Jaffnagate

Jaffnagate Convey true news to from all over the world and keep people updated with trending news.

பிள்ளைகளை இப்படி பழக்குங்க… இல்லனா பின்னாடி வருத்தப்படுவீங்க! ⚠️பிள்ளைகள் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் பெற்றோர் செய்த...
04/04/2026

பிள்ளைகளை இப்படி பழக்குங்க… இல்லனா பின்னாடி வருத்தப்படுவீங்க! ⚠️

பிள்ளைகள் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் பெற்றோர் செய்து கொடுத்தால், அவர்கள் எப்போதும் பிறரை சார்ந்தே வாழ கற்றுக்கொள்வார்கள்.

தன்னாலே சாப்பிடுவது, உடை அணிவது, புத்தகம் அடுக்குவது — இவை தான் குழந்தையின் தன்னம்பிக்கைக்கு முதல் படி.

குழந்தை சிரமப்பட்டால் உடனே ஓடி உதவாதீர்கள்.
“முயற்சி பண்ணு… உன்னால் முடியும்!” என்று சொல்லுங்கள். அந்த ஒரு வார்த்தை அவர்களுக்குள் இருக்கும் சக்தியை வெளியே கொண்டு வரும்.

சிறிய பொறுப்புகளை கொடுங்கள் —
பை தயார் செய்வது, விளையாட்டு பொருட்களை இடத்தில் வைப்பது, தண்ணீர் பாட்டில் நிரப்புவது போன்றவை.

தோல்வி அடைந்தால் திட்டாதீர்கள்.
“பரவாயில்லை… மறுபடியும் முயற்சி பண்ணலாம்” என்று ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களுக்கு மன உறுதியை தரும்.

மொபைல் கொடுத்து அமைதியாக வைத்திருக்காதீர்கள்.
அதற்குப் பதிலாக புத்தகம் படிக்க, விளையாட, புதிய விஷயங்கள் கற்க பழக்குங்கள்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…
பெற்றோர் செய்ய வேண்டியது
குழந்தைக்கு பதிலாக வேலை செய்வது அல்ல…
அதை செய்ய கற்றுக்கொடுப்பதுதான்!

பயனுள்ளதாக இருந்தால் மற்ற பெற்றோர்களுக்கும் பகிருங்கள். 🙏

#பெற்றோர்அறிவு #குழந்தைவளர்ப்பு #நல்லபழக்கம்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகா...
04/04/2026

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு , எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

புகையிரத சேவைக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் , பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும் , புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,.

03/24/2026

கோவிலுக்குச் செல்ல பாதசாரிக் கடவையில் கடந்த பெண்ணை மோதித்தள்ளிய அதிவேக மோட்டார் சைக்கிள்!

பெண் பரிதாபமாக ப*லி!!

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் .  பல்கலைக்கழக விரிவுரை...
03/22/2026

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது,

மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை.

கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர்.

பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார்.

இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது.

நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன்.

வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார்.

அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார்.

கொலை

அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார்

உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார்.

காரில் சடலத்துடன் தப்பியோட்டம்

பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர்.

அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார்.

தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு

அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர்

மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள்

அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார்.

அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி

வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாருக்கு மருமகன் கூறியுள்ளார்.

தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம்

அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு.

மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

கழுத்து நெரித்தே கொலை.

போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இறுதி கிரியைகள்

அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எலுமிச்சை – மிளகாய் தொங்கவிடும் அறிவியல் காரணம்நம் வீடுகளில் எலுமிச்சை, பச்சை மிளகாய் கட்டி தொங்கவிடுவது ஒரு பழக்கம். இத...
01/31/2026

எலுமிச்சை – மிளகாய் தொங்கவிடும் அறிவியல் காரணம்

நம் வீடுகளில் எலுமிச்சை, பச்சை மிளகாய் கட்டி தொங்கவிடுவது ஒரு பழக்கம். இது மூடநம்பிக்கை மட்டும் அல்ல; அறிவியல் காரணமும் உள்ளது.

• பச்சை மிளகாயில் உள்ள வாசனை ஈக்கள், கொசுக்கள் அருகே வராமல் தடுக்க உதவும்.

• எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை கிருமிகள் வளர்வதை குறைக்கும்.

• இந்த இரண்டின் சேர்க்கை வீட்டின் வாயிலில் இயற்கை பாதுகாப்பாக செயல்படும்.

• காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கவும் இது சிறிதளவு உதவுகிறது.

அதனால் தான் பழங்காலத்திலிருந்தே இந்த பழக்கம் தொடர்கிறது.
இது ஒரு எளிய, குறைந்த செலவு கொண்ட இயற்கை பாதுகாப்பு முறையாகும்.





#இயற்கைமுறை
#ஆரோக்கியவீடு
#பாரம்பரியஅறிவு
#வீட்டுஉதவிக்குறிப்புகள்

அண்மையில் நடந்த பாரிய விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய சித்திரா Chithira Kandasamy அவர்களின் உருக்கமான பகிர்வு!28...
01/31/2026

அண்மையில் நடந்த பாரிய விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய சித்திரா Chithira Kandasamy அவர்களின் உருக்கமான பகிர்வு!

28.01.2026 ஆம் திகதி யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ. போ. ச.பேருந்து கண்டி வீதி கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்துடன் பாரிய விபத்துக்குள்ளா கியது. இதில் நானும் பேருந்தில் சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமுள்ள முதலாவது இருக்கையில் பயணம் செய்தேன். பேருந்து சாரதியின் திறமையினாலும் கடவுளின் அனுக்கிரக்கத்தினாலும் உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை.
இரு வாகனங்களின் சாரதியும், இன்னொரு பயணியும் காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் எனக்கு சிறு காயம் மற்றும் உடலில் உட்காயம் ஏற்பட்டது. நான் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு சிரமப்பட்டேன். பலமாக அடிபட்டதால் மூச்செடுக்க சிரமப்பட்டேன். அதில் வேடிக்கை பார்த்தவர்கள் சிலரிடம் எனக்கு இயலாமை இருக்கு தலைசுற்றுகிறது சொல்லியும் அந்த நேரம் யாரும் உதவிசெய்யவில்லை. நான் மெதுவாக வீதியின் ஓரத்தில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்தேன். தண்ணீர் அருந்தி சில நிமிடத்தில் யாரும் என்னை வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லவில்லை. எல்லோரும் புகைப்படம், வீடியோ எடுப்பதில் அக்கறையாக நின்றார்கள்.
எனது அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்து அவர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு காயமடைந்த மூவரும் அனுமதிக்கப்படிருந்தனர். எமது உத்தியோகாத்தர்கள் மற்றும் அங்கிருந்த வைத்தியர்கள் தொடக்கம் சுகாதார சேவை சிற்றூழியர்கள் வரை எனக்கு பல வழிகளில் உதவி செய்தார்கள். அவர்களிற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி 🙏🙏🙏
மேலும் கூறுகின்றேன் வேடிக்கை பார்ப்பது, சமூக வலைத்தளத்தில் யார் முதலில் போடுவதை தவிர்த்து பாதிக்க பட்டவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள்.🙏
யார் மனதையும் நான் புண்படுத்துவதற்காக
இதனை பதிவிடவில்லை. அந்த நேரம் நான் பட்ட துயரம் சொல்லமுடியவில்லை. 🙏
மீண்டும் பேருந்து சாரதிக்கும் கடவுளுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

வியாபாரத்தில் ஈடுபடும் சகலருக்குமான முக்கிய அறிவித்தல்*காசோலை தொடர்பான புதிய சட்டம்*மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு- சட்ட...
01/26/2026

வியாபாரத்தில் ஈடுபடும் சகலருக்குமான முக்கிய அறிவித்தல்

*காசோலை தொடர்பான புதிய சட்டம்*

மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு
- சட்டத்தரணி சுல்தான் ஜென்சீர் BA, LLB, MSc psychology, Attorney-at-Law

இலங்கையின் நிதி மற்றும் வணிக பரிவர்த்தனைகளில் காசோலைகள் (Cheques) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், போதிய பணமின்றி காசோலை வழங்குதல், தெரிந்தே திரும்பும் காசோலைகளை வழங்குதல் போன்ற செயல்கள் வணிக நம்பிக்கையை பாதித்து வந்தன.

இவ்வகை மோசடிகளைத் தடுக்கவும், நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்தவும், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்றளிக்கப்பட்ட 2025 இன் 13 ஆம் இலக்க மாற்றுண்டியல் (திருத்தச்) சட்டம் (Bills of Exchange (Amendment) Act, No. 13 of 2025) மூலம் இலங்கையின் காசோலைச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், வங்கியால் பணம் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் காசோலைகள் (Cheque Bounce) இனி ஒரு சாதாரண சிவில் பிரச்சினையாக அல்லாமல், குற்றவியல் குற்றமாக (Criminal Offence) கருதப்படுகின்றன. இதன் மூலம், காசோலை வழங்கும் நபரின் சட்டப் பொறுப்பு மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

*குற்றமாக கருதப்படும் சந்தர்ப்பங்கள்:*

2025 சட்டத் திருத்தத்தின் படி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக ஒரு காசோலை வங்கியால் நிராகரிக்கப்பட்டால், அது குற்றவியல் குற்றமாகும்.

1. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமை,
2. அனுமதிக்கப்பட்ட overdraft எல்லையை மீறுதல்,
3. கணக்கு மூடப்பட்ட நிலையில் காசோலை வழங்குதல்,

4. முறையான சட்டப்பூர்வ காரணமின்றி “Stop Payment” உத்தரவு வழங்குதல்

ஆகியவை அனைத்தும் இப்போது குற்றங்களாகக் கருதப்படுகின்றன.



*தண்டனைகள்:*

இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், அவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

1. காசோலையில் குறிப்பிடப்பட்ட முழுத் தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படலாம்.
2. அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

அபராதமும் சிறைத்தண்டனையும் இரண்டும் சேர்த்தும் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது காசோலை வழங்கும் நபர் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

*சட்ட நடவடிக்கை எடுக்கும் முறை மற்றும் காலக்கெடு*:

பாதிக்கப்பட்ட நபர் (பணம் பெற வேண்டியவர்) இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுகளை பின்பற்ற வேண்டும்.

அறிவித்தல்:
காசோலை திரும்பி வந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை அறிவித்தல் (Notice) அனுப்பப்பட வேண்டும்.

அவகாசம்:
அந்த அறிவித்தல் கிடைத்த நாளிலிருந்து மேலும் 90 நாட்கள் பணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த காலக்கெடு முடிந்தும் பணம் செலுத்தப்படாவிட்டால், அதன் பின்னர் 30 நாட்களுக்குள் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.

*இலகுவான சாட்சிய முறை:*

இச்சட்டத்தின் (Section 82D) கீழ், நீதிமன்றத்தில் ஒரு காசோலை வழக்கை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய சான்றுகள்:

1. வங்கித் தகவல் குறிப்பு (Bank Return Memo): காசோலை ஏன் திருப்பி அனுப்பப்பட்டது (பணம் போதாமை, கணக்கு மூடப்பட்டமை போன்றவை) என்பதைக் காட்டும் வங்கியின் உத்தியோகபூர்வ குறிப்பு.

2. வைப்புச் சீட்டு (Deposit Slip): நீங்கள் காசோலையை வங்கியில் வைப்புச் செய்ததற்கான அத்தாட்சி.

3. காசோலை (Original Cheque): வங்கியினால் நிராகரிக்கப்பட்ட அசல் காசோலை.

*சட்டப்பூர்வ ஊகம் (Presumption of Liability)*:

புதிய சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் இதுவாகும்.
காசோலையை வழங்கியவர், ஒரு சட்டப்பூர்வமான கடனை அடைப்பதற்காகவே அதை வழங்கினார் என நீதிமன்றம் தானாகவே முன்முடிவு (Presumption) செய்யும்.
அதாவது, "நான் இவருக்கு பணம் தர வேண்டியதில்லை" என்பதை காசோலை வழங்கியவரே நிரூபிக்க வேண்டும். பணம் பெற வேண்டியவர் கடனைப் பற்றி நீண்ட விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

*அறிவித்தல் அனுப்பியதற்கான சான்று (Proof of Notice)*
வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், நீங்கள் 90 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு அறிவித்தல் அனுப்பியதை நிரூபிக்க வேண்டும்.
பதிவுத் தபால் பற்றுச்சீட்டை (Registered Post Receipt) அனுப்பப்பட்டதற்கான அத்தாட்சியாக காட்டலாம்.

மின்முறை சான்றுகள் (Digital Evidence): புதிய நடைமுறைகளின்படி, வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்பட்ட அறிவித்தல்கள் "வாசிக்கப்பட்டது" (Blue Tick/Read Receipt) என உறுதிப்படுத்தப்பட்டால், அதையும் சில நிபந்தனைகளின் கீழ் சான்றாகப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

*நீங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத்தக்க 'ஆவணத் தொகுப்பு'*:

உங்கள் வழக்கின் வெற்றியை உறுதிப்படுத்த பின்வருவனவற்றைத் தயாராக வைத்திருப்பது அவசியம்:

1. அசல் காசோலை.
2. வங்கியின் காசோலை திரும்புதல் குறிப்பு (Return Memo).
3. 90 நாட்களுக்குள் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தின் பிரதி (Letter of Demand).
4. அக்கடிதம் சென்றடைந்ததற்கான அத்தாட்சி (Registered Post Acknowledgement).

முக்கிய குறிப்பு: புதிய சட்டத்தின் கீழ், இந்த ஆவணங்கள் இருந்தாலே குற்றம் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரம் (Prima facie case) உறுதியாகிவிடும். இதனால் காசோலை வழங்கியவர் வழக்கை இழுத்தடிக்க முடியாது.

*இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம்*:
வணிக உலகில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும், நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதும் ஆகும். காசோலை வழங்குவது ஒரு சாதாரண கையெழுத்து அல்ல; அது ஒரு சட்டபூர்வ வாக்குறுதி என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம், மோசடி நடவடிக்கைகள் குறையும் என்றும், நேர்மையான வணிக நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*முடிவாக, 2025 காசோலை சட்டம் இலங்கையின் நிதி மற்றும் சட்ட அமைப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.* காசோலை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த சட்டத்தை நன்கு அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, “பணம் இருக்கும்போது மட்டுமே காசோலை” என்பதே இன்றைய காலத்தின் சட்டப் பாடமாகும்.

சட்டத்தரணி சுல்தான் ஜென்சீர்.
Kindly share this to your network.

870 கிலோ 'சட்டவிரோத' சுறா மீன்கள் மீட்பு: 7 மீனவர்கள் கைது!வென்னப்புவ, வெல்லமன்கரை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்ப...
01/24/2026

870 கிலோ 'சட்டவிரோத' சுறா மீன்கள் மீட்பு: 7 மீனவர்கள் கைது!

வென்னப்புவ, வெல்லமன்கரை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 870 கிலோவிற்கும் அதிக எடையுள்ள சுறா மீன்களுடன் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 23ஆம் திகதி இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 876.2 கிலோ கிராம் 'அலோபியாஸ் வல்பினஸ்' (Alopias vulpinus) வகை சுறா மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது மற்றும் ஒப்படைப்பு: கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டத் தடை: சுறா இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இலங்கையின் மீன்பிடி ஒழுங்கு விதிகளின் கீழ் குறிப்பிட்ட சில சுறா இனங்களைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Charith Asalanka won the toss and elected to bat first! 🪙🏏
01/24/2026

Charith Asalanka won the toss and elected to bat first! 🪙🏏

30 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இயங்கி வந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது.நேற்றிரவு இராணுவத்தினர் அங்கிருந்து வெளிய...
01/24/2026

30 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இயங்கி வந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது.

நேற்றிரவு இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

Address

West

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnagate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffnagate:

Share

Category