30/10/2024
மலேசியப் பிரதமர் Anwar Ibrahim அவர்களின் தீபாவளி நல்வாழ்த்து!
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த இத்தீபாவளி பண்டிகை, வாழ்க்கையில் இருள் என்னும் தீமைகள் யாவும் நீங்கி நன்மைகள் சூழும் ஒளித் திருநாளாகவும் அமைந்துள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நம் மக்களிடையே புரிந்துணர்வையும் மதிப்பையும் வளர்க்க வேண்டியது அவசியம். அவ்வகையில், இந்நந்நாளில் இன ஒற்றுமையை வளர்த்து, பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிந்து, துன்பத்தில் வாழ்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மேலோங்கச் செய்ய வேண்டும்.
எனவே, இந்தத் தீபாவளி திருநாள் புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடப்படுவதோடு, அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இந்தியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
Deepavali tiba dengan penuh kegembiraan dan semangat meraikan 'pesta cahaya' sebagai simbolik kemenangan cahaya ke atas kegelapan, kebaikan atas kebobrokan selain kekuatan ilmu mengatasi kejahilan serta keangkuhan.
Tentunya kita sebagai masyarakat yang kaya dengan budaya mesti menghidupkan sikap hormat dan persefahaman antara masyarakat. Gunakan kesempatan ini untuk menyemarak perpaduan antara kaum dan mencari titik temu, selain tingkatkan ihsan kepada yang hidup melarat dan susah.
Justeru, saya berharap perayaan Deepavali kali ini dapat diraikan dengan semangat kebangkitan pemikiran yang segar dan murni agar darjat harakat rakyat seluruhnya dapat diangkat.
Selamat menyambut Hari Deepavali kepada semua penganut Hindu.