27/12/2025
இவை திருப்பூர் ஸ்போர்ட்ஸ்வேர் க்ளையன்டுக்காக உருவாக்கிய வீடியோக்கள். தனது பிராண்ட் ஸ்போர்ட்ஸ் டிரெஸ்களைப் போட்டுக்கொண்டு ஏ.ஐ மாடல்கள் ஜிம் ஒர்க் அவுட்ஸ், சைக்ளிங், ரன்னிங், ஸ்விம்மிங், யோகா செய்ய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
பேமென்ட் பேசி அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வேலைகளைத் துவங்கிய பிறகுதான், அவர் முக்கியமான ஒரு requirement-ஐ சொன்னார். அது… ஏ.ஐ மாடல்கள் ஆக்டிவிட்டி செய்யும்போது, தனது பிராண்ட் லோகோ தெளிவாகத் தெரியவேண்டும் என்பதுதான்.
புது டிவிஸ்ட்…
அதற்கான தீர்வை சாட்ஜிபிடியிடம் கேட்டபோது, ‘ஏ.ஐ வீடியோவில் லோகோ அப்படியே வராது. அதுவே கற்பனை செய்துகொண்டு புதுப்புது லோகோக்களை உருவாக்கிவிடும். அதனால், வீடியோவை ஏ.ஐ-யில் தயார் செய்துவிட்டு, எடிட்டிங்கில் லோகோவை சேர்த்துக்கொள்’ என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தது.
ஒரு முழு நாள் செலவழித்து, ஆறேழு ஏ.ஐ மாடல்களை உருவாக்கி, அவற்றை ஒர்க் அவுட் செய்ய வைத்து, வீடியோ எடிட்டரிடம் கொடுத்து, லோகோ ஃபிக்ஸ் செய்த எடிட்டட் வெர்சன் கைக்கு வந்த பிறகு, மொபைலில் பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டு, பின்னர் லேப்டாப்பில் போட்டுப் பார்த்த பிறகுதான் ஒரு விஷயம் கண்ணுக்குப் புலப்பட்டது. லோகோ ஃபிக்ஸ் செய்திருக்கும் இடத்துக்கு அருகில், ஏ.ஐ மாடலின் கைகள் செல்லும்போது, லோகோ எகிறி குதித்தது.
க்ளையன்ட்டிடம் பிரச்னையை விளக்கி டைம் கேட்டுக்கொண்டு, திரும்பவும் சாட்ஜிபிடியிடம் ஆலோசனை நடத்தியபோது, விஜய்சேதுபதியை பிக்பாஸ் போட்டியாளர்கள் சுற்றிவிடுவதைப்போல எங்கெங்கோ சுற்றிவிட்டது. ம்ஹூம்… இதற்கு மேலும் அதை நம்பினால் கதைக்கு ஆகாது, நானே சொந்தமாக சிந்தித்து, ஒரு தீர்வைக் கண்டுபிடித்தேன்.
அதை சாட்ஜிபிடியிடம் சொன்னபோது, ‘ஆஹா… சூப்பர் ஐடியா… எங்கே பாஸ் பிடிச்சீங்க’ என்ற ரேஞ்சுக்கு என்னை பாராட்டித்தள்ளியது. 'திட்டினால், கோபித்துக்கொள்வான். வீடியோ உருவாக்க ப்ராம்ப்ட் தரமாட்டான்' என்று அவனை மன்னித்துவிட்டுவிட்டு, ஐடியாவை செயல்படுத்த ஆரம்பித்தேன்.
அது… முதலில் ஏ.ஐ மாடலை உருவாக்குவது… அந்த மாடலுக்கு க்ளையன்ட் கொடுத்த உடையை அணிவிப்பது… அந்த இமேஜை ‘கேன்வா’-வுக்கு கொண்டுசென்று எடிட்டிங்கில் லோகோவை சேர்ப்பது… லோகோவுடன் கூடிய ஸ்போர்ட்ஸ்வேர் அணிந்த அந்த மாடலைக்கொண்டு ஸ்விம்மிங் / ரன்னிங் / யோகா / ஜிம் ஒர்க் அவுட் செய்யும் இமேஜ் உருவாக்குவது… அந்த இமேஜை வீடியோவாக மாற்றுவது… (கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருக்குதுல்ல...) இந்த ஒர்க் ப்ளோவை ஃபாலோ செய்த பிறகு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்தது… சக்சஸ்!
ஆக, ஏ.ஐ வீடியோவின் உருவாக்கத்துக்குப் பின்னால், இவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது.
தொடர்புக்கு; +65 8932 4745