மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

  • Home
  • India
  • Gobi
  • மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu We are proud to revive our tradition, culture from the past centuries with respect to nature. மாண்புடன் மரபு மீள்-வாழ்வு முனைவோம் அறக்கட்டளை

ஏறத்தாழ 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் இருந்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திற்கு அ...
21/08/2025

ஏறத்தாழ 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் இருந்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திற்கு அன்றாடம் வந்து செல்கின்ற இந்த மைசூர் பேருந்தில் Mysore Biscuit "மைசூர் பிஸ்கட்" பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு வருவார்கள்.

ஈரோடு-மைசூர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று 20 ரூபாய் நோட்டைக் காட்டி கையசைத்தோமென்றால், பேருந்தை நிறுத்தி பணத்தைப் பெற்றுக்கொண்டு மைசூர் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுப்பார்களாம்.

பாருங்கள் இது போன்ற நிகழ்வுகள் கதைகளாகக் கூட எங்குமே பதிவு செய்யப்படாமல் அப்படியே மறைந்து விடுகிறது.

சத்தியமங்கலம், அரசூர், கோபிச்செட்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால் தற்போது இது நின்றுவிட்டது.

கூட்டங்கூட்டமாக கலப்பின மாடுகளை கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு எங்கு கொண்டு செல்கிறார்கள். எதற்காக?இட...
21/08/2025

கூட்டங்கூட்டமாக கலப்பின மாடுகளை கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு எங்கு கொண்டு செல்கிறார்கள். எதற்காக?

இடம் : கோபிச்செட்டிப்பாளையம்

பச்சைப் பசேலென  பழையகரை தடப்பள்ளி -அரக்கண்கோட்டை  வாய்க்கால் பாசனம் பெற்று பவானி ஆற்றின் கரையிலும் கிழக்குத் தொடர்ச்சி ம...
05/08/2025

பச்சைப் பசேலென பழையகரை தடப்பள்ளி -அரக்கண்கோட்டை வாய்க்கால் பாசனம் பெற்று பவானி ஆற்றின் கரையிலும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் அமைந்துள்ள பாக்கியம் பெற்ற தளம்.

கோபி + ச் + செட்டிபாளையம் என்றே அழைக்கப்படுகிறது.
'ச்' தவறாது இடம் பெறவேண்டும்.
தமிழ் இலக்கண மரபும் இதையே சொல்கிறது‌. உணர்வுப்பூர்வமாகவும் அப்படியே நிகழ்கிறது.

மலை மாடுகளின் கழுத்தில் பாரம்பரியச் சின்னமாக அடையாளமாக கட்டப்பட்டு வந்தது. இதன் மூலம் மாட்டுப்பட்டி எந்த இடத்தில் மேய்ந்...
03/08/2025

மலை மாடுகளின் கழுத்தில் பாரம்பரியச் சின்னமாக அடையாளமாக கட்டப்பட்டு வந்தது. இதன் மூலம் மாட்டுப்பட்டி எந்த இடத்தில் மேய்ந்துகொண்டிருக்கிறது என்பதை மணியின் ஓசையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது இதுவும் வழக்கொழிந்து விட்டது என்பது வருத்தமாகவுள்ளது.

உழவாரன் (Swift) குருவியின் கூடு மண் வைத்துக் கட்டும் மரபுப் பொறியாளர்கள் இவர்கள்.
02/08/2025

உழவாரன் (Swift) குருவியின் கூடு

மண் வைத்துக் கட்டும் மரபுப் பொறியாளர்கள் இவர்கள்.

செம்மறை மலை மாட்டினமானது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையினைப் பூர்வீகமாகக் கொண்ட நம் நாட்டு மாடாகும்.  மறை என்பது...
28/07/2025

செம்மறை மலை மாட்டினமானது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையினைப் பூர்வீகமாகக் கொண்ட நம் நாட்டு மாடாகும்.

மறை என்பது உடல் முழுவதும் செம்மை போர்த்திய தோல் மீது ஆங்காங்கே வெண்புள்ளிகளை ஏற்றிருக்கும் வடிவமைப்பாகும். செம்மை நிறம் செறிவாக இருக்கும் மாடுகள் தான் நல்ல தரமான மாடுகளாக பட்டிக்காரர்களால் சொல்லப்படுகிறது.

செம்மை நிறைந்த வடிவமைப்புக் கொண்ட வீரியமான காளைகளைத் தான் இனச்சேர்க்கைக்கான #கூலிக்காளைகளாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அடுத்த இனத்தை இதன் விந்தில் இருந்து உச்சபட்ச தரத்தில் உருவாக்குகிறார்கள்.

முந்தைய காலங்களில் அரசாங்கத்தால் நுழைவு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வனத்தில் உள்ள பாங்காட்டுக்குள் பட்டி அமைத்து அந்தப் பட்டியிலேயே மாதக்கணக்கில் தங்கியிருந்து மாடுகளை மேய்த்துவந்தனர். தற்போது வனத்தில் பட்டி போட அனுமதி இல்லை.

அவ்வாறு வனத்திற்குள் பட்டி அமைத்தால் அங்கு சேகாரமாகிற சாணத்தை வனத்துறை ஏலத்தில் விட்டுவிடுமாம். வனம் தந்த மேய்ச்சலுக்காக சாணத்தை வனத்தாய்க்கு உரமாகச் செழித்திட வழங்குகிறோம் என்பதே இயற்கை எதார்த்தம்.

இன்னுமொன்று பர்கூர் என்றால் மலை மாடுகள் என்று மட்டுமே மற்ற இடங்களிலும் தரவுகளிலும் பெரும்பாலும் குறிக்கப்படுகிறது. ஆனால் பர்கூரில் நாட்டு 🐃 எருமைகளும் பட்டி முறையில் வளர்க்கப்படுகிறது. எண்ணிக்கையளவில் எருமைப்பட்டிகளை விடவும் மாட்டுப்பட்டிகளே அதிகம்.

எருமைப்பட்டியும் மாட்டுப்பட்டியும் தனித்தனியாகவே அமைத்துப் பராமரிக்கிறார்கள். பெரும்பாலும் மாட்டுப்பட்டி வைத்திருக்கின்ற மக்கள் எருமைப்பட்டி வைத்திருப்பதில்லை.
எருமைப்பட்டி வைத்திருக்கும் மக்கள் மாட்டுப்பட்டி வைத்திருப்பதில்லை.

செம்மறை பட்டி மாடுகளை வளர்க்கின்றவர்கள் பெரும்பான்மையானோர் லிங்காயத்து இன மக்களாகத்தான் உள்ளனர். லிங்காயத்து இனக்குழுவினர் சைவ சமயத்தைத் தழுவியவர்கள். பல்வேறு சாதிய இனக்குழுக்களில் இருந்து ஒடுக்குமுறை காரணமாக வெளியேறுபவர்கள் லிங்காயத்து என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றாக இணைத்து அனைவரும் சமமாக வாழவழிவகுக்கிறது.

லிங்காயத்து இனக்குழுவானது மைசூர் அரசரால் நெறிப்படுத்தி நிறுவப்பட்டதாகும். இவர்கள் இறைச்சி உண்பதில்லை.
ஆண்கள் லிங்கத்தை கழுத்தில் அணிந்திருக்கின்றனர். லிங்காயத்து ஆண்கள் கழுத்தில் அணிந்திருக்கிற லிங்கத்தை வெளியாட்கள் வெளிப்படையாக பார்க்காமல் இருப்பதற்காக ஒரு மூடி போன்ற கவசத்தினுள் லிங்கத்தை வைத்து அணிந்து கொள்கின்றனர்.

செம்மறை என்பது புவியியல் அமைப்பு ரீதியாக இந்த பர்கூர் மலைப்பகுதியில் வளர்கிற மாடுகளுக்கே உரித்தான நிறமாக உள்ளது. இந்த பர்கூர் மாடுகளே மேய்ச்சல் இல்லாத காலங்களில் கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள மலைகளுக்கு மேய்ச்சலுக்குச் செல்கின்றனர். அவ்வாறு அங்கு சென்று பல மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பதால் அந்தப் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறு செம்மறையில் அதாவது இன்னும் குறிப்பாகச் சொன்னால் மறையின் செம்மை நிறத்தின் அடர்த்தி குறைகிறதென்கிறார்கள் மலை மக்கள்.

செம்மறை மாட்டுப்பட்டி சொந்த மலைநாடான பர்கூர் மலைக்குத் திரும்பி சில மாதங்கள் மேய்ச்சலுக்குப் பின்னரே மீண்டும் தன் பழைய நிறத்திற்குத் திரும்புகிறது என்கிறார்கள் உடன் வாழ்பவர்கள்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பர்கூர் மலையில் இருந்து கிழக்கு நோக்கி சில மையில்கள் பயணித்தால் கடைசி மலையில் உள்ளது தான் மடம். இந்த மடத்தின் மடலாதிபதி லிங்காயத்து இனத்தைப் பின்பற்றுகிறார்கள். மடப்பள்ளியில் எப்பொழுது சென்றாலும் குறைந்தபட்சம் ஐந்தாறு பேருக்கு உணவு எப்பொழுதும் தயாராக இருக்கும் அந்நியர் யார் வந்தாலும் எவரும் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கத்தைப் பின்பற்றிவருகின்றனர்.

மடத்தில் இரவு உணவு உண்ட்டுவிட்டுத் தான் செல்லவேண்டும் என்று எங்களின் மடாதிபதி எங்களிடம் கூறினார். நாங்கள் சென்றது பொழுது இறங்கிய இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அனைவருக்கும் முன்பாக இங்க #களி (கேழ்வரகுக்களி பேச்சுவழக்கில் ராய்க்களி / கேப்பக்களி) கிடைக்குங்களா என்று மடாதிபதியிடம் கேட்டேன். அவர் உடனே சாப்பிடுகிறீர்ளா என்றார். ஆமாங்க என்றேன். உடனடியாக களி செய்யும் படி மடத்தின் முதுமூத்த ஆண் சமையற்கலைஞரிடன் கூறினார். அவரும் எங்களுக்காகவே களி கிளறினார். கிளறி சுடச்சுட வெறும் கையில் மடத்தால் செய்த தட்டில் வைத்து ஒவ்வொரு உருண்டையாகப் பிடித்தார்.

களி உருண்டையை சுடச்சுட பரிமாறி அதற்கு தேங்காய்ச்சட்டினியுடன் பர்கூர் மலைப்பகுதியில் வளர்கிற மலை எருமையின் தயிரில் இருந்து எடுத்த நெய்யை ஊற்றினர். அதைத் தொட்டுச் சாப்பிட்டால் அதன் ருசியை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சுவைத்ததே இல்லை.‌ பலரும் இதையே ஆமோதித்தனர்.

மேய்ச்சலியம் மற்றும் மேய்ச்சல் கால்நடைகள் மற்றும் மரபு, மலை , இயற்கை பற்றிய புரிதல் பெறும் பொருட்டு நாங்கள் குழுவாக இணைந்து மலைநாட்டு பட்டிக்காரர்களுடன்‌ நேரடி கள அனுபவமும் வாழ்வியல் புரிதலும் பெற்றோம்.

இந்நிகழ்வு முழுவதும் எங்களுக்கு இயற்கை பற்றியும் மலை மக்களின் வாழ்வியல் பற்றியும் பர்கூர் இன மாடுகள் , பர்கூர் நாட்டு எருமைகள் பற்றியும் ஏராளமான அனுபவக் கூற்றுக்களை வழங்கிய மதிப்புமிகு சிவசேனாபதி நடராஜன் அண்ணா அவர்களுக்கு எங்கள் அனைவரின் உள்ளங்கனிந்த பெருநன்றி.

Sivasenapathy Natarajan
Rajiv Gandhi Chitthiraivel

ராய்க்களி கிளறும் பாரம்பரிய முறையில் லிங்காயத்து இன மலைவாழ் மாந்தர்
27/07/2025

ராய்க்களி கிளறும் பாரம்பரிய முறையில் லிங்காயத்து இன மலைவாழ் மாந்தர்

ராய்க்களி உருண்டையாக்கப் பயன்படும் கைப்பிடியுடன் கூடிய மரத்தட்டு
27/07/2025

ராய்க்களி உருண்டையாக்கப் பயன்படும் கைப்பிடியுடன் கூடிய மரத்தட்டு

இந்திய பொதுவுடமைக் கட்சிக்காரர் என்று சொல்வதை விடவும் இவர் கம்யூனிஸ்ட் என்று சொல்வதையே பாலரும் விரும்புவர். கிழக்குத் தொ...
27/07/2025

இந்திய பொதுவுடமைக் கட்சிக்காரர் என்று சொல்வதை விடவும் இவர் கம்யூனிஸ்ட் என்று சொல்வதையே பாலரும் விரும்புவர்.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஓர் மலைக்கிராமமான தேவர் மலையில் தற்சார்பு முறையில் கையில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையைக் காணும்போது இம்மக்களின் மேம்பாட்டிற்கு இன்றியமையாத பங்கை பொதுவுடைமை இயக்கங்கள் செய்திருக்கின்றன என்பதை அறிந்து உள்ளம் மகிழ்ந்து நிறைகிறது.

மலைவாழ் பழங்குடி மக்கள் தயிர்கிடைய பயன்படுத்தும் மூங்கில் மத்து
20/07/2025

மலைவாழ் பழங்குடி மக்கள் தயிர்கிடைய பயன்படுத்தும் மூங்கில் மத்து

06/07/2025

செம்மறை பட்டிமலைமாடுகள்

புலிக்குத்தி வீர மங்கையின் நடுகற்கள் வழிபாட்டு தெய்வங்களாய் கிழக்குத் தொடர்ச்சி மலையில் நிறைய உள்ளன.
06/07/2025

புலிக்குத்தி வீர மங்கையின் நடுகற்கள் வழிபாட்டு தெய்வங்களாய் கிழக்குத் தொடர்ச்சி மலையில் நிறைய உள்ளன.

Address

Gobi

Telephone

+918012397272

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu:

Share