Thendral - தென்றல்

  • Home
  • Thendral - தென்றல்

Thendral - தென்றல் Thendral Magazine USA - A Monthly Magazine for Tamils living in North America

Thendral Events CalendarJune 21, 2025, Saturday10AM EST. Kodai Games & Competitions; Program features Handball, Running ...
20/06/2025

Thendral Events Calendar
June 21, 2025, Saturday
10AM EST. Kodai Games & Competitions; Program features Handball, Running races, Relay races, throwball and more; Organized by New Jersey Tamil Sangam; Venue: Valley Rd Picnic Area, Titusville, New Jersey; Contact: www.njtamilsangam.org

1:30PM PST. Monthly Carnatic Music Concerts by Smrithi Krishna Swaminathan (Veena) and Dhrithi Balan (Vocal); Organized by Silicon Valley Lotus; Venue: Sanathana Dharma Kendra, 3102 Landess Ave, San Jose, California; Contact: www.svlotus.com

More Events
https://tamilonline.com/thendral/article.aspx?aid=15703

#தென்றல் #தமிழ்_ஆன்லைன்

சிறப்புக் கட்டுரை:பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக...
16/06/2025

சிறப்புக் கட்டுரை:
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்

தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்றக் காரணமாக அமைந்தன. அவற்றுள் ஒன்று பறை. திட்டைப் பறை, தொண்டகப் பறை, தொண்டகச் சிறுபறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை எனச் சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன.

அந்தப் பறையைச் சிறுவயது முதலே வாசிக்கக் கற்று, பிற பணிகள் செய்யும் சூழல் அமைந்தாலும், அவற்றை நிராகரித்து, பறை இசைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதனை உலகம் முழுக்கப் பரப்பி வருபவர் வேலு ஆசான். அமெரிக்கா தொடங்கி உலகெங்கிலும் அவரது சீடர்கள் நிறைந்துள்ளனர். ‘கலைமாமணி’ விருது பெறவேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு, 2025ல் கேளாமல் வந்து கௌரவம் சேர்த்திருக்கிறது. இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’. இது அவருக்கு மட்டுமல்ல; அந்தக் கலைக்கும் ஒரு கௌரவமாய் அமைந்திருக்கிறது. காரணம், பலரும் பறையிசையைத் தொழிலாகப் பார்த்த நிலையில், அதனைக் கலையாகப் பார்த்தவர், அர்ப்பணிப்போடு அதனைப் பரப்பி வருபவர் வேலு ஆசான்.

https://tamilonline.com/thendral/article.aspx?aid=15696

#வேலு_ஆசான் #பறை_இசைக்கலைஞர் #பத்மஸ்ரீ #பறையிசை # #சிறப்புக்_கட்டுரை #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

Thendral Events CalendarJune 15, 2025, Sunday10AM PST. Blood Drive; Hosted by Bay Area Tamil Manram in association with ...
14/06/2025

Thendral Events Calendar

June 15, 2025, Sunday
10AM PST. Blood Drive; Hosted by Bay Area Tamil Manram in association with Bay Malayali; Venue: Kerala House, Fremont, California; Contact: www.bayareatamilmanram.org, Govind Gopal: 925.322.3131

1PM PST. Thamizh Sangamam Vizha 2025; Program features AGAM suspense thriller Drama by MnM Creations in association with Bay Area Tamil Manram; Venue: Santa Clara Convention Center, Santa Clara, California; Contact: www.bayareatamilmanram.org, Govind Gopal: 925.322.3131

Death - A Yogi's guide to Living, Dying & Beyond - a new book release by Sadhguru; opportunity to get a hard cover or audio version copy personally signed by Sadhguru; Venue: Dallas, Texas; Contact: www.Sadhguru.Co/death

More Events:
https://tamilonline.com/thendral/article.aspx?aid=15703

#தென்றல் #தமிழ்_ஆன்லைன்

எழுத்தாளர் சிறுகதை:மனைவியின் ஆசை - புதுவை சந்திரஹரிசுமதிக்குத்தான்‌ அந்த மசால்தோசை என்றால்‌ எவ்வளவு ஆசை! பத்து ஆண்டுகளுக...
14/06/2025

எழுத்தாளர் சிறுகதை:
மனைவியின் ஆசை - புதுவை சந்திரஹரி

சுமதிக்குத்தான்‌ அந்த மசால்தோசை என்றால்‌ எவ்வளவு ஆசை! பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்யாணமான புதிதில்‌ அவளை ஒருமுறை பட்டணத்து ஓட்டல்களைப்‌ பார்‌ என்று அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்‌துப்‌ போய்‌ வாங்கிக்‌ கொடுத்தது. அப்போதே அதன்‌ விலை ஒன்பது ரூபாய்‌ ஐம்பது காசு.

இத்தனை ஆண்டுகளாகியும்‌ அவள்‌ மனதில்‌ பசுமையாகவும்‌ நாக்கில் இனிமையாகவும்‌ நின்றுபோன சுவை அது.

அடிக்கடி அவள்‌ அதை நினைவு கூர்ந்திருக்கிறாள்.

“என்னமா வெண்ணெய்‌ மாதிரி மிருதுவா... நெய்‌ நெறைய ஊத்தியிருப்பாங்க போலருக்கு. மசாலாகூடக் காரமும்‌ இல்லாம சப்புன்னும்‌ இல்லாம... ப்‌.பா.. என்ன ருசி! இப்பக்கூட நாக்கிலேயே நிக்குதுங்க' என்று சமீபத்தில்‌ கூடச்‌ சொன்னாள்‌.

தற்போது அந்த மசால்‌ தோசையின்‌ விலை இருபத்து மூன்று ரூபாய்‌ என்று தெரிந்து கொண்ட கணபதி, தனக்கு வாழ்க்கைப்பட்டு மாடாய்‌ உழைத்துத்‌ தேய்ந்து, வரிசையாக மூன்று குழந்தைகளைப்‌ பெற்று, நாளும்‌ அல்லாடும்‌ சுமதிக்கு, மூக்குத்தியா... கம்மலா... கேவலம் அவள்‌ ஆசைப்படும்‌ ஒரு மசால்தோசை கூட வாங்கித்தரத் தன்‌ ஊதியம்‌ இடந்தரவில்லையே என்று புழுங்கினான்‌.

ஜவுளிக்‌ கடையில்‌ கிடைக்கும்‌ அறுநூறு ரூபாய் சம்பளத்தில்‌ குடும்பத்தோடு வந்து நட்சத்திர ஹோட்டலில்‌ ஒருமுறை அந்தத்‌ தோசை சாப்பிட வேண்டுமென்றால்‌ நடக்கக்‌ கூடியதா? ஓரு தோசையின்‌ விலையில்‌ ஒரு நாளையே தள்ளிவிடலாம்‌ என்கிற நிலையில்‌ இதெல்லாம்‌ எங்கே சாத்தியம்‌?

#எழுத்தாளர் #சிறுகதை #புதுவை_சந்திரஹரி #மனைவியின்_ஆசை #வெண்பனிக்_கனவுகள் #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

எழுத்தாளர்:புதுவை சந்திரஹரிதமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண...
13/06/2025

எழுத்தாளர்:
புதுவை சந்திரஹரி

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்குப் பங்களித்த பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் இடம்பெறத்தக்க ஒருவர் புதுவை சந்திரஹரி.

கும்பகோணத்தில் டி.கே. நடராஜ ராவ் - என்.தனலட்சுமி பாய் இணையருக்கு செப்டம்பர் 22, 1946-ல் பிறந்தார். இயற்பெயர்: என். ஹரிதாஸ். தொடக்கநிலை மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வியைக் கும்பகோணத்தில் கற்றார். புதுச்சேரி பெத்தி செமினார் ஆண்கள் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தாவரவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மைசூரிலுள்ள Regional College of Education கல்லூரியில் பி.எட். பட்டம் பெற்றார். ஆந்திராவிலுள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். எம்.எட். பட்டத்தை 1978-ல், ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் கற்றார்.

1970ல் புதுச்சேரி குருசுகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1979 முதல் புதுவை கலவைக் கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 முதல் அதே பள்ளியில் துணை முதல்வராகப் பணிபுரிந்தார். 1998 முதல் வில்லியனூர் விவேகானந்தர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராகவும், 2000 முதல் என்.மே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றினார். 2004 முதல் காலாப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்தார். 2005-6ல் 'அனைவருக்கும் கல்வி இயக்க'த்தில் மாநிலத் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். நல்லாசிரியர் விருது பெற்றார்.

#எழுத்தாளர் #புதுவை_சந்திரஹரி #வெண்பனிக்_கனவுகள் #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

மேலோர் வாழ்வில்:ஜட்ஜ் சுவாமிகள்சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தன...
12/06/2025

மேலோர் வாழ்வில்:
ஜட்ஜ் சுவாமிகள்

சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. அதனால், ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் பிரசாதத்தோடு பிரதிநிதி ஒருவரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

சமஸ்தானத்தின் தர்மாதிகாரிகளுள் ஒருவரான அந்தப் பிரதிநிதி ஜட்ஜ் சுவாமிகளைச் சந்தித்தார். பிரசாதங்களை சுவாமிகளுக்கு அளித்து மன்னரின் விருப்பத்தைச் சொன்னார்.

சிறிது நேரம் யோசித்த ஜட்ஜ் சுவாமிகள், இந்த அழைப்பை அனந்தபத்மநாப சுவாமியின் அழைப்பாகவே கருதினார். ஆகவே, வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை, அனந்தனை அனுதினமும் தரிசித்து ஆனந்தமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஒப்புக்கொண்டார்.

சென்னையில் தனது பதவியைத் துறந்து, நல்லதொரு நாளில் சமஸ்தானத்திற்குப் புறப்பட்டார்.

சமஸ்தானத்தில்...
சமஸ்தானத்தை அடைந்த ஜட்ஜ் சுவாமிகளை, தக்க மரியாதைகளோடு மன்னர் வரவேற்றார். அவர் குடும்பத்துடன் வசதியாகத் தங்கப் பெரிய மனை ஒன்றையும் வேலையாட்களையும் ஏற்பாடு செய்தார்.

நல்லதொரு நாளில் அனந்தபத்மநாபனைத் தொழுது, பிரதம நீதிபதியாகப் பொறுப்பேற்றார் ஜட்ஜ் சுவாமிகள்.
புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றதும் உலக வழக்கு, நூல் வழக்கு, நாட்டு வழக்கு, குலமுறை வழக்கு என நான்கு முறைகளையும் ஆராய்ந்து நீதி வழங்கினார். மன்னரால் மிகவும் மதிக்கப்பட்டார். மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டார்.

#மேலோர்_வாழ்வில் #ஜட்ஜ்_சுவாமிகள் #பா_சு_ரமணன் #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

https://tamilonline.com/thendral/article.aspx?aid=15697

11/06/2025
அலமாரி:கொத்தமங்கலம் சுப்புகே: தங்களது இளமை நாட்கள் தங்களைத் திரையுலகிற்கு எவ்வாறு திருப்பின? பின்னர், இலக்கிய வாழ்வுக்கு...
11/06/2025

அலமாரி:
கொத்தமங்கலம் சுப்பு

கே: தங்களது இளமை நாட்கள் தங்களைத் திரையுலகிற்கு எவ்வாறு திருப்பின? பின்னர், இலக்கிய வாழ்வுக்குள் எப்படிப் புகுத்தின?

ப: நான் ஒரு கணக்கப்பிள்ளை. கணிதத்தில் இன்பத்தைக் காண்பது அப்பொழுது என் பொழுதுபோக்கு. கணிதம், கலையில் திருப்பிவிட்டது.

சம்பளமின்றி நாடகத்தில் நடிக்கப் போனேன். வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்தால் சினிமாவில் புகுந்தேன். அங்கும் தமிழ்த்தாய் என்னைத் தடுத்தாட்கொண்டாள்.

‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' என்பதுபோல் நல்ல முதலாளிகளைத்தேடி அடைந்தேன். ஸ்ரீ வாஸன் அவர்களால் என் வாழ்க்கை வளம் பெற்றது. திரியிட்டு, நெய்யிட்டு, தீபத்தை ஏற்றித் தூண்டிவிட்டுக் காப்பதுபோல் என்னை அவர்கள் காப்பாற்றுகிறார்கள். ஏதேனும் பிரகாசம் இருந்தால், அது அவர்கள் செய்த உதவி. ஔவை ஒன்றே என் பரம்பரைக்குப் போதும். அதைவிடச் சிறந்ததை இனி நான் செய்ய முடியுமென்று கனவிலுங்கூடக் காண முடியாது. இறைவன் கருணை வடிவானவன். அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகின்றோம். அவன் வடிக்கின்றான்; நாம் பருகுகின்றோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்குவதுதான் நாம் செய்யக் கூடியது.

‘காந்தி மகான் கதை’, 'தில்லானா மோகனாம்பாள்’ ஆகியவற்றை நான் கனவிலும் கண்டதில்லை. நம்பினேன். நல்லவரைப் பாதுகாவலராகத் தந்தான். நல்ல வழியில் போகச் செய்தான். நல்ல பெயர் கிடைக்கச் செய்தான். இன்னும் இன்னும் அத்தனை நற்கருமங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். என் பிறவியைப் பயனுடையதாக ஆக்கவேண்டும் என்பதுதான் என் இடையறாத பிரார்த்தனை. நன்றியும் பிரார்த்தனையும் கலந்துதான் நான் வாழ்கின்றேன். அவன் கருணையை நினைக்க என் உள்ளம் நெகிழ்கின்றது: கண்ணீர் மல்குகின்றது; நா தழுதழுக்கின்றது. உணர்ச்சி வசப்படுகிறேன். ’என்னை நல்லவனாகவே வைத்திரு; எஞ்சிய நாட்களை உன் பணிக்கே எடுத்துக் கொள்' என்று இதய பூர்வமாய் வேண்டுகின்றேன். தமிழ்ப் பணியே அவன் அருள் பணியாகக் காண்கின்றேன். அதிலே இன்பம் அடைகின்றேன். பதினெட்டு மணி நேரம் எழுதுகிறேன். உடல் நைகின்றது. நான் எழுதும் காகிதத்தில் என் கண்ணீர் கொட்டுதலும், என் சிரிப்பு, வெற்றிலை எச்சிலைச் சிதறுவதும், நான் அனுபவிப்பதும்தான் முக்கியமான இன்பங்கள்.

#அலமாரி #கொத்தமங்கலம்_சுப்பு #தில்லானா_மோகனாம்பாள் #ஔவை #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

சூர்யா துப்பறிகிறார்:குவான்ட்டம் கணினியின் குழப்பம்!(பாகம்-10)கதிரவன் எழில்மன்னன்குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்...
10/06/2025

சூர்யா துப்பறிகிறார்:
குவான்ட்டம் கணினியின் குழப்பம்!
(பாகம்-10)
கதிரவன் எழில்மன்னன்

குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய், சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வமண் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைவு என்றும், கணினிக்குள்ளேயே ஊதா நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். மற்ற குவான்ட்டம் கணினி முயற்சிகளால் குவான்ட்டம் உயர்வு (quantum superiority) அளிக்க இயலவில்லை என்றும் முன்கூறிய அந்த இரண்டு அதிஉயர்வு நுட்பங்களோடு மேலும் பல சிறு சிறு முன்னேற்றங்களைச் சேர்த்ததால்தான் தங்கள் கணினி, சாதாரணக் கணினிகளை விடப் பன்மடங்கு குவான்ட்டம் உயர்வைத் தொடர்ந்து காட்டியதாகக் கூறினாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவனத்தின் நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

“எந்தப் பொருட்கள் திருடப்பட்டன. அவற்றின் முக்கியத்துவம் என்ன?” சூர்யா கேட்டார்:

மேரி விவரித்தாள், “திருடியவர்கள் மிகவும் நுட்பங்கள்மேல் குறிவைத்துத்தான் திருடியிருக்கிறார்கள். குவான்ட்டம் கலையலைக் குறைக்கப் புது மாதிரியான க்யூபிட்களை உருவாக்குவதற்கான அபூர்வமண் பொருட்கள் வைக்கப் பட்டிருந்த சிறு பெட்டிகள் சில, அப்படிப்பட்ட நூதன க்யூபிட்களைத் தயாரிப்பதற்கான சாதனம் ஒன்று, வயலெட் லேஸர் சாதனம் ஒன்று, அவற்றை உருவாக்கவும் பயன்படுத்தவும் வழிமுறை மென்கோப்புக்களைச் சேமித்திருந்த கணினி ஒன்று இவற்றைத்தான் திருடியிருந்தார்கள். வேறு எதையும் சேதம் செய்யவும் இல்லை, எடுத்துப் போகவும் இல்லை.”

https://tamilonline.com/thendral/article.aspx?aid=15698

#சூர்யா_துப்பறிகிறார் #குவான்ட்டம்_கணினி #கதிரவன்_எழில்மன்னன் #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

தென்றல், ஜூன் 2025 இதழ்:* எழுத்தாளர்: புதுவை சந்திரஹரி* சிறப்புக் கட்டுரை: பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்* அலமாரி:...
09/06/2025

தென்றல், ஜூன் 2025 இதழ்:

* எழுத்தாளர்: புதுவை சந்திரஹரி
* சிறப்புக் கட்டுரை: பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்
* அலமாரி: கொத்தமங்கலம் சுப்பு
* சிறுகதை: புரிதல் - மருங்கர்
* மேலோர் வாழ்வில்: ஜட்ஜ் சுவாமிகள்
* சூர்யா துப்பறிகிறார்: குவான்ட்டம் கணினியின் குழப்பம்! - கதிரவன் எழில்மன்னன்

Audio Readings | e-pub version; Kindle version - Digital Downloads | pdf download

தென்றல் இணைய தளத்தில் வாசிக்கலாம்/ ஒலி வடிவில் கேட்கலாம்.
http://www.tamilonline.com/mobile/index.aspx

https://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=1

#எழுத்தாளர் #புதுவை_சந்திரஹரி #வேலு_ஆசான் #கொத்தமங்கலம்_சுப்பு #மருங்கர் #ஓவியர்_மாயா #ஜட்ஜ்_சுவாமிகள் #தென்றல் #தமிழ்_ஆன்லைன்

http://www.tamilonline.com

Address

CA

Alerts

Be the first to know and let us send you an email when Thendral - தென்றல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share