில்கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளொட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இத்தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்ட மாஅதிபர்சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

📷 வவுனியாவில் சூறாவளி -  முறிந்த மரங்கள் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
17/05/2025

📷 வவுனியாவில் சூறாவளி - முறிந்த மரங்கள் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

13/05/2025

சற்று முன்னர் கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே மரணம்.

மாத்தறை எலியகந்த பிரதேசத்தில்

இன்றைய விபத்தின் மனதை றணமாக்கும் எச்சங்கள். எத்தனை கனவுகளோடு நினைவுகளை பகிர்ந்து பயணித்திருப்பார்கள் அதிக வேகம் அவர்களது...
11/05/2025

இன்றைய விபத்தின் மனதை றணமாக்கும் எச்சங்கள்.

எத்தனை கனவுகளோடு நினைவுகளை பகிர்ந்து பயணித்திருப்பார்கள் அதிக வேகம் அவர்களது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.

21 ஒரு உயிர்கள்

தன்னுயிர் விடுத்து ... தன் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாய்..
11/05/2025

தன்னுயிர் விடுத்து ... தன் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாய்..

இறம்பொடை விபத்துக்குள்ளான பஸ், ஊர் மக்கள் அனைவரின் மனிதாபிமான உதவியுடன் முழுமையாக விபத்தில் சிக்கியவர்களை அகற்றிய பின்னர...
11/05/2025

இறம்பொடை விபத்துக்குள்ளான பஸ், ஊர் மக்கள் அனைவரின் மனிதாபிமான உதவியுடன் முழுமையாக விபத்தில் சிக்கியவர்களை அகற்றிய பின்னர் பள்ளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது

இந்த கொடூர விபத்து சம்பவத்தில் அப்பாவி 21 உயிர்கள் பலியாகி உள்ளதோடு 20’க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

ஜனாதிபதி இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடுப்பத்துக்கும் தலா 1 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.

கதிர்காமம்-குருநாகல்-நுவரெலியா அரச போக்குவரத்து பேருந்தானது பாதையிலிருந்து விலகி பாரிய பள்ளத்தில் விழுந்து இன்று காலை கொத்மலை இறம்பொடை கெரன்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Vavuniya
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share