13/08/2026
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் YMCA சர்ச் பகுதியில் இளநீர் விற்கும் இந்த முதியவர், 30₹, 40₹, 50₹, 60₹, 80₹ என வகை வகையாக பிரித்து இளநீர் விற்பனை செய்கின்றார். ஒருவர் 60 ரூபாய் இளநீர் கேட்டார், தண்ணீர் அதிகம் இருக்க வேண்டும் என்றார், இவரும் ஒரு இளநீர் வெட்டித்தர , அந்த வாடிகையாளர் தான் நினைத்த அளவு தண்ணீர் இல்லை என்று கேள்வி கேட்டார், சற்றே டென்ஷ்ன் ஆன இளநீர் தாத்தா.., சரி 50 ரூபாய் மட்டும் குடுங்க என்று அடுத்த வேளையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். சென்னையில் 70 ரூபய்க்கு கீழ் இளநீரே விற்பதில்லை, ஆனால் இந்த முதியவரிடம் இப்படியும் கேட்க எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் முதியவருக்கு தெரியும் இவர்களிடம் பேசி நம் நேரத்தை வீனடிக்க வேண்டாம் என்று நினைத்திருப்பார்.