Tamilbooks_malaysia21

Tamilbooks_malaysia21 We have new & second hand tamil books!! Do contact us to find out more
018-2201909

22/12/2025

சத்யானந்தன் பதினைந்து ஆண்டுகளுக்கம் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவின புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.

மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் மன அழுத்தம் ஒருபக்கம் இந்த நாணயத்தின் மறுபக்கமான அவனது கதாபாத்திரடங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளை எதிர்கொள்ளும் சித்தரிப்பே இந்தப் புதினம்.

சத்யானந்தனின் முள்வெளி நாவலில் கவிதை, சிறுகதை, நாவல் என்னும் மூன்று வடிவங்களும் சங்கமிக்கின்றன.



20/12/2025
19/12/2025

இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை நம் மனம்தான் நம்மிடம் தூவுகிறது. அதுதான் நம் கனவுகளையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலையும் வடிவமைக்கிறது. நம்மை உச்சத்துக்குக் கொண்டுசெல்லவேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெருமளவில் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் மனமே இருக்கிறது. இதன் பொருள், நம் மனதை நாம் ஒன்றுமே செய்யமுடியாது என்பதல்ல. சரியான அணுகுமுறையையும் கருவிகளையும் கையாண்டால் நம் ஒவ்வொருவராலும் நம் மனதை நம்முடைய கூட்டாளியாக, நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நட்பு சக்தியாக மாற்றியமைத்துக்கொள்ளமுடியும். இந்தப் புத்தகம் உங்களுக்கு அந்த மதிப்புமிக்க கலையை எளிமையாகவும் ஏராளமான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளோடும் அழகுற கற்றுக்கொடுக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்த அடுத்த விநாடி, ஆல்ஃபா தியானம், மாற்றுச் சாவி உள்ளிட்ட நூல்களை எழுதிய நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கக்கூடிய திறன் பெற்றது.

17/12/2025




17/12/2025

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூயி கரோல் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர். மாயாஜாலங்கள் நிறைந்த இவருடைய கதைகள் வாசகர்களையும் அந்த உலகத்துக்கே இழுத்துச் சென்றுவிடக்கூடியவை. ‘அதிசய உலகில் ஆலீஸ்!’ இதுவரை 125 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

கடிகாரத்தைப் பார்த்தபடி, பேசிக்கொண்டே செல்லும் முயலைப் பார்த்த ஆலீஸ், முயல் பின்னாலேயே ஓடுகிறாள். திடீரென்று ஒரு குழியில் விழுகிறாள். அது ஓர் அதிசய உலகம். அங்கு விலங்குகள், பறவைகள் பேசுகின்றன. மனிதர்கள் வித்தியாசமான உருவங்களில் இருக்கிறார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி உருவத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிகிறது. இந்த மாய உலகில் ஆலீஸ் என்ன செய்கிறாள் என்பதை அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.




17/12/2025

ஓ ஹென்றியின் நிஜப் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவருடைய கதைகள் இன்று உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர். அற்புதமான கதைகளில் திடுக் திருப்பங்களைக் கொடுப்பது இவருடைய சிறப்பு.

அழகாக அன்பை எடுத்துச் சொல்லும் தேவதைகளின் பரிசு! (Gift Of The Magi), ஒரு சிறுவனைக் கடத்தி படாத பாடுபடும் கடத்தல்காரர்களின் கதை செவ்விந்தியர் தலைவன் கடத்தல், (The Ransom Of Red Chief), தங்குவதற்கு இடம் இன்றி, சிறைக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் கதை தீவுச் சிறை (The Cop And The Anthem), கொள்ளையனின் கதையைச் சொல்லும் வங்கிக் கொள்ளை (Retrieved reformation) என்ற இந்த நான்கு கதைகளும் பிரமாதமானவை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை.



17/12/2025

கிருஷ்ண தேவராயர் காலத்தில் வாழ்ந்தவர் தெனாலிராமன். நகைச்சுவையாகவும் புத்திசாலித்-தனமாகவும் பேசுவதில் வல்லவர். அரசர் மட்டுமின்றி, மக்களும் விரும்பக்கூடிய மனிதராகத் திகழ்ந்தவர். தெனாலிராமனின் கதைகளை எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாது!



12/12/2025

தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே நிச்சயம் துணிச் சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சிறப்பம்சம் காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது.

11/12/2025

Mounathi Alaral !!
கே.ஜி.ஜவர்லால் சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பலியாக்கப்பட்டனர். இருந்தும், இந்தியப் பிரிவினை குறித்து அரசியல், வரலாற்றுப் பதிவுகள் இருக்கும் அளவுக்கு தனிப்பட்ட மக்களின் கதைகள், குறிப்பாக பெண்களின் கதைகள் பதிவு செய்யப்படவில்லை. அப்பாவுக்கு அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு அருகில் என் சகோதரி. அப்பா வீச்சரிவாளை வெளியில் எடுத்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தார். அரிவாளை வீச முற்படும்போது ஏதோ தடுத்தது. மகள் மீது இருந்த பாசமாக இருக்கலாம். முதல் வீச்சு பயனில்லாமல் போனதில் அவர்கள் இருவருக்குமே வருத்தம். சகோதரி கத்தியைத் தானே பிடித்து கழுத்துக்கு எதிரே வைத்துக்கொள்ள அப்பா பலமாக வீசினார். சகோதரியின் தலை உருண்டது. முகம், பெயர், மதம், தன்மானம், அடையாளம், வாழ்க்கை அனைத்தையும் தொலைத்து நிற்கும் பெண்கள் ரத்தமும் சதையுமாக நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்கள். 'ஒரு முகமதியரைச் சந்தித்துக் கைகுலுக்கும்போது கையில் சாப்பாட்டுக் கேரியரோ, வேறு சாப்பிடுகிற பண்டங்களோ இருந்தால் அதில் மாசு படிந்துவிடும். அதை நாங்கள் சாப்பிட மாட்டோம். இதுவே ஒரு கையில் நாயும் இன்னொரு கையில் சாப்பாடும் இருந்தால் அப்படி ஆகாது. இது எந்த வகையில் நியாயம்? இதனால்தான் பாகிஸ்தான் உருவாயிற்று.' நேரடிக் களஆய்வின் மூலம் திரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்.



Address

No 2A , Jalan Titiwangsa 3/2, Taman Tampoi Indah
Johor Bahru
82100

Telephone

+60182201909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilbooks_malaysia21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share