19/09/2026
செய்தி அறிக்கை
🔴 MITRA UYARVU MADANI 2.0 விண்ணப்பத்தில் ‘Bangsa’ பிரிவுகள் ஏன்? — Hindu Task Force கேள்வி
கோலாலம்பூர்:
MITRA-வின் UYARVU MADANI 2026 திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரர்களிடம் “Bangsa” என்ற பிரிவின் கீழ் India, India Muslim, Malayali, Punjabi, Sikh, Telugu, Melayu, Cina உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கேட்கப்படுவது தொடர்பாக Hindu Task Force விளக்கம் கோரியுள்ளது.
MITRA-வின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, Uyarvu MADANI 2026 திட்டம் B40/M40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கான RM25 மில்லியன் ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.
இதனிடையே, விண்ணப்பப் படிவத்தில் Malayali, Telugu, Punjabi, Sikh போன்ற தனித்தனி சமூக அடையாளங்கள் ஏன் கேட்கப்படுகின்றன என்பது குறித்து MITRA வெளிப்படையான விளக்கம் வழங்க வேண்டும் என Hindu Task Force வலியுறுத்துகிறது.
Hindu Task Force கேள்விகள்:
1. “Bangsa” என்ற தகவல் புள்ளிவிவர நோக்கத்திற்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறதா?
2. Malayali, Telugu, Punjabi, Sikh போன்ற பிரிவுகள் grant approval அல்லது நிதி ஒதுக்கீட்டில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?
3. MITRA திட்டங்களில் ஜாதி அல்லது சமூகப் பிரிவு அடிப்படையில் quota / முன்னுரிமை ஏதேனும் உள்ளதா?
4. இருந்தால், அதற்கான அதிகாரப்பூர்வ விதிமுறை மற்றும் வழிகாட்டுதலை பொதுமக்களுக்கு வெளியிட முடியுமா?
5. ஒவ்வொரு “Bangsa” பிரிவிலும் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எத்தனை பேருக்கு grant வழங்கப்பட்டது என்ற தரவுகளை MITRA வெளியிடுமா?
MITRA தனது அதிகாரப்பூர்வ தகவல்களில், Uyarvu MADANI திட்டத்தின் இலக்கு மலேசிய இந்திய B40/M40 தொழில்முனைவோர் என குறிப்பிடுகிறது.
மேலும், MITRA ஏற்கனவே தனது grant நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
எனவே, “Bangsa” பிரிவுகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், grant வழங்குவதில் அவற்றுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்பதையும் MITRA உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதே Hindu Task Force-ன் கோரிக்கையாகும்.
— Hindu Task Force