Malaysia Nanban Tamil Daily

Malaysia Nanban Tamil Daily Malaysia Nanban
(222)

13/11/2024
30/10/2024
19/05/2024

கல்வி சேமிப்பு நிதிக்கான வருமான வரி விலக்கு
வரிவிலக்கு அனுகூலம் நீட்டிப்பு

கோலாலம்பூர், மே 18-
தங்கள் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக முன்கூட்டியே நிதிநிலையினை திட்டமிடுவதை ஊக்குவிக்கும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற தேசிய கல்வி கடனுதவி கழகம் தொடர்ச்சியாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
இதில் கழகம் தொடர்ச்சியான கடமை கடப்பாட்டினை கொண்டுள்ளது. Simpan SSPN என்ற கல்வி சேமிப்பு முதலீட்டாளர்களுக்கு பல்வகை பிரத்தியேக அனுகூலங்களையும் நன்மைகளையும் வழங்கி வருகிறது.
வருமானத்தின் மீதிலான வரிவிலக்கு, தக்காபுல் காப்புறுதி திட்டம், தகுதி வாய்ந்த ஒரு குடும்பத்திற்கு 10,000 வெள்ளி வரையிலான சீரான மானியம், சிறப்பாக டிவிடென் அளவு மற்றும் சேமிப்பிற்கான உத்தரவாதம் ஆகிய அனுகூலங்கள் இதில் அடங்கும்.
Simpan SSPN என்ற கல்வி சேமிப்பு திட்டமானது வருடத்திற்கு 8,000 வெள்ளி வரையிலான வரிவிலக்கு அனுகூலங்களை வழங்கி வருகிறது. பெற்றோர் தனித்தனியாக ஒப்படைக்கும் வருமானவரி மதிப்பீடு விவரங்களுக்கு வருடத்திறகு 8,000 வெள்ளி வரையிலான வரி விலக்கு அனுகூலங்கள் வழங்கப்படும்.
அதே வேளையில் கூட்டாக வருமான வரி மதிப்பீடு விவரங்களை வழங்கும் தம்பதியினர் வருடத்திற்கு 8,000 வெள்ளி வரையில் வரிவிலக்கு அனுகூலத்தை பெறுவதற்கு தகுதி கொண்டுள்ளனர்.
பி.டி.பி.டி.என் என்ற தேசிய கல்விக் கடனுதவி கழகத்தின் தலைவர் டத்தோ நோர்லிஷா அப்துல் ரஹிம் இது குறித்து ஒரு விளக்கம் தந்துள்ளார்.
சேமிப்பு தொகையின் மீது வருடத்திற்கு 8,000 வெள்ளி வரையில் வருமான வரி வழங்குவது என்பது முதலீட்டாளருக்கான பிரத்தியேக அனுகூலம் இது. இதர சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமான பிரத்தியேகமான ஒன்று. மலேசிய சமுதாயம் இச்சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோ நோர்லிஷா அப்துல் ரஹிம் கேட்டுக் கொண்டார்.
பரிவு மிக்க அதிர்ஷ்ட குலுக்கல் திட்டம் நடத்தப்பட்டது. 181 வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்க பணம் மதிப்பு 1 லட்சம் வெள்ளி. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிவரையில் பெறப்பட்ட சேமிப்பு தொகை 17.75 பில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

Kota Damansara

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia Nanban Tamil Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malaysia Nanban Tamil Daily:

Share

Malaysia Nanban Tamil Daily

Hi all, Please follow Us & read our news paper daily. we are leading & popular Tamil Daily in Malaysia. thank you.