06/09/2026
🔴 கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI), On-Arrival Visa வைத்திருப்பவர்கள் தங்களது விசாவை நீட்டிக்க அல்லது புதுப்பிக்க, இனி நேரடியாக பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அல்லது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளது.
விசா தொடர்பான சேவைகளை MOI இணையதளம் மூலம் மின்னணு முறையில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த முடியும். கத்தார் MOI அதிகாரப்பூர்வ தளத்தில் On-Arrival Visa மற்றும் Stay Extension தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
وزارة الداخلية - دولة قطر