Lanka Tamil FM/TV

Lanka Tamil FM/TV Online Tv / Radio Station

வீட்டு சுவையின் நறுமணம்… இலங்கை பிரியாணி 🍛Addalaichenai முற்றிலும் வீட்டிலிருந்தே தயாரிக்கப்பட்டசுத்தம் – சுகாதாரம் – தர...
27/12/2025

வீட்டு சுவையின் நறுமணம்… இலங்கை பிரியாணி 🍛Addalaichenai

முற்றிலும் வீட்டிலிருந்தே தயாரிக்கப்பட்ட
சுத்தம் – சுகாதாரம் – தரம் என்பவற்றுடன் உருவாகும்
இலங்கை பாரம்பரிய பிரியாணி வகைகள்

📅 2026.01.01ம் திகதி முதல் பெற்றுக் கொள்ளலாம்
🔥 குடும்பத்தின் அன்பும்
🌿 வீட்டுச் சுவையும்
🍚 பாரம்பரிய மசாலா நறுமணமும் நிறைந்த
சுவையான பிரியாணி வகைகள்

👉 இன்றே ஆர்டர் செய்து உறுதி செய்யுங்கள்
👉 அளவான விலை – நிறைவான சுவை
👉 விழாக்கள், விருந்துகள், குடும்ப நிகழ்வுகளுக்கு சிறந்த தேர்வு
📞 ஆர்டருக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!
M.B.M.Sareena-0769141565
A.Sajir -0758388720

68/C, Mohiden Road, Addalaichenai-15

மக்கள் அவதானமாக இருக்கவும்.  #தீவிரமான  #கிழக்குஅலை வீசும்.
27/12/2025

மக்கள் அவதானமாக இருக்கவும். #தீவிரமான #கிழக்குஅலை வீசும்.

25/12/2025
வாழ்த்து செய்தி(நூர்தீன் பெளசர்)பொத்துவில் பசறிச்சேனை நூறுல் ஹுதா அரபுக் கல்லூரியிலிருந்து இன்று ஆலிம்களாக வெளியாகிய அனை...
25/12/2025

வாழ்த்து செய்தி
(நூர்தீன் பெளசர்)
பொத்துவில் பசறிச்சேனை நூறுல் ஹுதா அரபுக் கல்லூரியிலிருந்து இன்று ஆலிம்களாக வெளியாகிய அனைத்து மாணவர்களுக்கும் எமது Lanka Tamil FM/TV ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய அறிவை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலம் மேலும் சிறப்படைய அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திக்கிறோம்.

ஆலிம்களாக வெளியாகிய மாணவர்கள்
J.F.Mohamed Inthisar
S.Mohamed Saafee
A.A.Mohamed Aslith
F.Mohamed Aabith

அவர்களின் உயரிய பயணத்திற்கு உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாமே!

இன்று christmas தினத்தை கொண்டாடும் அனைத்து Lanka Tamil FM/TV   உறவுகளுக்கு எமது வாழ்த்துக்கள்...
25/12/2025

இன்று christmas தினத்தை கொண்டாடும் அனைத்து Lanka Tamil FM/TV உறவுகளுக்கு எமது வாழ்த்துக்கள்...

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பொத்துவில் ஒஸ்மானிய கனிஷ்ட வித்தியாலயம், மாணவர்...
24/12/2025

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பொத்துவில் ஒஸ்மானிய கனிஷ்ட வித்தியாலயம், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் தற்காலிக கொட்டில் அமைக்கப்பட்டு மீண்டும் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை இன்று கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MS. அப்துல் வாஸித், சமாதான கல்வி அதிகாரி A. மஜீட், பாடசாலை அதிபர் சஹாப்தீன் மற்றும் பெற்றோர் பிரதிநிதியாக நெளசான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்தப் பணிகள் விரைவாகவும் சிறப்பாகவும் நிறைவேற உதவிய கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும்
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் MS. அப்துல் வாஸித் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்.

ஊடக பிரிவு
அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

இன்றைய நாள் எமது Lanka Tamil FM/TV  குடும்பத்துடன் இணைந்து கொண்ட நண்பன்  #நிசாம் அவர்களுக்குஎமது அனைத்து அறிவிப்பாளர்கள்...
24/12/2025

இன்றைய நாள் எமது Lanka Tamil FM/TV குடும்பத்துடன் இணைந்து கொண்ட நண்பன் #நிசாம் அவர்களுக்கு
எமது அனைத்து அறிவிப்பாளர்கள், நேயர்கள் சார்பாக
உங்களின் ஊடகப் பயணம் சிறப்பாகவும், தொடர்ச்சியாகவும் அமைய
மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் பணி மக்களின் மனங்களை இணைக்கும் பாலமாக
மேலும் உயர்ந்து விளங்க வாழ்த்துகிறோம். 🌟📻📺

செங்காமம் அல்மினா கிராமத்தைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது லெப்பை சபுர்தீன் அவர்களின் மகன் ஸாபிக், இன்ஷா அல்லாஹ் நாளை (2025/12/...
24/12/2025

செங்காமம் அல்மினா கிராமத்தைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது லெப்பை சபுர்தீன் அவர்களின் மகன் ஸாபிக், இன்ஷா அல்லாஹ் நாளை (2025/12/25) ம் திகதி அந்-நூருல் ஹுதா அரபிக் கல்லூரியில் இருந்து மௌலவியாக வெளிவர உள்ளார்.

ஸாபிக்கின் இக்கல்வி முயற்சிக்காக அயராது பாடுபட்ட உலமாக்கள் மற்றும் அவரது தாய் , தந்தை குடும்பத்தினருக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு...

ஸாபிக்கின் தந்தையான மர்ஹூம் அஹமது லெப்பை சபுர்தீன் அவர்கள் பெரும் தியாகங்களுடன் கடுமையாக பாடுபட்டிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து இன்றுடன் 49 நாட்கள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், மறைந்த தந்தையின் கனவை அவர் இல்லாத போது அல்லாஹ் நிறைவேற்றி வைத்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளவ்ஸ் எனும் உயரிய சொர்க்கம் கிடைப்பதற்காக
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.

அன்னாருக்கு நாமும் பிரார்த்திப்போம்.
ஆமீன் ஆமீன்
( தகவல் மச்சான்-M.H. கடாபி)

நூர்தீன் பெளசர்.

24/12/2025

சிரட்டை fun

திடீர் சுகவீனமுற்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம். ஹனீபாவின் உடநலாமேம்ப...
24/12/2025

திடீர் சுகவீனமுற்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம். ஹனீபாவின் உடநலாமேம்பாட்டுக்காக திகாமடுல்ல மீடியா போரம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது

கடந்த நான்கு தினங்களாக சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்னாருக்காக தனித்தனியாகவும், கூட்டு அடிப்படையிலும் தூஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான எம்.எப். றிபாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தினருடன் இணைந்து திகாமடுல்ல மீடியா போரம் மற்றும் அவர் தலைமை வகித்த மஸ்ஜிதுல் கைர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகளுடன் இணைந்து வெள்ளிக்கிழமை விஷேட துஆப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.ஹனீபா சம்மாந்துறை பிரதேசத்தில் சமூக சேவைப்பணியில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர். அவரது திடிர் சுகயீனமானது பிரதேச மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (Ripoter-Rifas )

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத...
24/12/2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார்.

23/12/2025

பிரதேச சபை பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Dr. அர்ச்சுணா

Address

Main Street
Riyadh
12792

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Tamil FM/TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Tamil FM/TV:

Share

Category