Pothikai FM media news

Pothikai FM media news Pothikai.FM
#1 இணையதள ஒலிபரப்பு சேவை - இலங்கை
(1)

07/08/2025.  Pothikai.FM கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவு  நாமல் ராஜபக்ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி ...
07/08/2025

07/08/2025. Pothikai.FM
கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு நாமல் ராஜபக்ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று 07 கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நாமல் ராஜபக்ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்த விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

அதன்படி, வழக்கை ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நினைவூட்டல்களை அனுப்பவும் உத்தரவிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் மேற்படி முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

07/08/2025.   Pothikai.FM பக்திப் பரவசத்துடன் சிறந்த முறையில் பக்தி பாடல் கச்சேரிகளை அமைத்துத் தரப்படும் தொடர்பு கொள்ளுங...
07/08/2025

07/08/2025. Pothikai.FM
பக்திப் பரவசத்துடன் சிறந்த முறையில் பக்தி பாடல் கச்சேரிகளை அமைத்துத் தரப்படும் தொடர்பு கொள்ளுங்கள். What’s +358451538377.

07/08/2025

07/08/2025. Pothikai.FM

07/08/2025.  Pothikai.FM  இலங்கை மீது அமுலுக்கு வரும்  20 சதவீத வரி  மேலும் குறைக்க பேச்சுவார்த்தை    அமெரிக்க ஜனாதிபதி ...
07/08/2025

07/08/2025. Pothikai.FM
இலங்கை மீது அமுலுக்கு வரும் 20 சதவீத வரி மேலும் குறைக்க பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று 07 முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அதன்படி, இன்று முதல் நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரி விதிக்கும். கட்டண வீதத்தை மேலும் குறைக்க பேச்சுவார்த்தை

டிரம்ப் ஜனாதிபதியான பின்னார் அமெரிக்காவுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை அறிமுகப்படுத்தியபோது இலங்கை மீது 44 சதவீத வரிவிதிக்கப்பட்டது. அமெரிக்கா அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த இலங்கை அரசாங்கம் நிவாரணம் பெற இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

அதன்விளைவாக இலங்கை மீது தற்போது விதிக்கப்பட்ட வரி வீதம் 20 சதவீதமாகும். அதேசமயம் , இந்த புதிய வரிக் கொள்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் அமெரிக்கா விதித்த கட்டண வீதத்தை மேலும் குறைக்க பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

07/08/2025.  Pothikai.FM  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.  ஜே.வி.பி. தமது தலைவரான ரோஹன விஜேவீ...
07/08/2025

07/08/2025. Pothikai.FM
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தமது தலைவரான ரோஹன விஜேவீரவின் கொள்கையை மாற்றி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தமது தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது கொள்கையை முழுமையாகப் பின்பற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 06 அன்ற இடம்பெற்ற இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ட்ரம்பின் வழியிலேயே இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சட்ட மூலம் ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.என்பதனால் இந்த சட்டமூலத்தை ஏற்கமுடியாது என்றும் கூறினார்.

மேலும், அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை முழுமையாகத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீர்மானம் எடுக்கும் உரிமை தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.

ஆகவே, இந்த சட்டமூலத்துக்கு எதிராகவே நாம் வாக்களிப்போம் 2004ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் மின்சாரத்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு புதிய கருத்திட்டங்களை மேற்கொண்டன.
இந்த திட்டங்கள் அனைத்துக்கும் ஜே .வி.பி.கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஜே.வி.பி. 1987 மற்றும் 1988ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொண்ட வன்முறைகளினால் அரச சொத்துக்கள் பல அழிக்கப்பட்டன. சேதமடைந்தன.

இவற்றில் மின்பிறப்பாக்கிகளை பிரதானமாக குறிப்பிட வேண்டும். மின்பிறப்பாக்கிகளை வெடிக்கச் செய்து முழு நாட்டையும் இருளுக்குள் தள்ளினார்கள்.மின்சாரத்துறை கட்டமைப்பைப் புதுப்பிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி 2004ஆம் ஆண்டு கொண்டு வந்த கருத்திட்டத்தை ஜே.வி.பி.கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி.யின் எதிர்ப்பினால் இலங்கையின் மின்சாரத்துறை கட்டமைப்பு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது என்றார்.

07 August 2025 Thursday  Pothikai.FM
07/08/2025

07 August 2025 Thursday Pothikai.FM

07 August 2025 Thursday  Pothikai.FM   பட்டதாரி யுவதி விபத்தில்பலியான சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன்...
07/08/2025

07 August 2025 Thursday Pothikai.FM
பட்டதாரி யுவதி விபத்தில்பலியான சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த 31/07/2025 சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், எதிர்கால வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும், நேற்று இரவு 7 மணியளவில் விபத்து இடம்பெற்ற இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். மேலும், வாகன சாரதிகள் பாதுகாப்புடன், வீதி விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட வேண்டியது கடமை என வலியுறுத்தப்பட்டதோடு, ஒரே ஒரு கவனக்குறைவு, விலைமதிக்க முடியாத உயிர்கள் இழப்புக்கு காரணமாக மாறக்கூடும் எனவும் இந்த நிகழ்வில் எச்சரிக்கை கூறப்பட்டது.

07 August 2025 Thursday  Pothikai.FMஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை  இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொ...
07/08/2025

07 August 2025 Thursday Pothikai.FM
ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார்.

ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, நேரில் சந்திக்க அழைத்தார்.

ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, இருவரும் ஒரு லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். புனித்துடன் மீண்டும் நேரம் செலவிட ப்ரீத்தி விரும்பினார், புனித் மறுத்ததால் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இருவரும் வீடு திரும்பும் போது புனித் அவளை கட்டரகட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு உச்சமடைய கல்லால் அடித்து ப்ரீத்தியை கொலை செய்து பின்னர், உடலை தனது விவசாய நிலத்தில் கொண்டு சென்று, தென்னை ஓலையால் மறைத்து வைத்தார்.
ரீத்தி வீடு திரும்பாததால், அவரது கணவர் சுந்தரேஷ் ஹாசன் எக்ஸ்டென்ஷன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ப்ரீத்தியின் தொலைபேசி கே.ஆர்.பேட்டை பகுதியில் செயல்பட்டதை கண்டறிந்த பொலிஸார், புனித்தை தொடர்பு கொண்டபோது, அவர் ப்ரீத்தி தனது காரில் தொலைபேசியை விட்டுவிட்டு பேருந்தில் சென்றதாக கூறினார். இதற்கிடையில், கரோதி கிராமவாசிகள் ஒரு பெண்ணின் உடல் கிடைத்ததாக தகவல் அளித்தனர்.
விசாரணையில், அது ப்ரீத்தி என்று உறுதியானது. புனித் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.

07/08/2025

இன்றைய வானிலை Pothikai.FM
2025.08.07

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
***************************

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கல்பிட்டி தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Address

No 70/7, Kurumankadu
Vavuniya Town
43000

Telephone

+358451538377

Website

https://www.pothikai.news/

Alerts

Be the first to know and let us send you an email when Pothikai FM media news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pothikai FM media news:

Share

Category