27/07/2025
மின்னல்fm-மின் இன்னொரு பிரமாண்டம் “BINTANG MINNAL 2025”.
இளைஞர்களிடையே பாடும் திறனை அடையாளம் காணும் மிக நல்ல முயற்சி BINTANG
MINNAL 2025. இன்றைய பொழுதுபோக்கு உலகம் எவ்வளவு மாற்றமடைந்திருந்தாலும், தரமும்,
தொன்மையும், உண்மையான கலை ஆர்வமும் நிரம்பிய மேடையாக ‘’BINTANG MINNAL”
தொடர்கிறது.
இவ்வாண்டு முதல் முறையாக 5 மாநிலங்களில் களம் இறங்கி குரல் தேர்வு நடத்தியது
மின்னல்fm. மே 17 RTM NEGERI SEMBILAN, மே 24 RTM PULAU PINANG, மே 31 RTM
PERAK, ஜூன் 14 RTM PAHANG , ஜூன் 21 GM MALL KLANG என மின்னல்fm நடத்திய
குரல் தேர்வுக்கு ஆர்வமாய் கலந்துக் கொண்ட இளைஞர்கள் ஏராளம்.
நேரடியாய் வந்து குரல் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு, சமூக
வலைத்தளத்தில் கலந்து கொள்ளவும் வழி திறந்தது மின்னல்fm.
மிகத் தரமான நீதிபதிகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்கள் , ஆகஸ்ட்டு
2ஆம் நாள் நடைபெறும் அரை இறுதிச் சுற்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாறுகளைக் குவித்திருக்கும் ஆர்.டி.எம், நாட்டின் திறமையான கலைஞர்களைத் தேடி
வாய்ப்புகளைக் கொடுத்து கொண்டே இருக்கிறது . Dato& #39; Sri Siti Nurhaliza, Alleycats,
Sudirman என நம் நாட்டு நட்சத்திரங்களின் முதல் வெளிச்சம் தொடங்கியது RTM-ன்
மேடையில்தான்.
உலகம் இன்னும் அறியா, அந்த 10 குரல்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறது “MINNALfm”
ஜித்தேந்திரன், சிலாங்கூர்
அபிஷேகப்பிரியன், சிலாங்கூர்
கண்மணி, சிலாங்கூர்
உன்னிதேவன், நெகிரி செம்பிலான்
கெளதம், பினாங்கு
நவீனா, ஜொகூர்
வெங்கடேஸ்வரி, ஜொகூர்
ஏரன் தோமஸ், நெகிரி செம்பிலான்
தேஷாலன் ஷோன் பிள்ளை, நெகிரி செம்பிலான்
விஜய் ஹரி, பகாங்
BINTANG MINNAL இன்னொரு பிரமாண்டம்