27/01/2025
துயர் பகிர்வு.
வவுனியா சமளங்குளத்தை பிறப்படமாகவும் மாதகல் வடக்கு மற்றும் வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் லோகேஸ்வரி அவர்கள் 25.01.2025 அன்று காலமானார் . அன்னார் காலஞ் சென்ற சிவசிதம்பரம் மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும் காலஞ் சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும் , சோமசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அருள் சுகந்தன் (UK), சயந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும், மாதினி , தில்லை முருகதாசன் அவர்களின் அன்பு மாமியாரும், கங்கா சுதந்தரி, சாய் லகரி, பால சுயம்பரி, சரணி ,திருஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவர், நற்றவ மலர், நாகேஸ்வரி(ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் - வவுனியா), தவவிக்னேஸ்வரி காலன்சென்ற சிவஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சர்வேஸ்வரி(வவுனியா இந்து கல்லூரி ஆசிரியை), சிவபாதமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 28.01.2025 அன்று மதியம் 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரிகைக்காக சமளங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
எமது கிராமம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்வதுடன், அவருடைய ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.