05/08/2026
மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழா
இளம் தலைமுறையினரை நன்னெறி பண்புகள் மிக்க சமுதாயமாக உருவாக்கும் நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா சிறப்பாக பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழா மிகவும் நேர்த்தியாக வழி நடத்தப்பட்டது என செராஸ் வட்டார பேரவையின் தலைவர் கலைமாமணி தொண்டர்மணி ராமையா கேசவன் தமது தலைமை உரையில் கூறினார்.
இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளைச் சமய நெறிகளை பின்பற்றி எதிர்காலத்தில் நன்னெறிப் பண்புகளை வலுப்படுத்துவதற்கு உறுதிப்படுத்தும் வகையில் திருமுறை ஓதும் விழா முன்னுரிமை வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஆலயமும் சமயமும் நமது இரண்டு கண்களை போன்றவை அதனை ஒவ்வொரு மாணவரும் மனதில் ஆழமாக பதிய வைத்து வாழ்க்கையில் சிறந்த நிலையை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
என் சமயம் என் கடமை என்கிற அடிப்படையில் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தில் சமய கட்டொழுங்குமிக்கவர்களாக திகழ்வதற்கு அடித்தளத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க. சுந்தரி சிறப்புரையில் கூறினார்.
ஜூலை 18 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நந்திக்கொடி ஏற்றி நடராஜர் சிவகாமி நால்வருக்கு சிறப்பு பூஜையுடன் திருமுறை பிரிவு 1 முதல் 6 பிரிவு வரை தனிநபர், ஆண், பெண், குழுப் பிரிவு, பதிகப் பாராயணம், மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, பஞ்சபுராணம் ஆகியவை இடம் பெற்றது. இவ்விழாவிற்கு நடுவர்களாக மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா, ரவாங், சுபாங் ஜெயா, ஷா ஆலாம், செலாயாங் ஆகிய வட்டாரப் பேரவையின் 12 பேர்கள் அடங்கிய குழுவினருக்கு தலைமை நடுவராக தொண்டர்மணி எம். அன்பரசன் பொறுப்பை மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் ஆலோசகர் செல்வரத்தினம் மாணிக்கம் நடுவர் அணிதலைவராக பொறுப்பேற்று செவ்வனே வழி நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் கெளரவச் செயலாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, தொண்டர்மணி சிவக்குமார், பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி மு. கண்மணி, உலுலஙகாட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் கு. நெடுஞ்செழியன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரளி ராஜன் உட்பட செயலவை உறுப்பினர்கள், மலேசிய இந்து சங்கத்தின் செமினி வட்டாரப் பேரவையின் தலைவர் முத்துகிருஷ்ணன் ராமசாமி, செயலாளர் சிவசங்கரன் ராமு, மலேசிய இந்து சங்கத்தின் செராஸ் வட்டாரப் பேரவையின் செயலாளர் பூமாலா மாரி, துணைச் செயலாளர் ஆர். லட்சுமி, பொருளாளர் திருமதி பரமேஸ்வரி கோவிந்தசாமி, இளைஞர் பகுதி தலைவர் ஆர். இராகவேந்திரா, மகளிர் பகுதி தலைவி கிருஷ்ணவேணி அமரசிங்கம், சமய ஆசிரியரும் சமயப் பகுதி பொறுப்பாளருமான திருமதி தேன்மொழி பொன்னுசாமி உள்ளிட்ட சக பொறுப்பாளர்களுடன், தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாறுவேட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட
இப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.