Suratha tamil midea சுரத தமிழ் மீடியா

Suratha tamil midea   சுரத தமிழ் மீடியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suratha tamil midea சுரத தமிழ் மீடியா, Social Media Agency, Cheddikulam, Vavuniya.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
05/04/2025

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மற்றும் மேல்மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Showers or thundershowers will occur at times in Southern province and in Monaragala, Ampara and Batticaloa districts. Showers or thundershowers will occur in the other areas of the island during the afternoon or night. Showers may occur in Western coastal areas in the morning too.

Heavy rainfall of above 100 mm are likely at some places in Western, Sabaragamuwa, Central, Uva and Southern provinces.

Misty conditions can be expected at some places in Central, Sabaragamuwa, Uva, Northern and North-central provinces during the morning.

The general public is kindly requested to take adequate precautions to minimize damages caused by temporary localized strong winds and lightning during thundershowers.

On the apparent northward relative motion of the sun, it is going to be directly over the latitudes of Sri Lanka during 05th to 14th of April in this year. The nearest areas of Sri Lanka over which the sun is overhead today (05th) are Kahawa, Meetiyagoda, Elamaldeniya, Ambakolawewa and Bundala at about 12:13 noon.

https://suratha.lk/2024/07/26/todays-weather-forecast-218/අද කාලගුණය  2024.07.27සබරගමුව පළාතෙත් මහනුවර සහ නුවරඑළිය දිස්ත...
27/07/2024

https://suratha.lk/2024/07/26/todays-weather-forecast-218/
අද කාලගුණය 2024.07.27

සබරගමුව පළාතෙත් මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවලත් විටින් විට වැසි ඇතිවේ. බස්නාහිර සහ වයඹ පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් වැසි වාර කිහිපයක් ඇතිවේ.
මධ්‍යම කඳුකරයේ බටහිර බැවුම් ප්‍රදේශවල සහ උතුරු, උතුරු මැද සහ වයඹ පළාත්වලත් ත්‍රිකුණාමලය, මොණරාගල සහ හම්බන්තොට දිස්ත්‍රික්කවලත් විටින් විට හමන පැ.කි.මී. (50-55) ක පමණ තද සුළං ඇතිවිය හැක.

දිවයිනේ සෙසු ප්‍රදේශවල විටින් විට හමන පැ.කි.මී. (30-40) ක පමණ තරමක තද සුළං ඇතිවිය හැක.

இன்றைய வானிலை
2024.07.27

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 55 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

கடல் பிராந்தியங்களில்

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

சுரத செய்திகள்2024:02:1605:25AMBy. SathiyaseelanCheddikulam "இலங்கையில் முதல் தடவை இடம்பெறும் சீனர்களின் மரதனோட்டப் ​போட...
16/02/2024

சுரத செய்திகள்
2024:02:16
05:25AM
By. Sathiyaseelan
Cheddikulam

"இலங்கையில் முதல் தடவை இடம்பெறும் சீனர்களின் மரதனோட்டப் ​போட்டி
சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் ​போட்டி இடம்பெறவுள்ளது.இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.
காளிமுத்து
சத்தியசீலன்

சுரத செய்திகள்2024:02:1605:13AMBy. SathiyaseelanCheddikulam "மறைந்து போகும் மெக்ஸிகோ வளைகுடா"உலகில் காணப்படும் பனிப்பாறை...
16/02/2024

சுரத செய்திகள்
2024:02:16
05:13AM
By. Sathiyaseelan
Cheddikulam

"மறைந்து போகும் மெக்ஸிகோ வளைகுடா"

உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை மீது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைக்கவில்லை என்றால், வளைகுடா நீரோடை 2025 மற்றும் 2095ம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் என அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பிராந்தியத்தின் காலநிலையை கட்டுப்படுத்துவதில் வளைகுடா நீரோடை இயற்கையாகவே தனித்துவமான பாத்திரத்தை வகிக்கின்றது.

இந்த நீரோடை கடல் வெப்பநிலையின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதன் மூலம் வெப்பத்தையும் கடத்துகிறது.

வளைகுடா நீரோடை இல்லாது போனால் வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை சில தசாப்தங்களுக்குள் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறையக்கூடும் என்பதுடன் இதனால் பாதகமான காலநிலை மாற்றம் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் கடும் புயல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றதுகாளிமுத்து
சத்தியசீலன்

சுரத செய்திகள்2024:01:2206:15AMBy. SathiyaseelanDisc. Alter கனடாவில் ஸ்டெரப் பக்ரீறியா தாக்கம்: ஆறு சிறுவர்கள் உயிரிழப்ப...
22/01/2024

சுரத செய்திகள்
2024:01:22
06:15AM
By. Sathiyaseelan
Disc. Alter

கனடாவில் ஸ்டெரப் பக்ரீறியா தாக்கம்: ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு

கனடாவில் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் ஸ்டெரப் எனப்படும் பக்ரீறியா நோய்த் தொற்று குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த பக்ரீறியா தாக்கம் அதிகரித்துள்ளது. குறித்த பக்ரீறியா தாக்கத்தினால் இதுவரையில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்தினால் பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர்களே மரணித்துள்ளனர்.

இந்த பக்ரீறியா தாக்கத்தினால் தொண்டை அழற்சி அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இந்த பக்ரீறியா தாக்கத்தினால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாண பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணம் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இந்த பக்ரீறியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
காளிமுத்து
சத்தியசீலன்
செட்டிகுளம்

விசேடசெய்திகள்2024:01:2103:38PMBy. SathiyaseelanDisc.  Political" இலங்கைத் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் "இலங்கை தமிழரச...
21/01/2024

விசேட
செய்திகள்

2024:01:21
03:38PM
By. Sathiyaseelan
Disc. Political

" இலங்கைத் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் "

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் பொதுக்கூட்டம்
இன்றைய தினம் சரியாக காலை 10 மணிக்கு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஆரம்பமாகியது இக்குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் குறிப்பாக ஸ்ரீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிகளவான வாக்குகள் அளிக்கப்பட்டன அதனடிப்படையில் சிறீதரனுக்கு 187 வாக்குகளும் சுமந்திரனுக்கு 134 வாக்குகளும் கிடைத்தன இவ்வாக்குகள் ஒழுங்காகவும் நேர்மையான முறையிலும் கண்காணிக்கப்பட்டன இக்கூட்டத்தில் சுகையிம் காரணமாக திரு சம்பந்தன் ஐயா டாக்டர் சத்தியலிங்கம் ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அதேவேளை வருகின்ற சனி ஞாயிறு தினங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவரின் தலைமை உரை மத்திய குழு உறுப்பினர்களை தெரிவு செய்தல் போன்ற விடயங்கள் இடம் பெற இருக்கின்றது

இக்கூட்டம் 2மணியளவில் நிறைவு செய்யப்பட்டது
காளிமுத்து
சத்தியசீலன்
செட்டிகுளம்

தமிழும் தமிழ் மொழியும் தமிழன் சுய மரியாதையும் தன் மானத்துடணும் வாழ வழிவக்கும் வாழ்த்துக்கள் சிறீதரன் அண்ணா
21/01/2024

தமிழும் தமிழ் மொழியும் தமிழன் சுய மரியாதையும் தன் மானத்துடணும் வாழ வழிவக்கும் வாழ்த்துக்கள் சிறீதரன் அண்ணா

சுரத செய்திகள்2024:01:1412:50PMBy. Sathiyaseelan "ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ...
14/01/2024

சுரத செய்திகள்
2024:01:14
12:50PM
By. Sathiyaseelan

"ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என காலியில் இருந்து முன்மொழிவு"

எல்லோரும் தங்கள் கைகளை உயர்த்தி மும்மொழிவை நிறைவேற்றினார்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட சம்மேளனத் தொடரின் முதலாவது மாநாடு காலியில் இன்று காலை ஆரம்பமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் இந்த சம்மேளனத் தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க தேசியத் தலைவராகப் போட்டியிட வேண்டும் எனவும் இம்மாநாட்டில் முன்மொழியப்பட்டதுடன், பிரேரணையை அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் பெருந்தொகையான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
காளிமுத்து
சத்தியசீலன்

Suratha Local News "இலங்கையில் ஐபில் போட்டிகளா-சற்று முன் வெளியான தகவல்..!by.k.Sathiyaseelan January 12,2024:01:01நடப்பு...
12/01/2024

Suratha Local News

"இலங்கையில் ஐபில் போட்டிகளா-சற்று முன் வெளியான தகவல்..!

by.k.Sathiyaseelan January 12,
2024:01:01

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விகுறியாகும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

I made $8'000 last month! Read my story.
இந்நிலையில் இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல் 2024 இல் மீண்டும் களமிறங்குவார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர், வரவிருக்கும் சீசனில் அவரது அணியான டெல்லி கேபிடல்ஸை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது
காளிமுத்து
சத்தியசீலன்

சுரத செய்திகள் 2024:01:1212:07PMBy. சிவானந்தராசா செட்டிகுளம் "சபரிமலை சென்று பக்தன் விமானத்தில்பலி "யாழிலிருந்து சபரிமலை...
12/01/2024

சுரத செய்திகள்
2024:01:12
12:07PM
By. சிவானந்தராசா செட்டிகுளம்

"சபரிமலை சென்று பக்தன் விமானத்தில்பலி "

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!

சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது. அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக குரோம்பேட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவானந்தராசா செட்டிகுளம் ஊடகவியலாளர்

சுரத உள்ளூர் செய்திகள்2024:01:12 12.15PM "இலங்கை கல்வியலாளர் பதவி உயர்வு"அரசாங்க சேவைகள் ஆணைக்குழு 2024.01.10ம் திகதி வெ...
12/01/2024

சுரத உள்ளூர் செய்திகள்
2024:01:12 12.15PM

"இலங்கை கல்வியலாளர் பதவி உயர்வு"

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு 2024.01.10ம் திகதி வெளியிட்ட முடிவுகளின் படி "மாவனல்லை"ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய பொறுப்பதிகாரி M.L.M இர்சாத் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவை தரம் 1பதவி உயர்வு பெற்றுள்ளார்!2008ம் ஆண்டு ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு நியமணம் பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல அதிகாரிகளுள் முதலாவது SLTES-1இற்கு பதவி உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!எனவே இவருடைய எதிர் காலம் சிறப்புற்று அமைய சுரத ஊடகம் சார்பாக நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
சுரத செய்தியாளர்

அஸ்லம் முகமட்
பாவற்குளம்

Address

Cheddikulam
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suratha tamil midea சுரத தமிழ் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share